• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடிப்பெருக்கு நாளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் - நன்மை தரும் பவானி ஹோமம்

|

வேலூர்: வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு 03.08.2018 ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை உலக நலன் கருதியும், காரிய சித்தியும், பாப விமோசனமும் தரக்கூடியதும், வாக்கு, மனம், செயல் இவறால் செய்த பாபங்கள் போகவும் பாபம் போக்கும் பவானி ஹோமம், சூக்த ஹோமங்கள், ஆடி கூழ் வார்த்தல், முனீஸ்வரன் மற்றும் நவகன்னிகைகளுக்கு பொங்கல் இடும் வைபவங்கள், நடைபெறுகிறது

உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும் ஆடி மாதம் 18ம் தேதி 03.08.2018 மூன்றாவது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு குடும்ப க்ஷேமத்திற்காக காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைகளுக்கும் 13ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழா நடைபெற உள்ளது.

ஆடி பெருக்கு முன்னிட்டு சூக்த ஹோமங்களும், நவ கன்னிகைகளுக்கும், முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் தன்வந்திரி குடும்பத்தினர்களால் நடைபெற உள்ளது.

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ஜுனரின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.

அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகா தேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மனின் அருளை பெற்று நவகன்னியரின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுகொள்கின்றனர்.

பவானி தேவிக்கு செய்யும் ஹோமம் மற்றும் வழிபாடு காட்டிலும் மிகவும் உயர்ந்த பலனை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இவளை தரிசிப்பவர்களுக்கு 'யாதொரு தீங்கும் நெருங்காது. பாபங்கள், சாபங்கள் நீங்கும். மேலும் குபேர யோகம் கிட்டும்; சகல செல்வங்களும் கிடைத்து சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.வழிபட்டு, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சகல யோகங்களும் கைகூடும். பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தியான பவானி தேவியின் ஹோமத்தில் பங்கு பெற்று பில்லி, சூன்னியம், செய்வினை, ஏவல், போன்ற பலவிதமான தோஷங்களில் இருந்து விடுதலை பெற்று ஆரோக்யமாக வாழ ஸ்ரீ பவானி அன்னையை வணங்குவோம்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்கலாம். ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு ஆரோக்ய லட்சுமி தாயார், மரகதாம்பிகை, அன்னபூரணிதேவி, குபேர லக்ஷ்மி மற்றும் இதர தெய்வங்களை தரிசித்து மாங்கல்ய தோஷங்கள் நீங்கி வீடு மனை மக்களுடன் வாழலாம் என தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Founder Peedathipathi of Sri Danvantri Arogya Peedam, “Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal, we are conducting Sri Bhavani homam on the occasion of Aadi Perukku 3rd Friday Festival 03.08.2018 at our Sri Danvantri Arogya Peedam by 10.00 AM.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more