ஐப்பசி பவுர்ணமியில் கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி - பக்தர்கள் தரிசனம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருடவாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் தரிசனங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கொரோனா விதிமுறைகளின்படி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம், இலவச தரிசனம், வி.ஐ.பி. பிரேக் உள்ளிட்ட தரிசனங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பிரம்மோற்சவ விழாவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
3 அலை பரவ நாமே காரணமாகி விடக்கூடாது...கொரோனா தடுப்பூசி செலுத்த முன் வாருங்கள் -டாக்டர் ராதாகிருஷ்ணன்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருட சேவை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இரவு 7 மணியில் 9 மணிவரை கருட சேவை நடைபெற்றது. உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு தரிசன கட்டணம்
ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதியில் தரிசனம் செய்ய நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டோக்கன் நாளை மறுதினம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

ஆன்லைனில் வெளியீடு
நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகிற 25ந் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது எனவே பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இலவச தரிசன டிக்கெட்
ரூ.300 கட்டணத்தில் ஏற்கனவே 8 ஆயிரம் டிக்கெட் வெளியிடப்பட்டது. தற்போது அது 10 ஆயிரம் டிக்கெட்டாகவும் இலவச தரிசனத்தில் வெளியிடப்பட்ட 8 ஆயிரம் டோக்கன் தற்போது 12 ஆயிரம் டோக்கனாகவும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

முதியவர்கள் வரவேண்டாம்
நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம், திருமலையில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு முதன்மை தரிசனங்களாக கருதப்படும். மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் அவற்றை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அது உண்மை இல்லை. எனவே பக்தர்கள் அவற்றை நம்பி திருமலைக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.