For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆவணி அமாவாசை: அஷ்ட பைரவர் யாகம்,நவ துர்கா யாகம்,நவ சண்டி யாகம்

தன்வந்திரி பீடத்தில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு நவ துர்கா அஷ்ட பைரவர் ஹோமத்துடன் நவ சண்டி யாகங்கள் நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல விதமான திருஷ்டி தோஷங்கள் நிவாரணத்திற்காகவும், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் கிடைக்க வேண்டியும் ஆவணி மாதம் அமாவாசையை முன்னிட்டு வருகிற 28.08.2019 புதன்கிழமை முதல் 30.08.2019 வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் அஷ்ட பைரவர் யாகம், நவ துர்கா யாகம், நவ சண்டி யாகம் என முப்பெரும் யாகங்களுடன் விசேஷ பாராயணங்கள், ஜபங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளது.

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்னுடைய பெற்றோருக்கு கொடுத்து வாக்குருதியை நிறைவேற்றும் விதமாக வேலூர் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேக தன்வந்திரி பகவான் மற்றும் 77 பரிவார மூர்த்திகளுக்கு சன்னதிகள் அமைத்து, உலக க்ஷேமத்திற்காகவும், இயற்கை வளத்திற்காகவும் அவ்வப்பொழுது பிரம்மாண்ட யாகங்கள் நடத்தி வருகிறார். அந்த வகையில் வருகிற 28.08.2019 முதல் 30.08.2019 வரை பல விதமான விசேஷ திரவியங்கள், 1600 கிலோ (1.5 லக்ஷம்) மஞ்சள் கிழங்குகள், பட்டு வஸ்திரங்கள் போன்ற பல்வேறு விசேஷ திரவியங்கள் கொண்டு பல்வேறு பூஜைகளுடன் யாகங்கள் நடைபெற உள்ளது.

அஷ்ட பைரவர் ஹோமம்

அஷ்ட பைரவர் ஹோமம்

சிவபெருமானின் அம்சமாக கருதப்படும் பைரவர், எல்லா கிரகங்களையும், நக்ஷத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர். கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷண பைரவர், சம்ஹார பைரவர்.

இந்த அஷ்ட பைரவர்களை போற்றி வழிபடும் ஹோமமே அஷ்ட பைரவர் ஹோமம் ஆகும். இவர்களை வேண்டி நடைபெறும் ஹோம பூஜைகளில் பங்கேற்பதின் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறலாம், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலும், வெளிநாடு வேலைகள் கைக்கூடும், பிரம்மஹத்தி தோஷம் அகலும், மரண பயம் விலகும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

நவதுர்கைகள் யார் யார்

நவதுர்கைகள் யார் யார்

சமஸ்கிருதத்தில் 'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.

நவ துர்கா ஹோமத்தின் பலன்கள்

நவ துர்கா ஹோமத்தின் பலன்கள்

பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும், துஷ்ட சக்திகள் நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் நவ துர்கைகளை வேண்டி நடைபெறும் ஹோமமே நவதுர்கா ஹோமம் ஆகும்.

நவ சண்டி யாகம்

நவ சண்டி யாகம்

சக்தியின் மிகச் சக்தி வாய்ந்த பெண் அம்சமே ஸ்ரீ சண்டிகா தேவி. தேவி மஹாத்மிய பாடல்களில் அசுரா்களை மிகப் பயங்கர உருவமெடுத்து சண்டிகை அழிப்பதைப் பாராட்டுகின்றது. சண்டி தேவி துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி சோ்ந்த உருவமாகும். மிகக் கோபத்துடனும், மிகப் பயங்கர உருவத்துடனும் தோற்றமளிக்கும் சண்டிகை கொடுமையை ஒழிப்பவளாகும். அக்னி கிரியை மூலம் துா்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளையும் சண்டிகை என்ற ஒரு உருவமாக வரும்படி வேண்டி நடத்தப்படுவதே நவ சண்டி யாகம் ஆகும். கொடுமையான ஆட்சியினால் ஏற்படும் தீய சக்தியையும், தடைகளையும் அகற்றுவதற்காக ஹோமத்தின் போது துர்கா சூக்தம், தேவி மாஹாத்மியம், நாராயணீயம், துர்கா கவசம், மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம் போன்ற பல்வேறு பாராயணங்கள் நடைபெறுகிறது.

முன் ஜென்ம பாவ தோஷங்கள் நீங்கும்

முன் ஜென்ம பாவ தோஷங்கள் நீங்கும்

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நவ சண்டி யாகத்தில் பங்கேற்பதின் மூலம் முன் ஜென்ம பாவ தோஷங்கள் நிவர்த்தி ஆகும், கல்வி மேன்மை, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், குடும்ப மகிழ்ச்சி, அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும், மன நிம்மதி கிடைக்கும். மேலும் பக்தர்களின் அனைத்து நியாயமான வேண்டுதல்களும் நிறைவேறும், சத்ரு உபாதைகள் நீங்கும், கெட்ட சக்திகள் விலகும்.

சகல சௌபாக்கியம் தரும்

சகல சௌபாக்கியம் தரும்

நினைத்த காரியம் ஜெயமாக விளாம்பழமும், சகலகாரிய சித்திக்கு கொப்பரைத் தேங்காயும், சர்வ வஸ்யத்திற்கு இலுப்பைப்பூவும், ரோக நிவர்த்திக்கு பாக்குப்பழமும், வாக்குப் பலிதத்திற்கு மாதுளம்பழமும், திருஷ்டிதோஷ நிவர்த்திக்கு நாரத்தம்பழமும், சத்ருநாசத்திற்கு வெண்பூசணிக்காயும், நேத்ர ரோக நிவர்த்தி மற்றும் சகல காரிய வெற்றிகளுக்கும் கரும்புத் துண்டும், சகல சம்பத் விருத்திக்கு துரிஞ்சி நாரத்தையும், சோகநாசத்திற்கு எலுமிச்சம்பழமும், பயம் நீங்க நெல் பொரியும், ஞானம் பெற சந்தனமும், வசீகரணத்திற்கு மஞ்சளும், ஆயுள் விருத்திக்கு பசும்பாலும், புத்ர விருத்திக்கு பசுந்தயிரும், வித்தை மற்றும் சங்கீத விருத்திக்கு தேனும், தனலாபம் பெற நெய்யும், பதவி உயர்வு கிடைக்க தேங்காயும், மங்களப் பிராப்திக்கு பட்டு வஸ்திரமும், சஞ்சலமின்மைக்கு அன்னமும, சந்தோஷம் பெற பசஷணமும், அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது.

பக்தர்களுக்கு அழைப்பு

பக்தர்களுக்கு அழைப்பு

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோம பூஜை வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட திரவியங்களுடன், புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குடும்ப சுபிட்சம் ஏற்பட யாக பூஜைகளில் வைத்து பூஜித்த மஞ்சள் கிழங்கு பிரசாதமாக ஸ்வாமிகள் திருக்கரங்களால் வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Aavani Amavasai Nava durga asta bairava homam and Nava chandi yagam at Sri Danvantri arokya peedam at Valajapet in Vellore District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X