• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரப்போகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரியன் மிதுன ராசியில் பயணம் செய்யும் இந்த மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

ஆனி 1 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை முதல் 24 மணி நேரம் சிவனுக்கு விசேஷமான ஷடசீதி புண்ணிய காலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி 1ம் தேதி என வருடத்தில் நான்கு ஷட சீதி புண்ணிய காலங்கள் ஆகும். ஷடசீதி புண்ணிய காலம் பிறக்கும் நாளில் சிவன், சக்தி வழிபாடு, சித்தர்கள் வழிபாடு, ஞானிகளின் அருள் பெற்று வருவது தனி சிறப்பினைத் தரும்.

கொரோனா கொடுந்தொற்று பரவி வரும் இந்த கால கட்டத்தில் நோய் பாதிப்பு எப்போது நீங்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. நல்ல வேலை கிடைக்குமா? இருக்கிற வேலை நிலைக்குமா சம்பள உயர்வு வருமா என்றும் பலரும்
யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த ஆனி மாதத்தில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாதம் சிக்கல்கள் நீங்கும். சொத்து வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதன் ஆதரவு உள்ளதால் சொந்தங்களுடன் இருந்த சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சாதகமாக இருக்கும் கிரகங்கள் எல்லா வகையிலும் ஆதரவாக சாதகமாக உள்ளது. பெரியவர்கள் ஆசி கிடைக்கும். வேலை கிடைக்கும். கடன் பிரச்சினை நீங்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. மகன், மகள் திருமணம் தொடர்பாக பேசலாம். சுக்கிரன் சாதகமாக உள்ளதால் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கலாம். வண்டி வாகனம் புதுசு வாங்கலாம். ஏழை பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள். திங்கட்கிழமை சிவபெருமானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கண் பார்வை கோளாறுகள் நீங்கும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. சுக்கிரன் சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால். சுக்கிரன் செவ்வாய் ஒன்று சேருவதால் சுப செலவுகள் வரலாம். வண்டி வாகனத்தை புதுப்பிக்கலாம். உங்க ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் தைரியம் கூடி வரும். சகோதர சகோதரிகளுக்கு திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த ஈகோ நீங்கும். சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடி வரும். வேலையில் கவனம்தேவை. அலுவலக வேலையில் விழிப்புணர்வு அவசியம். நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுங்கள்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்களுக்கு கணவன் மனைவிக்கிடையே கருத்து மோதல்கள் வரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. எதிர்பாராத செலவுகள் வரும் தந்தையின் ஆசி உண்டு. அஷ்டமத்து சனியால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கடந்த மாதத்தை விட இந்த மாதம் வியாபாரம் நன்றாக இருக்கும். வேலையில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது. பிள்ளைகள் திருமணம் தொடர்பாக எதுவும் பேச வேண்டாம்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, லாப ஸ்தானத்தில் பயணித்த சூரியன் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். அலைச்சல்கள் வரலாம். தூக்க குறைபாடு ஏற்படும். தனாதிபதி சூரியன் விரைய ஸ்தானத்தில் உள்ளதால் அரசாங்கத்தால், அரசு அதிகாரிகளால் உதவிகள் தேடி வரும். சுக்கிரன் பயணம் செய்வதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். திட்டங்கள் நினைத்த காரியங்கள் கை கூடி வரும். வீடு பராமரிப்பு வேலைகள் செய்வீர்கள். சுக்கிரன், செவ்வாய் இணைந்து யோகத்தை தரப்போகின்றனர். வழக்கு பிரச்சினைகள் சுமூகமாக பேசி முடிக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்க முன் பணம் கொடுக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். துர்க்கையை செவ்வாய் கிழமை வணங்குங்கள். ஆனி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதமாக அமையும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, கடந்த ஒரு மாதம் 10ஆம் வீட்டில் இருந்த சூரியன் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். எதிர்பார்த்த காரியம் சீக்கிரம் முடியும். அதிகார பதவிகள் தேடி வரும். மிகப்பெரிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பணம் வந்தால் செலவாகி விடுகிறதே என்று கவலைப்படுவீர்கள். இந்த மாதம் வருமானம் அதிகம் வரும். வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். வேலையில் இருந்த கெடுபிடிகள் நீங்கும். இந்த மாதம் நீங்கள் அனைத்திலும் ஜெயித்து காட்டுவீர்கள்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் இருந்த சூரியன் இனி பத்தாம் வீட்டில் பயணம் செய்யப் போகிறார். செவ்வாய் உங்கள் ராசிக்கு 11ஆம் விட்டில் பயணம் செய்கிறார். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். வீடு கட்டும் பணிகளை தொடங்கலாம். புதிய தொழில்களை தொடங்கலாம். புதன் வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் உங்களுக்கு அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். பிள்ளைகள் திருமணம் விசயமாக பேசலாம். இந்த மாதம் வெற்றிகள் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. புதன்கிழமை பெருமாளை வணங்க நன்மைகள் நடைபெறும்.

English summary
Aani month when the Sun travels in Gemini zodiac sign Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo zodiac sign will see what benefits are available to make amends.Rasi palan for the Tamil Month of Aani. From June 15 to July 16th 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X