For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆனி மாத ராசிபலன்கள்- மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு என்னபலன்கள்

ஆனி மாதம் மிதுனம் மாதம். உத்திராயணமாதத்தின் கடைசி மாதமாகும். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப்பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதமாகும். மிதுனம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இது மிதுனமாதம் என்றும் அழைக்கலாம்.

சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தில் இந்த மாதம் மிகப்பெரிய மாற்றம் நிகழ்க்கிறது. மிதுனம் ராசியில் உள்ள செவ்வாய் ராகு, புதன் கூட்டணி இந்த வாரம் பிரிகிறது. சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள செவ்வாய் ஆனி 7 ஆம் தேதி ஜூன் 23ஆம் தேதி கடகம் ராசிக்கு மாறுகிறார். புதன் மிதுனம் ராசியில் இருந்து ஆனி 5ஆம் தேதி கடகம் ராசிக்கு மாறுகிறார். குரு பகவான் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

சுக்கிரன் ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு ஆனி 13ஆம் தேதி மாறுகிறார். தனுசு ராசியில் சனி கேது சஞ்சரிக்கின்றனர். இந்த கூட்டணியால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும். மேஷ ராசிக்காரர்களே... விகாரி வருடம் ஆனி மாதம், அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். மிதுன மாதத்தில் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும்.

கடந்த மாதங்களில் இருந்த சுறுசுறுப்பு கம்மியாகும். கிரக அமைப்புகள் சூரியன் 3ஆம் வீட்டில் இருக்கிறார் சூரியன் 3வது வீட்டில் இருப்பது அதிக நன்மை. 5ஆம் தேதி புதன் இடம் மாறுகிறார். உடல் நலத்தை கவனியுங்கள். செவ்வாயும் இடம் மாறுவதால் வண்டி வாகனத்தில் கவனம், நெருப்பு விசயத்தில் கவனம் தேவை. செவ்வாய் நீச்சமடைந்து உச்ச வீட்டை பார்ப்பதால் நன்மை. தொழில் ஸ்தானத்தை புதன், செவ்வாய் பார்ப்பது நன்மை. சுக்கிரன் ராகு சேர்க்கை விபரீத ராஜயோகம் அதிக நன்மை. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அற்புதமான நன்மை. புதன் நான்காம் வீட்டிற்கு நகர்வதால் உறவினர்களால் நன்மை நடைபெறும். தொழிலில் மாற்றம் புரமோசன் கிடைக்கும்.

ராகு, செவ்வாய் புதன் உடன் மிதுனத்தில் கூட்டணி இருப்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் வேண்டாம். வாகனம் ஓட்டுபவர்கள் ஜாக்கிரதை. பரணி நட்சத்திரக்காரர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. கோபம் விட்டு விலகும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. உங்கள் ராசி நாதன் செவ்வாய் நீச்சம் பெற்று கடகம் ராசியில் அமர்வது கவனிக்க வேண்டிய அம்சம். புதன் செவ்வாய் பலமிழந்து இருக்கின்றனர். குரு வக்ரம், சனி வக்ரம். நான்கு கிரகங்கள் பலமிழந்து இருக்கின்றனர். ஆனி மாதத்தில் குரு வக்ர நிலையில் இருப்பதால் பண பிரச்சினை தீரும்.

அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. சூரியன், ராகு சேர்க்கை இருப்பதால் அரசியல், அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சினை ஏற்படும். சில மாநிலங்களில் சிக்கல்கள் ஏற்படும். கிரகங்கள் பலமிலந்து இருக்க ராகு மட்டுமே அதீத பலத்தோடு இருப்பார்.இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான மாற்றம். ராகு சுக்கிரன் இணைவு கணவன் மனைவி பிரச்சினை ஏற்படும். ஆனி மாதம் பொறுமை தேவை. எந்த பொருளும் வாங்கதீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். ராசிநாதன் பத்தாம் வீட்டை பார்ப்பதால் நல்ல தொழில் அமையும். மாணவ மாணவிகளுக்கு அற்புதமாக உள்ளது. வியாபாரிகள் முன்னெச்சரிக்கையோடு இருந்தால் லாபம்தான். கவனம் இல்லாவிட்டால் நஷ்டம்தான். விழிப்புணர்வு இருக்கவேண்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு அதி அற்புதமான மாதம், ஆனி திருமஞ்சனத்தில் நடராஜரை கவனிக்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பள உயர்வு உண்டாகும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். பல வெற்றிகள், மகிழ்ச்சிகள் கிடைக்கும். இதற்குக்காரணம் கிரகங்களின் சஞ்சாரம்தான். செவ்வாய் கடகம் ராசிக்கு இடம் மாறுவதால் கணவன் மனைவி உறவில் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து தன வாக்கு ஸ்தானத்திற்கு மாறுவதால் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் புரமோசன் கிடைப்பதில் தடை தாமதம் இருக்கத்தான் செய்யும் காரணம் எட்டாம் வீட்டில் சனி கேது சேர்க்கை பெற்றிருக்கின்றனர். வக்ரமடைந்து பின்னோக்கி நகர்வதால் இத்தகைய தடைகளை ஏற்படுத்துகின்றனர். அதே போல இரண்டாம் வீட்டில் செவ்வாய் உடன் சர்ப்ப கிரகமான ராகுவின் சேர்க்கும் பாதிப்புகளையும், செயல்களில் தடைகளையும் ஏற்படுத்துவார். மாத இறுதியில் கிரகங்களின் நகர்வினால் தடைகளை தகர்த்து வெற்றி பெறுவீர்கள். தம்பதியரிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சற்று குறைவாகத்தான் இருக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம், ரொம்ப பாதுகாப்பு தேவை. அஷ்டமத்து சனியால் பொருள் தொலையும். இந்த மாதம் கவனம் தேவை. தைரியம் தன்னம்பிக்கை தேவை. குல தெய்வத்தை சரணடையுங்கள் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கலாம்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தலைமைப் பதவி கிடைக்கும் அப்பாவின் உதவி கிடைக்கும். உங்க தைரிய ஸ்தானதிபதி சூரியன் உங்க ராசியில் சஞ்சரிப்பதால் வளர்ச்சியும் வெற்றியும் வரப்போகிற மாதம். தனி திறமையாளர்களுக்கு அற்புதமான மாதம். கலைஞர்களுக்கு திறமை உலகறியும். வாய்ப்புகள் அதிகம் வரும். மிதுன ராசி அன்பர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவுகள் சராசரியாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். உடல் அசதியும், மனதில் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். கலைத்துறையினர் தங்கள் தொழிலில் உற்சாகத்துடன் செயல்படுவர். மாணவ மாணவியர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் கொடுக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் மன நிம்மதி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். ஆறில் குரு அமர்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மிதுனத்தில் ராகு செவ்வாய் இருப்பதால் குழப்பம் அதிகம் ஏற்படும் மூன்றாவது ராசி. காது மூக்கு தொண்டை பிரச்சினைகள் வரும் செவ்வாய் ராகு சஞ்சாரத்தினால் மருத்துவ செலவு வரும். புதன், செவ்வாய் பெயர்ச்சி இரண்டாம் வீட்டிற்கு நகர்வதால் பிரச்சினைகள் தீரும். குல தெய்வத்தை கும்பிட்டால் நல்ல விசயங்கள் தானாக நடைபெறும். கடவுள் அருளினால் கவலைகள் பறந்தோடும்.

கடகம்

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் வெளிநாடு தொழில் தொடர்புகள் மூலம் பணவரவு அதிகரிக்கும். கடக ராசியினருக்கு உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உடனுக்குடன் சரியாகும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். உங்களின் ஜென்ம ராசிக்கு செவ்வாய்,புதன் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். விரைய ஸ்தானத்திற்கு சூரியன், ராகு உடன் சுக்கிரன் இணைகிறார். பஞ்சம ஸ்தானத்தில் குரு வக்ரம் அடைந்துள்ளார். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உள்ள சனி வக்ரமடைந்து கேது உடன் சஞ்சரிக்கிறார். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். இந்த மாதம் பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சனி செவ்வாய் பார்வை சரியில்லை என்பதால் அவசியம் மருத்துவர் ஆலோசனை அவசியம். வரவை விட இந்த மாதம் அதிகமான செலவு இருக்கும். மருத்துவ செலவுகள் அம்மா அப்பா, வாழ்க்கைத்துணைக்கு செலவு செய்யலாம். மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு கைகூடி வரும். மாணவர்களுக்கு தெளிவு பிறக்கும் காலம். வீட்டு பெண்மணிகளுக்கு மாத முற்பகுதியில் பணவரவு அதிகமாக இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றியடையும்.

சிம்ம ராசியினருக்கு சராசரியான அளவில் வருமானம் இருக்கும். சிலர் சுப காரிய முயற்சிகள் தொடர்பாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தம்பதிகளிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான நிலை ஏற்படும். பிறருக்கு கொடுத்த கடன் இந்த மாதம் திரும்பக் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க கூடும். ஒரு சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால் இந்த மாதம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைக்கும். மாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத வளர்ச்சியும் பண வரவும் உண்டாகும். புதிய தொழில் தொடங்கலாம். புதன் ஆட்சியா லாப ஸ்தானத்தில் இருப்பதால் வருமானத்தில் லாபம் கிடைக்கும். பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பெண்களுக்கு நன்மை தரும் மாதம். பொழுது போக்கு பயணங்கள் அதிகரிக்கும். நான்காம் இடத்தில் குரு இருக்கிறார். பிள்ளைகளுக்கு கல்விக்காக பயணம் அமையும். செலவுகள் அதிகரிக்கும். வயதில் மூத்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் செயல்கள் வெற்றியடையும். கன்னி ராசியினருக்கு சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். சகோதரர்கள் வகையில் அனுகூலம் இருக்காது. அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கலைத்துறையினர் வாய்ப்புகளாய் பெற பொறுமையுடன் அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையும் என்பதால் பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கன்னி அர்த்தாஷ்டம சனி கேது உடன் சேர்ந்து இருப்பதால் மன உளைச்சலை தருவார். சனி கேது இணைந்து உயர்படிப்பு ஸ்தானமான நான்கில் இருப்பதால் மாணவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் படிக்க வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதால் இறைவனை சரணடையுங்கள். குரு சுக்கிரன் பார்வை பெறுவதால் தானாக முடிவு செய்யாமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆலோசனை அவசியம். குரு, சனி பலம் இழந்த நிலையில் இருக்கின்றனர் செவ்வாய் நீசமடைகிறார். இந்த மாதம் குல தெய்வத்தை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும். அதிர்ஷ்டம் ஏற்படும். துலாம் ராசியினருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். கலைத்துறையினருக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையுடன் இருப்பது அவசியம். மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களில் வெற்றியும் நன்மையும் நடைபெறும்.

வெளிநாட்டு யோகம் கைகூடி வரும் என்றாலும் பாஸ்போர்ட் விசாவில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியமும் இந்த மாதம் அற்புதமாக இருக்கும். காதல் உங்களுக்கு கை கூடி வரும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு அதிகரித்தாலும் சேமிக்க முடியலையே என்ற கவலை வேண்டாம். மூன்றாம் வீட்டில் உள்ள சனி, கேது பின்னோக்கி நகர்வதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்க நன்மைகள் தேடி வரும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். தடைகள் விலகும். மாற்றங்கள் முன்னேற்றத்துடன் அமையும்.

 விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும், அஷ்டமத்தில் சூரியன் ராகு என கிரகங்கள் இருப்பது. விருச்சிக ராசியினருக்கு பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சராசரியான வருமானம் தான் இருக்கும். தடைகளை ஏற்படுத்தும் மாணவர்கள் யோசித்து பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு நடைபெறுவது நல்லது. சுக்கிரன் எட்டாம் வீட்டிற்கு நகரும் காலத்தில் பணம் நகைகளை பத்திரமாக வைக்கவும். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலையில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். செவ்வாய் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வதால் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வரும். குரு ஏழாம் வீட்டினை பார்ப்பதால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் அலுவலக இடமாற்றம் ஏற்படும். தனுசு ராசியினருக்கு கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பார்கள். அதனால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் இருப்பதால் இந்த மாதம் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலை சாந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை நடக்கும். திருமணம் கூடி வரும். பிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் வெளிநாடு செல்வீர்கள். செவ்வாய் புதன் கிரகங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு மாறுகிறது. ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு சுக்கிரன் மாத இறுதியில் மாறுகிறார். வேலை போயிடுமோ என்ற பயத்துடனேயே இருந்திருப்பீர்கள். போராட்டமே வாழ்க்கையா இருக்கிறது வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சின்ன காயம் வந்தால் கூட உடனே கவனிங்க. மருத்துவ ஆலோசனை கேட்பது நல்லது. குல தெய்வத்தை வணங்குங்கள் அவரோட ஆசிர்வாதம் கிடைக்கும்.

மகரம்

மகரம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் சூரியன் நகர்வு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆறாம் வீட்டில் நான்கு கிரகங்களின் இணைவு பாதிப்பை தராது. அவ்வப்போது மனச்சோர்வு, உடல் சோர்வை தருவார். பெண்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை தருவார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வும் தேவை. மகர ராசியினருக்கு பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். கண்களில் சிறுசிறு வலிகள் உபாதைகள் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. மாணவர்களுக்கு சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். மனம் விரும்பிய வாழ்க்கைத்துணை அமையும். திருமண வாழ்க்கை சந்தோசத்தை தரும்.

கும்பம்

கும்பம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும் சூரியன் ஐந்தில் சஞ்சரிப்பது செழிப்பான காலம்.

கும்ப ராசியினருக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, காது மூக்குத் தொண்டை வழியாக பிரச்சினைகள் ஏற்படும். உஷ்ணம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துவார். திருமண முயற்சிகளில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல செய்திகள் தேடி வரும். புதன் இடமாற்றத்தால புத்திக்கூர்மை அதிகரிக்கும் சுக்கிரனின் 5 ஆம் இட சஞ்சாரத்தினால் சிறு பிரயாணங்களினால் நன்மை நடைபெறும். குருவினால் வேலை மாற்றம், தன லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் அமையும். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் கால கட்டம். வேலை வாய்ப்பு அமையும். பிசினசில் நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்

மீனம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும். மீன ராசியினருக்கு பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மகிழ்ச்சியான மாதம். தேவையான பணம் கிடைக்கும். விரும்பிய உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இன்னும் சில தினங்களில் புதன், செவ்வாய் இணைந்து கடகத்தில் இணைவதால் கல்யாண யோகம் கைகூடி வரும், மாத பிற்பகுதியில் சூரியன் இடம் மாற்றத்தால் பிரமோசன் கிடைக்கும். திட்டமிடாத பயணங்கள் செயல்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும், பிள்ளைகள் வழியில் தொல்லைகள் ஏற்படும். பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம். குலதெய்வத்தை கும்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள். பவுர்ணமி நாட்களில் சிவ ஆலயம் சென்று வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

English summary
Rasipalangal for the Tamil month of Aani from June 16,2019 to July 17,2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X