• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆனி மாத அபார ஏகாதசி : தண்ணீர் பஞ்சம் தீர தன்வந்திரி பெருமாளுக்கு திருமஞ்சனம்

|

வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 28.06.2019 வெள்ளிக்கிழமை ஏகாதசியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தண்ணீர் பஞ்சம் தீர மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற்றது. 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஹோமமும், பீடதில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி வராஹருக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

இரணியாக்ஷனிடம் இருந்து பூமாதேவியை காக்க பெறுமாள் எடுத்த அவதாரமே வராஹர் அவதாரம் ஆகும். பூமாதேவியைக் காப்பதற்கும், உலகில் தீயவை அழிப்பதற்கும் நாராயணன் நான்முகனின் நாசியில் இருந்து வெண்பன்றி வடிவாக அவதரித்தார். தேவாதிதேவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, பூமாதேவியின் வேண்டுதலுக்காகத் திருவுளம்கொண்டு அரக்கனான இரண்யாட்சனை வதம்செய்து, வராஹமூர்த்தி பூமியில் நிலைகொண்டார்.

ஸ்ரீ லக்ஷ்மி வராஹ பெருமாளை வேன்டி நடைபெறும் இப்பூஜைகளிலும் ஹோமத்திலும் பங்கேற்பதின் மூலம் ராகு தோஷங்கள் நீங்கும், பூமி சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல பலன்களை அடைவர், சனிதசை, சனி தோஷ சங்கடங்களிலிருந்து விடுபட்டு சுகம் காணலாம், திருமணத்தடைகள் நீங்கும், பயம், வியாதி, துர்பிஷங்கள் தொலைந்து, அறிவும் செல்வமும் உண்டாகும், வாழ்வில் என்றும் சுகம் காணலாம், காரியங்களில் வெற்றி கிடைக்கும், சத்ரு உபாதைகள் அகலும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம்

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ள விரத தினமாகும். மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும் வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

பெருமாள் வழிபாடு

பெருமாள் வழிபாடு

ஏகாதசியில் பெருமாளை வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி அபார ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

தன்வந்திரிக்கு திருமஞ்சனம்

தன்வந்திரிக்கு திருமஞ்சனம்

ஏகாதசி திதியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெற்ற ஏகாதசி ஹோமத்திலும், நெல்லிப்பொடி திருமஞ்சனத்திலும் பகையை வெல்லவும், புத்திரபாக்யம் கிடைக்கவும், வம்சாவளி பெருகவும், ஒளிமயமான வாழ்க்கை அமையவும், இல்லறம் இனிக்கவும், மன உளைச்சல் அகலவும், வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கவும், பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கவும், கடல் கடந்து சென்று வெற்றி பெறவும், வெளிநாட்டில் உள்ள சொந்தங்கள் சிறப்படையவும், கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கவும், விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகவும், திருமண யோகம் உண்டாகவும் வழிபாடு நடைபெற்றது.

வெற்றி கிடைக்கும்.

வெற்றி கிடைக்கும்.

பாபத்தை போக்கவும், நல்ல பேற்றினை ஏற்படுத்தவும், துரோகிகள் விலகவும், உடல் சோர்வு நீங்கவும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தவும், ரத்த சோகை அகலவும், வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறவும், உடல் ஆரோக்கியம் பெறவும், சௌபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கவும், வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிடைக்கவும், முன்னோர்களின் ஆசியை பெறவும், கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையவும் பிராத்தனை நடைபெற்றது.

தண்ணீர் பஞ்சம் தீரும்

தண்ணீர் பஞ்சம் தீரும்

குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ - மாணவிகளாக திகழவும், மன பயம் அகலவும், மரண பயம் அகலவும், கொடிய துன்பம் விலகவும், நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கவும், ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கவும், குடும்பத்துடன் ஆனந்தமாக வாழவும், வறுமை ஒழியவும், நோய் அகலவும், பசிப்பினி நீங்கவும், நிம்மதி நிலைக்கவும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கவும், மங்கள வாழ்வு மலரவும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கவும், நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரவும், போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்பட கூட்டு பிராத்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசி வழங்கி இறை பிரசாதம் வழங்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Guruji “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal conducting Navakalasa Thiruanjanam on 28th June and Thirumanjana Thiruvizha to Moolavar Sri Danvantri Perumal at our Sri Danvantri Arogya Peedam, Walajapet.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more