For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆனி திருமஞ்சனம், கூர்ம ஜெயந்தி, சக்கரத்தாழ்வார் ஜெயந்தி - ஆனி மாத முக்கிய விஷேச தினங்கள்

ஆனி மாதம் ஜேஷ்டா மாதம். இந்த மாதத்தில் ஆனி திருமஞ்சனம், கூர்ம ஜெயந்தி, சக்கரத்தாழ்வார் ஜெயந்தி என பல முக்கிய விஷேச தினங்கள் உள்ளன.

Google Oneindia Tamil News

மதுரை: ஜேஷ்டா மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம்.தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும். ஆனி மாதத்தில் பல முக்கிய விஷேச தினங்களும், முகூர்த்த நாட்களும் உள்ளன.

ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சனம் நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று திருச்சி உறையூரில் மேல்கூரை இல்லாமல் திறந்த வெளியில் உள்ள கருவறையில் அருள்புரியும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பௌர்ணமி அன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்வர். பின்னர் மாம்பழங்களைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.

Aani month importance Muhurtham days

திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமியன்று, சுவாமிக்கு வாழைப்பழத்தார்களை சமர்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ, பிரார்த்தனை செய்வர். ஆனி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 16 வகையான அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும்.

காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி மாங்கனித் திருவிழா நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களை சூறைவிடுவார்கள். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் எந்த நாட்களில் முக்கிய விஷேச நாட்கள் உள்ளன. முகூர்த்த நாட்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

•ஆனி 2ஆம் தேதி வடசாவித்திரி விரதம். இன்று கௌரி பூஜை செய்து சத்யவான் சாவித்திரி கதை படித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்.

• ஆனி 13ஆம் தேதி கூர்மஜெயந்தி. கூர்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவை வணங்க நன்மைகள் நடைபெறும்.

•ஆனி 23 திங்கள் கிழமை ஆனித்திருமஞ்சனம். இன்று ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் தரிசனம் செய்தால் தொழில் போட்டியில் தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.

•ஆனி 25 புதன்கிழமை சக்கரத்தாழ்வார் ஜெயந்தி . இன்றைய தினம் சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் செய்யலாம் சுதர்சன ஹோமம் செய்ய உகந்த நாள்.

•ஆனி 29 ஜேஷ்டாபிஷேகம் அன்று அபிஷேகம் பிராத்தானை செய்ய நன்மைகள் நடைபெறும்.

•ஆனி 31 செவ்வாய் குரு பூர்ணிமா இன்று ஆசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம் குருபூஜை செய்யலாம்.

முக்கிய முகூர்த்த நாட்கள்:

•இந்த மாதத்தில் கிரகப்பிரவேசம், கிரக ஆரம்பம் செய்ய வேண்டாம். ஆனி 5,12,19,23,26, 30 ஆகிய நாட்கள் திருமணம், சீமந்தம், மாங்கல்யம் செய்ய, புது வண்டி வாங்க, வித்யாரம்பம், தொழில் தொடங்க கடன் வாங்க நல்ல நாட்கள்.

•கும்பாபிஷேகம் செய்ய ஆனி 19, 26 நல்ல நாட்கள். காது குத்த நல்ல நாட்கள் ஆனி 5,12,19,23,30.

•ஆனி மாதம் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் முக்கிய விஷேச நாட்கள்:

•ஆனி மாதம் 2 ஆம் தேதி 17.06.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமண தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமண தடை நீக்கும் சுயம்வர கலாபார்வதி யாகம், தம்பதிகள் குழந்தைபாக்யம் பெற சந்தான கோபால யாகம் வருகிற நடைபெறுகிறது. மாலை 4.30 முதல் 6.00 மணி வரை ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு சிறப்பு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

•ஆனி மாதம் 5 ஆம் தேதி 20.06.2019 வியாழக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை குரு ஆசிர்வாதங்கள் பெற்று வாழ்வில் நலம் பெற குருபூஜை நடைபெறுகிறது.

•ஆனி மாதம் 5 ஆம் தேதி 20.06.2019 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தடைகள் நீக்கி வெற்றி தரும் சங்கடஹர கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

•ஆனி மாதம் 6 ஆம் தேதி 21.06.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் நன்பகல் 1.30 மணி வரை எதிரிகள் தொல்லை அகலவும், முயற்ச்சிகளில் வெற்றி பெறவும், மரண பயம் அகலவும், சகல் ஐஸ்வர்யங்களும் பெற்று நல்வாழ்வு கிடைக்கவும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சண்டி யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 5.30 மணி முதல் 10.00 மணி வரை கிரக தோஷங்கள் நீங்கவும், செல்வ சேர்க்கை உண்டாகவும், வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கவும், விபத்துகள், அகால மரணம் போன்ற துர்வினைகள் நீங்கவும், கொடிய நோய்கள் அகலவும், துஷ்ட சக்திகள் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஒழியவும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பகவதி சேவையும், ஸ்ரீ காலபைரவருக்கும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் குருதி பூஜையும் நடைபெறுகிறது.

•ஆனி மாதம் 6 ஆம் தேதி 21.06.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு உடலில் ஏற்படும் வலிப்பு நோய், சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதி, சர்க்கரை நோய், புற்று நோய், குறை பிரசவம் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்கள், இதர வியாதிகளும் நீங்க ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு திருவோண ஹோமமும், தைலாபிஷேகமும் நடைபெற உள்ளது.

•ஆனி மாதம் 10 ஆம் தேதி 25.06.2019 செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை நவக்கிரக தோஷங்கள் அகலவும், வெளி நாடு வேலைகள் கிடைக்கவும், கர்ம வினைகள் அகலவும், சத்ரு தோஷம் அகலவும், ஆபத்துக்கள் அகலவும், கொடிய நோய்கள் நிவர்த்தியாகவும், வழக்குகளில் வெற்றி பெறவும் மஹா காலபைரவர் யாகத்துடன் நவ பைரவர் யாகமும் அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கும் சொர்ணாகர்ஷண பைரவரும் சிறப்பு அபிஷேகம், ஆரதனைகள் நடைபெறுகிறது.

•ஆனி மாதம் 13 ஆம் தேதி 28.06.2019 வெள்ளிக்கிழமை ஏகாதசியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நீரிழிவு நோய், கண் நோய்கள், இதய நோய்கள், போன்ற சகல விதமான நோயகளும் நீங்கி ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற்று மகிழ்சியான வாழ்வு கிடைக்க மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெறுகிறது.

•ஆனி மாதம் 17 ஆம் தேதி 02.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் நன்பகல் 1.30 மணி வரை அமாவாசையை முன்னிட்டு பில்லி, சூன்னியம், செய்வினை தோஷங்கள் அகலவும், வியாபாரம் செழிக்கவும், எதிரிகள் தொல்லை அகலவும், பதவியில் உயர்வு கிடைக்கவும், போன்ற பல்வேறு நன்மைகளுக்காக யக்ஞசொரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை மிளகாய் யாகமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது.

•ஆனி மாதம் 21 ஆம் தேதி 06.07.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி, அர்த்தாஷ்டம சனி, மற்றும் சனிதிசை, சனிபுக்தி, சனிஅந்தரத்தினார் ஏற்ப்படும் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் அகலவும், சனி பகவனின் அனுக்கிரகம் கிடைத்து வளமான வாழ்க்கை வாழவும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும் சனி சாந்தி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

•ஆனி மாதம் 21 ஆம் தேதி 08.07.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஷஷ்டியை முன்னிட்டு மன அமைதி கிடைக்கவும், செல்வ செழிப்பு உண்டாகவும், சக்திமிக்க ஆற்றல் கிடைத்து வெற்றி இலக்கை பெறவும், கடன்களுக்கு தீர்வும் கிடைக்கவும், நோய்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கவும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு ஷஷ்டி சத்ரு சம்ஹார ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

•ஆனி மாதம் 21 ஆம் தேதி 08.07.2019 திங்கள்கிழமை முதல் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஆனி மாதம் 26 ஆம் தேதி 11.07.2019 வியாழக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரையும் காலை மாலை இருவேளையும் தீமைகள் நீங்கி நன்மைகள் பெறவும், கொடிய நோய்கள் அகலவும், வளமான வாழ்க்கை கிடைக்கவும், ஆயுள் தோஷங்கள் அகலவும் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், ஆராதனைகள், வேத பாராயணங்களுடன் பவித்ரோத்ஸ்வம் நடைபெறுகிறது.தொடர்புக்கு :ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Aani Tirumanjanam, mangani festival, here is the list of important days, and muhurtham days of Tamil Month of Aani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X