For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி செவ்வாயில் ஔவையார் விரதம் - பிரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் அபிஷேகம்

கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் ஆடி செவ்வாய்கிழமை ஔவையார் விரதத்தினை கடைபிடிக்கின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமண தடை நீங்கவும், திருமணம் ஆனவர்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தினை கடைபிடிக்கின்றனர்.

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. 'ஆடி செவ்வாய் தேடிக் குளி - அரைத்த மஞ்சள் பூசி குளி" என்பது பழமொழி. நாளை ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு நாளை வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 23.07.2019 காலை 10.00 மணிக்கு 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் செய்து பிரதிஷ்டை ஆகியுள்ள அதர்வண பத்ரகாளி யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் அபிஷேகம் துவங்குகிறது.

Aadi Chevvai – Importance of Aadi Tuesday Ovvai Nonbu

ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.

செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் துர்கை மற்றும் முருகபெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும் குழந்தை பாகியமும் கிடைக்கும். ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது.

ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனயும் முருகனையும் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்

ஆடிச் செவ்வாயன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் மங்கலம் தங்கும் என்பது மரபு.

ஆடி செவ்வாயில் ஔவையார் நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். தமிழத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஔவையார் அம்மன் கோவிலில் திருமண தடை தோஷம் நீங்கவும் குழந்தை பேரு கிடைக்கவும் விதவிதமான கொழுக்கடைகளை படைத்து வழிபடுவது வழக்கம்.

நாளை ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு நாளை 23.07.2019 காலை 10.00 மணிக்கு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் செய்து பிரதிஷ்டை ஆகியுள்ள அதர்வண பத்ரகாளி யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் அபிஷேகம் துவங்குகிறது. இந்த அபிஷேகமானது வருகிற 30.07.2019 ஆடி செவ்வாய்கிழமை வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற 31.07.2019 புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 1000 கிலோ மிளகாய் வற்றலை கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.

English summary
Aadi Chevvai are the Tuesdays in the Tamil month of Aadi. Though this month is considered inauspicious of certain things like marriages etc, still Usually during Fridays and Tuesdays in the month of Aadi. There is a special fasting they call it as “Ovvai Nonbu“. Kozhukattai made with rice flour and jaggery is a Prasad prepared for this nonbu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X