For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிப்பெருக்கு: காவிரி தங்கைக்கு சீர் கொடுக்கும் ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள்

ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளன்று பாய்ந்தோடும் காவிரியை தங்கையாக பாவித்து சீர் கொடுக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்...தமிழகம் முழுக்க மக்கள் உற்சாகம்- வீடியோ

    திருச்சி: உடன் பிறந்த அக்காள், தங்கைகளுக்கு நல்ல நாளில் மங்கல பொருட்களை பரிசாக கொடுப்பது மகிழ்ச்சியான விசயம். ஆடி பதினெட்டாம் பெருக்கு கொண்டாடப்படும் இந்த நன்னாளில் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ரங்கநாதர், அம்மாமண்டபத்திற்கு எழுந்தருளி காவிரியை தங்கையாக பாவித்து சீர் கொடுப்பது சிறப்பு.

    பொங்கி பாயும் காவிரி தங்கைக்கு ஆடிப்பெருக்கின்போது ஸ்ரீரங்கம் பெருமாளே சீர் கொடுக்கின்ற காரணத்தால், பெரும்பாலானோர் தங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் சீர் கொடுக்கின்ற வழக்கம் ஏற்பட்டது.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து, சீர் வழங்குகின்ற வழக்கம் இன்றைக்கும் இருந்து வருகிறது.


    காவிரியும் கொள்ளிடமும்

    காவிரியும் கொள்ளிடமும்

    ஸ்ரீரங்கம் என்பது ஒரு தீவு. காவிரியும் அதன் உப நதியான கொள்ளிடமும் ஸ்ரீரங்கத்தை மலர் மாலை போல் சூழ்ந்து வணங்குவதைப் போல உள்ளது. மகாவிஷ்ணுவுக்குத் தங்கை முறை காவிரி. பார்வதி தேவி தங்கை என்றால், அவள் வடிவான காவிரியும் தங்கைதானே!

    மாலையாக வணங்கும் காவிரி

    மாலையாக வணங்கும் காவிரி

    தன் அண்ணனை வணங்கும் விதமாக ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி.தங்கையான காவிரியே தன்னை மலர்மாலை போல் சூழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால் அண்ணனான ரங்கநாதருக்கும் காவிரியின் மேல் அதீத பாசம்.

    தங்கைக்கு பரிசு

    தங்கைக்கு பரிசு

    தங்கையான காவிரிக்கு பாசமாக பரிசளிப்பார் ஸ்ரீரங்கநாதர். ஆடிப்பெருக்கு நாளன்று மங்கல பொருட்களை பரிசாக கொடுப்பார்.

    ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறைக்கு இன்று எழுந்தருளினார். தன் தங்கையான காவிரியைப் பார்த்தபடி நம்பெருமாள் மாலை வரை அதே இடத்திலேயே நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அப்போது காவிரிப் படித்துறையில் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

    சீர்வரிசைப் பொருட்கள்

    சீர்வரிசைப் பொருட்கள்

    ஆடிப்பெருக்கு கொண்டாட வரும் பக்தர்கள் அனைவரும் இன்று அண்ணனையும், தங்கையையும் வணங்கி மகிழ்வார்கள். திருமஞ்சனம் முடிந்த பின்னர் யானை மேல் வைத்து எடுத்து வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை மாலை வேளையில் காவிரிக்கு அர்ப்பணம் செய்வார் ஸ்ரீரங்கநாதர். ஆண்டுதோறும் இந்த சடங்கு சம்பிரதாயமாக நடைபெறும் என்றாலும் இன்றைய தினம் மகிழ்ச்சியோடு பாய்ந்தோடி வரும் காவிரியைக் கண்டு மக்கள் உற்சாகமாக ஆடிப்பெருக்கு கொண்டாடி வருகின்றனர்.

    பட்டுப்புடவை பரிசு

    பட்டுப்புடவை பரிசு

    தாலிப்பொட்டு, தான் அணிந்து கொண்ட பட்டு வஸ்திரம், தான் சூடிக்களைந்த மாலை, சந்தனம், குங்குமம், தாம்பூலம், புஷ்பம், பழங்கள் போன்றவை. பெருமாளுக்கு முன் இவை அனைத்தும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின்னர் காவிரியில் சேர்த்து விடுவார்கள் பட்டாச்சார்யார்கள். இப்படி சீர்வரிசைப் பொருட்களை அர்ப்பணிக்கின்ற வேளையில் கூடி இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியை வணங்கி, ‘ரங்கா... ரங்கா' கோஷத்தை எழுப்புவார்கள். இதேபோல பல சகோதரர்கள் இன்றைக்கும்

    English summary
    Amma Mandapam bathing ghat in Srirangam to take a holy dip in the river.Namperumal, the processional idol, was brought from Srirangam Sri Ranganathaswamy Temple to Amma Mandapam around noon and hundreds of devotees offered their worship. Later in the evening, Namperumal was taken to the ghat where holy gifts from the temple were offered to the Cauvery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X