For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆனி திருமஞ்சனம் – சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 29ல் கொடியேற்றம், ஜூலை 7ல் தேரோட்டம்

பூலோகக் கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Google Oneindia Tamil News

சிதம்பரம்: ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு ஆனி உத்திரம் என்றும் ஒரு பெயர் உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உத்திர விழா வருகிற ஜூன் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். தில்லை சிதம்பரம் நடராஜா கோவிலில் மார்கழி மாத திருவாதிரை, ஆனி திருமஞ்சனம் ஆகிய இரண்டு விழாக்களும் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். ஜூலை 8ம் தேதி ஆனி திருமஞ்சனம் 10 நாள் திருவிழாவாக நடைபெறும்.

ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு "ஆனி உத்திரம்" என்றும் ஒரு பெயர் உண்டு.

 சிவன் பார்வதி வீதி உலா

சிவன் பார்வதி வீதி உலா

ஆனி திருமஞ்சன விழா அதிகாலை 3 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு உத்திர தரிசனம் நடைபெறும். தில்லை சிதம்பரத்தில் ஆனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். விழாவை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மையும் அப்பனும் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். ஜூன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்க சூரிய பிரபை வாகனத்திலும், ஜூலை 1ம் தேதி திங்கள் கிழமை வெள்ளி சந்திரபிரபை வாகனத்திலும், 2ம் தேதி செவ்வாய் கிழமை பூத வாகனத்திலும், 3ம் தேதி புதன் கிழமை வெள்ளி ரிஷப வாகனத்திலும், 4ம்தேதி வியாழக்கிழமை வெள்ளி யானை வாகனத்திலும், 5ம் தேதி வெள்ளிக்கிழமை தங்கபர்வத வாகனத்திலும், 6ம் தேதி சனிக்கிழமை தங்கதேரிலும் வீதி உலா நடைபெறும்.

மகா தேரோட்டம்

மகா தேரோட்டம்

ஜூலை 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனி உத்திர விழா மகா தேரோட்டம் நடைபெறுகிறது. கோவில் மூலவர் நாடராஜரே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வரு அதிசயம் இங்கு மட்டுமே நடைபெறும். 8ஆம் தேதி திங்கள் கிழமை அதிகாலை முதலே பல வித வாசனை பொருட்களால் அபிஷேக தீபாராதனை நடைபெற்று தில்லை நடராஜருக்கு கண்கவர் அலங்காரத்தில் தரிசனம் நடைபெறும் .

நடராஜரின் அலங்காரம்

நடராஜரின் அலங்காரம்

அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.

இந்த நடனத்தை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இதனால்தான் இந்த நடனத்தை காண தேவர்களும், முனிவர்களும் படையெடுத்து வந்து ஆவலோடு காத்திருப்பார்கள் என்பது ஐதீகமாகும்.

சக்தியின் அருளாசி

சக்தியின் அருளாசி

நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும். அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.

தொழில் போட்டியில் வெற்றி

தொழில் போட்டியில் வெற்றி

இந்நாளில் நடராஜருக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்தால் தொழில் போட்டியில் வெற்றி கிடைக்கும். சிவபெருமானை தரிசனம் செய்வோருக்கு அளவற்ற பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி. கன்னி பெண்கள் தரிசனம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும். சுமங்கலி பெண்கள் தரிசனம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் பெற்று நீடூழி வாழலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

ஆடல்வல்லனுக்கு ஆனி திருமஞ்சனம்

ஆடல்வல்லனுக்கு ஆனி திருமஞ்சனம்

சிதம்பரம், திருவாரூரைப் போல, உத்தரகோசமங்கை, கோனேரிராஜபுரம், ஆவுடையார்கோயில், மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன், திருச்சி அருகில் உள்ள திருவாசி திருச்சி அருகே ஊட்டத்தூர் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர், நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் கோயில், நெல்லை அருகில் உள்ள ராஜவல்லிபுரம் செப்பறைக் கோயில் முதலான பல ஆலயங்களில் ஆனித் திருமஞ்சன வைபவம் விமரிசையாக நடைபெறும்.

English summary
Aani Thirumanjanam 2019 - Chidambaram Natarajar Ani Uthiram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X