For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அச்சன் கோவில் ஐயப்பனின் திருஆபரணம் - தென்காசியில் பக்தர்கள் வரவேற்பு

அச்சன் கோவில் ஐயப்பன் ஆபரணங்கள் தென்காசி காசிவிசுவநாதர் ஆலயத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தென்காசி: அச்சன் கோவில் ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து இரு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் தென்மலை, ஆரியன் காவு , செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிசுவநாதர் ஆலயத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மகோ வர்ஷ திருவிழா நாளை முதல் தொடர்ந்து 10 தினங்களுக்கு நடைபெறுகிறது. அதற்காக கோவில் ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து இரு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் தென்மலை, ஆரியன் காவு , செங்கோட்டை வழியாக தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். பின்னர் இன்று மாலை பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவில் செல்லும் திரு ஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து 10ம் நாள் ஆராட்டு திருவிழா நிறைவு பெற்றவுடன் மீண்டும் ஆபரணங்கள் புனலூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.

அச்சன்கோவில் விழா

அச்சன்கோவில் விழா

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மாலை அணிந்து சபரிமலை சென்று வருகின்றனர். தமிழகத்தில் முருகனின் அறுபடைவீடுகள் போல, கேரளாவில் ஐயப்பனுக்கு ஐந்து ஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் ஆரியங்காவு, குளத்துப்புழா, அச்சன்கோவில் ஆகியவை சபரிமலைக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றவை.

ஐயப்பன் ஆபரணம்

ஐயப்பன் ஆபரணம்

அச்சன்கோவில் ஆலயம் தமிழக எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மஹோற்சவ திருவிழா துவங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அச்சன் கோவில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக ஐயப்பனின் கிரீடம், முகம், மார்பு, கை, கால்கள், உடல் கவசம் மற்றும் வாள் ஆகியவை அடங்கிய ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.

பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் தரிசனம்

தங்கம், வைரம் உள்ளிட்டவை பதிக்கப்பட்ட விலை உயர்ந்த இந்த ஆபரணங்கள் அச்சன் கோவில் செல்லும் வழியில் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் பொது மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

இந்த ஆபரணப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் தென்காசி காசி விசுவநாதசுவாமி கோயில் முன்பு வந்த திருஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அச்சன்கோவில் ஐயப்பனே

அச்சன்கோவில் ஐயப்பனே

இன்று மாலை பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவில் செல்லும் திரு ஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து 10ம் நாள் ஆராட்டு திருவிழா நிறைவு பெற்றவுடன் மீண்டும் ஆபரணங்கள் புனலூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.

English summary
Devottes Special worship performed for Achankovil Gold Jewellery Box at Kasi Viswanathar temple in Tenkasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X