For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆடித்திருவிழா தொடக்கம் - 15ல் திருக்கல்யாணம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ராமநாதஸ்வாமிக்கும், பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ராமநாதஸ்வாமிக்கும், பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் ஆடித்திருவிழா நடை பெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்ககிறது.

திருவிழாவை முன்னிட்டு 17 நாட்களும் சுவாமியும் அம்மனும் தினசரி ஒவ்வொரு வாகனத்திலும் அலங்காரத்துடன் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி இரவு ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகளும்,ஆன்மிக பட்டிமன்றங்கள் நிகழ்ச்சியும் நடைபெறும்.

ராமேஸ்வரம் இந்துக்களின் புண்ணிய பூமி ஆகும். ராமபிரான் ராவணனையே வாதம் செய்த பிறகு சீதையை சிறை மீட்டு வரும்போது ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தாது. அதனால் சீதை மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். அந்த மணல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமபிரானும் சீதாதேவியும் அந்த சிவலிங்கத்தை வணங்கினார்கள். அந்த லிங்கம் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்கு தோஷங்கள், பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி பார்வத்தினி அம்மன் திருமணம் ஆடி மாதம் நடைபெறும் அது ஆடி தபசு என்று கூறுவர்கள். இந்த திருவிழா நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக காணக்கிடைக்காத காட்சிகளாக இருக்கும்.

17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான 11ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு சுவாமி அம்மன் எழுந்தருளி அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், வருகிற 12ஆம் தேதி பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சியும், 14ஆம் தேதி சுவாமி, அம்மன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 15ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கும் கோவில் தெற்கு பகுதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.

முதல் நாள் திருவிழா

முதல் நாள் திருவிழா

முதள் நாள் திருவிழாவில் கன்னி பெண்களுக்கு வளையல் போடப்படுகிறது. வளையல் போட்ட பெண்களுக்கு திருமணம் தடைகள் இன்றி விரைவாக நடக்கும் என்பது ஐதீகம் . பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கப்படுகிறது. பர்வதவர்த்தினி அம்மனுக்கு வளையல் போடப்படுகிறது.

இரண்டாம் நாள் திருவிழா

இரண்டாம் நாள் திருவிழா

இரண்டாம் நாள் திருவிழாவில் பர்வதவர்த்தினி அம்மன் பல்லக்கில் இராமர் தீர்த்தத்தில் உள்ள மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். அந்த மண்டபடியில் இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் அங்கு வந்து மாவிளக்கு போட்டு அம்மனை வணங்குவார்கள்

மூன்றாம் நாள் திருவிழா

மூன்றாம் நாள் திருவிழா

மூன்றாம் நாள் திருவிழாவில் இராமநாதசுவாமி எழுந்தருள்கிறார். இராமர் தீர்த்தத்தில் உள்ள மண்டபத்துக்கு வந்து பர்வதவர்த்தினி அம்மனுக்கும் இராமநாதசுவாமிக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு பார்வதவர்த்தினி அம்மனை அங்கு விட்டு விட்டு ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்து விடுவார். மறுநாள் 3மணி அளவில் பார்வதவர்த்தினி அம்மன் பூ பல்லக்கில் கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்.

நான்காம் நாள் திருவிழா

நான்காம் நாள் திருவிழா

நான்காம் நாள் திருவிழாவில் இராமநாதசுவாமிக்கு பார்வர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சுவாமி அம்பாள் திருமண நிகழ்ச்சி காண ஆயிரம் கண்கள் வேண்டும். அந்த நிகழ்ச்சியின் போது திருமண கதையை கூறுவதை கேட்கும் போது நம் மனதில் அமைதி உண்டாகும். அங்கு வந்த பெண்களுக்கு அனைவருக்கும் புது தாலிக்கயிறு, குங்குமம்,மஞ்சள் கொடுக்கப்படுகிறது. இராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்பாளும் தம்பதி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

ஐந்தாம் நாள் திருவிழா

ஐந்தாம் நாள் திருவிழா

நம் இந்து மதத்தில் புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் மறுவீடு செல்லும் பழக்கம் உண்டு. அது இறைவனுக்கும் உண்டு. இராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்மனும் இணைந்து அருகில் உள்ள கோவிலுக்கு மறுவீடு செல்வார்கள். ஆறாம் நாளில் இராமநாதசுவாமியும் அம்மனும் கோவிலுக்கு வந்த பின்னர் பள்ளியறை சென்று விடுவர்கள்.


English summary
The annual Aadi Tirukkalyanam festival at Sri Ramanathaswamy Temple here began with flag hoisting ceremony on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X