For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி செவ்வாய் தேடிக்குளி... அரைத்த மஞ்சளை பூசிக்குளி - வீட்ல லட்சுமி கடாட்சம் வரும்

ஆடிச் செவ்வாயன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் மங்களம் தங்கும், வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆடி செவ்வாய் தேடிக்குளி... அரைத்த மஞ்சளை பூசிக்குளி' இது என்ன பழமொழின்னு யோசிக்கிறீங்களா? இப்போ யாருங்க எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறாங்க. தீபாவளிக்கு தீபாவளி எண்ணெய் தேய்த்து குளிப்பதோடு சரி என்று சொல்கிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான். உங்களுடைய வீட்டில் வறுமை நீங்கவும், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கவும் இன்று ஆடி செவ்வாய்கிழமை பெண்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிங்க. மஞ்சளும் பூசி குளிங்க அதனாலதான் 'ஆடி செவ்வாய் தேடிக்குளி...அரைத்த மஞ்சளை பூசிக்குளி'ன்னு நம்ம பெரியவங்க பழமொழி சொல்லி வச்சிருக்காங்க.

பொதுவாகவே செவ்வாய்கிழமை மங்களகரமான நாள். அதுவும் ஆடி செவ்வாய் அற்புதமான நாள். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்கு விரதம் இருக்க வேண்டிய நாள். இந்த நாளில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள் நீங்கும்.

Aadi Chevvai viratham importance and benefits

செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் துர்கை மற்றும் முருகபெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணப் பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனையும் முருகனையும் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்

கொரோனா காலத்திலும் ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கொடுக்கிறோம் - தமிழக அரசு ஹைகோர்ட்டில் தகவல் கொரோனா காலத்திலும் ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கொடுக்கிறோம் - தமிழக அரசு ஹைகோர்ட்டில் தகவல்

ஆடி செவ்வாயில் ஔவையார் நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். தமிழகத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஔவையார் அம்மன் கோவிலில் திருமண தடை தோஷம் நீங்கவும் குழந்தை பேறு கிடைக்கவும் விதவிதமான கொழுக்கட்டைகளை படைத்து வழிபடுவது வழக்கம். இன்று ஆடி செவ்வாய் எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வணங்குங்க... வீட்ல நிறைய நல்ல விசயங்கள் நடக்கும் வருமானம் பெருகும். லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

English summary
aadi month Chevvai viratham is best for woman remove mangalya dhosam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X