• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஆடிக்கிருத்திகை நாளில் முருகனை மனதார வேண்டினால் உயர்பதவி தேடி வரும் - வீடு கட்டும் யோகம் கிடைக்கும்

Google Oneindia Tamil News

சென்னை: சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காத்த ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தமிழ் மாதங்களில் மூன்று கிருத்திகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தை கிருத்திகை விசேஷம். அதேபோல், கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்தது. இதேபோல, ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

சிவபெருமானின் அருளால் ஆடி கிருத்திகை தினத்தில் சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அந்தக் குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். கார்த்திகைப் பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் கார்த்திகை நட்சத்திரமாக மாறினார்கள். முருகக் கடவுளை ஆராதித்தவர்களுக்கு நட்சத்திரப் பட்டம் கிடைத்தது. அதுமட்டுமின்றி, கிருத்திகை நட்சத்திர நாளில், முருகப் பெருமானை வழிபடும் வழக்கமும் ஏற்பட்டது என விவரிக்கின்றன.

ஆடிக்கிருத்திகை : தமிழ்கடவுன் முருகப் பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளின் சிறப்புகள்ஆடிக்கிருத்திகை : தமிழ்கடவுன் முருகப் பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளின் சிறப்புகள்

மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை. பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது. சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள். ஆறுமுகப்பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

தமிழ் கடவுள் முருகன்

தமிழ் கடவுள் முருகன்

அப்பன் சிவனாரின் மந்திரம் ஐந்தெழுந்து நமசிவாயம் எனில், மால் மருகனின் மந்திரம் ஆறெழுத்து சரவணபவ. ஆறுமுகத்துடன் ஆறிரு கரங்கள் என்றும் காட்சி தருகிறான் வடிவேலன் முருகன். முருகக் கடவுளுக்கு ஆறு எண் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆறுமுகங்களைக் கொண்டிருக்கிறான் தமிழ் கடவுள் முருகப்பெருமான்.

முருகனுக்கு அபிஷேகம்

முருகனுக்கு அபிஷேகம்

ஆடிக்கிருத்திகை நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், என கொண்டாட்டமாக உற்சவங்கள் நடைபெறும். முருகன் ஆலயங்களில் எல்லாம் கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் விண்ணை எட்டும். காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்கள். கொரோனா காலமாக இருப்பதால் இந்த ஆண்டு ஆலயங்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும் அழகன் முருகனை மனதார நினைத்து வேண்டினாலே வேண்டிய வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆறுமுகக் கடவுள்

ஆறுமுகக் கடவுள்

ஆடி கிருத்திகை அற்புதமான நாள் இந்த உன்னதமான நாளில் முருக வழிபாடு செய்தால், நம்மை அச்சுறுத்தும் சக்திகளையும் எதிரிகளையும் அழிப்பார் ஆறுமுகக் கடவுள். ஆடிக்கிருத்திகை விரதம் மேற்கொண்டு கந்த சஷ்டி கவசம் படித்தால் உயர்ந்த பதவிகள் தேடி வரும் என்பது ஐதீகம்.

தவத்திற்கு கிடைத்த வரம்

தவத்திற்கு கிடைத்த வரம்

நாரத முனிவர் ஆடிக்கிருத்திகை நாளில், நாரத முனிவர் விரதத்தைத் தொடங்கி, தொடர்ந்து 12 வருடங்கள் கடைப்பிடித்தார். கந்தனை நினைத்துத் தவமிருந்தார் நாரதமுனிவர். இதனால் முருகப் பெருமானின் அருளையும் அவரிடம் இருந்து வரத்தையும் பெற்றதன் பலனாக, முனிவர்களில் முதன்மையானவர் என்றும் நாரத மாமுனி என்றும் உயர்ந்த நிலையைப் பெற்றார் என்கிறது புராணம்.

வீட்டில் விரதம்

வீட்டில் விரதம்

தமிழகத்தில், பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணி, வடபழநி, திருச்செந்தூர் முதலான முருகப்பெருமான் குடிகொண்ட கோயில்கள் அனைத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும். இந்த முறை ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க இயலாத நிலை இருப்பதால் நம்முடைய வீட்டில் இருந்ததே ஆத்மார்த்தமாக அழகன் முருகனை வேண்டிக்கொள்வோம்.

சந்தோஷம் அதிகரிக்கும்

சந்தோஷம் அதிகரிக்கும்

ஆடிக்கார்த்திகை நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகனின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் யாவும் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆடிக் கிருத்திகை நாளில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்க நம்முடைய வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

சக்தி தரும் வேலவன்

சக்தி தரும் வேலவன்

ஆடிக்கிருத்திகை நாளில் முருகப்பெருமானை வணங்கினால் சூரனை சம்ஹாரம் செய்த வீரம் நிறைந்த முருகப் பெருமான், உங்கள் வாழ்வில் தடைகளை நீக்கி உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றுவார். மேலும் எதிரிகளை வெல்லும் சக்தியைக் கொடுப்பார். முருகனை வழிபட்டால் பூமி சம்பந்தமான தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சகல நன்மைகள் கிடைக்கும்

சகல நன்மைகள் கிடைக்கும்

ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சினைகள், நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்.

English summary
Aadi Kritika fasting day is observed in honor of the women of Karthika who raised the six-faced Lord who guarded the gods by slaying Surana. Although the Krithika star comes every month, three Krithikas are important in the Tamil months. Similarly, the Krithika star coming in the month of Karthika is also special. Similarly, the coming month of Aadi is celebrated as glorious.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X