For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடி வெள்ளியில் சகலமும் தரும் சண்டி யாகத்துடன் ஸ்ரீ காமதேனு ஹோமம்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 20.07.2018 ஆடி முதல் வெள்ளியில் சகலமும் தரும் சண்டி யாகத்துடன் ஸ்ரீ காமதேனு ஹோமம் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: உலக மக்கள் யாவரும் எவ்விதமான நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவும், மனநிம்மதியோடு நிறைவான வாழ்வு வாழவும் அம்பாளுக்கு உகந்த ஆடி முதல் வெள்ளிக்கிழமை, ஜூலை 20ஆம் தேதி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சௌபாக்யம் தரும் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.

பொதுவாக ஸ்ரீ மகா சண்டி ஹோமம் – பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

Aadi Velli maha chandi homam at Dhanvantri peedam

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தூய எண்ணத்துடன் இருந்து முழுமையான கடவுள் பக்தியை இடைவிடாமல் அனுசரித்து வந்தால், திருஷ்டியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். என்றாலும், திருஷ்டி விலக்குவதற்கு உண்டான பரிகாரங்களையும் மேற்கொள்வது அவசியம்.

சண்டி ஹோமம்

சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும். செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

சண்டி தேவிக்கு வழிபாடு

கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. இது அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம். இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும். சுஹாசினி பூஜை, தம்பதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, செய்து சண்டி ஹோம மஹா பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.

யாக பொருட்களும் பயன்களும்

1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம், 2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி, 3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம், 4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி, 5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம், 6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி, 7. பூசணிக்காய் – சத்ருநாசம், 8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி, 9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி, 10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி, 11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்), 12. நெல் பொரி – பயம் நீக்குதல், 13. சந்தனம் – ஞானானந்தகரம், 14. மஞ்சள் – வசீகரணம், 15. பசும்பால் – ஆயுள் விருத்தி, 16. பசுந்தயிர் – புத்ர விருத்தி, 17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி, 18. நெய் – தனலாபம், 19. தேங்காய் – பதவி உயர்வு, 20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி, 21. அன்னம், பசஷணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம், 22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம், 23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது.

யாகத்தில் மூலிகைப் பொருட்கள்

பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.

இந்த ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரணமாக, புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரியங்களுக்கும் பயன்படுகிறது என்கிறார் தன்வந்திரி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மஹா தன்வந்திரி கோடி ஜப யக்ஞம்

இதே போல 19.07.2018 வியாழக்கிழமை முதல் 28.10.2018 ஞாயிற்றுக்கிழமை வரை 100 நாட்கள் நோய் தீர்த்து காக்கும் கடவுளான ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளை வேண்டி சர்வ ரோக நிவாரணம் பெறவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பிராப்தி வேண்டியும் ஸ்வாமிகளிடம் தீக்ஷை பெற்ற சீடர்களால் மஹா தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டுகிறோம்.

தன்வந்திரி ஹோமத்தின் பலன்

ஒரு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் யாகம் இது. இவை மட்டுமல்லாமல் தன்வந்திரி பெருமாளின் அனுக்கிரகத்தையும், அருளையும் கூட்டித் தரும் யாகம். ஒவ்வொரு மனிதனின் மனதைக் கட்டுக்குள் அடக்கி, ஆசைக்கு அணை போடும் ஹோமம் ஆகும். அதிகமாக உண்ணாது உடலுக்கு ஏற்ற தேவையான உணவை மட்டும் உண்ண வைக்கும் அதீத யாகம் இது. இந்த யாகத்தை முறையாக செய்து கொள்பவர்களுக்கு மூளைக் கோளாறு, மூளை நரம்பினால் ஏற்படும் கோளாறு போன்ற கபால நோய்கள், வாத சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். மற்றும் உடல் ரீதியான நோய்களுக்கும் மன ரீதியான நோய்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும்.

நலம் பெற அழைப்பு

மேற்கண்ட யாகத்தில் பக்தர்கள் புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் பங்கேற்கலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Aadi Velli Rituals bring victory in all spheres and your fortunes are multiplied by pleasing the powerful goddess Shakthi. Aadi friday special Sri Maha Chandi Homam conduct on July 20th 2018 at Sri Dhanvantri Arokya peedam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X