For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேதத்தை உலகிற்கு அளித்த ஆதிசங்கரர் ஜெயந்தி...

திருமயிலையில் சங்கரமடத்தில் சார்பாக ஆதிசங்கரரின் ஜெயந்திநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஆதி சங்கரரின் அவதார தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆதி சங்கரரின் விக்ரகம் சிறிய சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு வேதவிற்பண்ணர்கள் ருத்ரம் முதலான வேதபாராயணம் செய்தபடி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாகும்.

ஊர்வலத்தின் போது ஆதிசங்கரர் இயற்றிய தோடகாஷ்டகம் எனும் ஸ்லோகத்தை இசை நயத்தோடு குழுவாக பாடியபடி தொடர்ந்தனர்.

அத்வைத தத்துவத்தை உலகிற்க்கு நிலைநாட்டிய ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரம், உபநிடதம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவற்றிர்க்கு விளக்கவுரை எழுதியுள்ளார்

 ஆதிசங்கரர் வாழ்கை

ஆதிசங்கரர் வாழ்கை

கிமு ஏழாம் நூற்றாண்டில் இன்றைய கேரளாவில் காலடி எனுமிடத்தில் ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதியனருக்கு மகனாக பிறந்த சங்கரர் கௌட பாதரின் சீடரான கோவிந்த பகவத் பாதரிடம் வேதம், வேதாந்தம் ஆகியவற்றை கற்று தேர்ந்து ஆதி சங்கர பகவத்பாதர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

 அற்புத ஸ்லோகங்கள்

அற்புத ஸ்லோகங்கள்

ஆதி சங்கரர் இயற்றிய தோடகாஷ்டகம், காலபைரவாஷ்டகம், கனகதாரா ஸ்லோகம் போன்றவை மனித குலம் பிறவிப்பினியால் படும் இன்னல்களில் இருந்து விடுபட இயற்றிய அற்புதமான ஸ்லோகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜோதிட உலகத்திற்கு அளித்த கொடை

ஜோதிட உலகத்திற்கு அளித்த கொடை

ஆதிசங்கரர் ஜோதிடத்தில் 12 பாவங்களையும் குறித்து 12000 பாடல்கள் கொண்ட "ஜோதிட காவியம் 12000" எனும் நூல் ஜோதிட உலகிற்க்கு கிடைத்த வரப்பிசாதமாகும். அவற்றுள் தற்போது மூன்றுபாவங்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.

 அவதார தினம்

அவதார தினம்

அதில் "களத்திர பாவகம்" எனும் ஏழாம் பாவமாகிய திருமணம் குறித்த 1000 பாடல்கள் குறிப்பிடத்தக்கதாகும். இன்று சிவ ஸ்வரூபமான ஆதிசங்கரரின் அவதாரதினத்தில் அவரை நினைவு கூர்வதன் மூலம் களத்திர தோஷங்கள் மற்றும் இன்னபிற தோஷங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு வாழலாம்.

English summary
Adi Shankaracharya Jayanti is observed as birth anniversary of Indian Guru and philosopher Adi Shankara. Adi Shankaracharya Jayanti is observed on Panchami Tithi during Shukla Paksha of Vaishakha month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X