For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாங்கல்ய பலம் தரும் ஆடிப்பெருக்கு - கர்ப்பிணியான காவிரிக்கு சீர் தரும் ஸ்ரீரங்கநாதர்

ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித

Google Oneindia Tamil News

திருச்சி: ஆடி பதினெட்டாம் நாள் அற்புதமான நாள். தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். காவிரி, வைகை, தாமிரபரணி

பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆடியில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் இம்முறை மழையில்லாமல் ஆறுகளில் தண்ணீர் வரத்து இல்லை என்பதால் காவிரி கரையோரங்களில் களைகட்டாது இருக்கிறது.

ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம்.

ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. காவிரிக்கு பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள்.

திருமண வரம் தரும் காவிரி

திருமண வரம் தரும் காவிரி

ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை, புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

காவிரிக்கு வளைகாப்பு

காவிரிக்கு வளைகாப்பு

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட ஆடிப்பெருக்கு அன்னையை வழிபடுவார்கள். வீட்டில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சமைத்து ஆற்றங்கரையோரத்திற்கு சென்று அன்னைக்கு படைத்து வழிபட்டு சொந்த பந்தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள்.

காவிரியில் நீராடினால் தோஷம் நீங்கும்

காவிரியில் நீராடினால் தோஷம் நீங்கும்

அகத்திய முனிவர் காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தார். இதனால் பூமி வறண்டது எங்கும் வறட்சி ஏற்பட்டது. விநாயகர் காக்கை உருவத்தில் வந்து கமண்டலத்தை தட்டிவிட பொங்கி பிரவாகம் எடுத்தாள் காவிரி அன்னை. மக்கள் தங்களின் பாவங்களைப் போக்க கங்கையில் நீராடுகின்றனர். இதனால் தோஷம் அடைந்த கங்கை விஷ்ணுவை வணங்க அவரது யோசனைப்படி காவிரியில் நீராடி தனது தோஷத்தை போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம். இதனால் மகிழ்ச்சியடைந்து கர்ப்பவதியான காவிரி பெருமாளைக்காண பொங்கி பெருக்கெடுத்து வருகிறார் என்பது ஐதீகம்.

காவிரிக்கு சீர் தரும் ரங்கநாதர்

காவிரிக்கு சீர் தரும் ரங்கநாதர்

ஆடியில் காவிரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவிரியை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசையுடன் வருவார். புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு யானை மீது வந்து காவிரிக்கு கொடுப்பார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இந்த பண்டிகை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. நாளை ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி கரையோரங்களில் சீர்வரிசைகளை வைத்து காவிரியை வணங்கி செல்வ வளம் பெருகவும், குடும்பம் சிறக்கவும் வழிபடுகின்றனர்.

English summary
Aadi perukku or Aadi 18 is an auspicious festival to the Tamil community. Aadi perukku festival is celebrated on the 18th day of the Tamil calendar month of Aadi. This year Aadi perukku 2019 is on August 03, Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X