For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்னி நட்சத்திரம்: மழை வேண்டி தன்வந்திரி பகவானுக்கு 27 நாட்கள் திருமஞ்சன திருவிழா

அக்னி நட்சத்திரம் தொடங்கும் 04.05.2019 சனிக்கிழமை முதல் அக்னி நட்சத்திர காலம் முடியும் 29.05.2019 வெள்ளிக்கிழமை வரை தன்வந்திரி பீடத்தில் 27 நாட்கள் திருமஞ்சன திருவிழா நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வருகிற 04.05.2019 சனிக்கிழமை முதல் 29.05.2019 வெள்ளிக்கிழமை வரை 27 நாட்கள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தொடர் திருமஞ்சன திருவிழாவுடன் லக்ஷார்ச்சனை, புஷ்பாஞ்சலி வைபவங்கள் நடைபெறுகிறது.

Agni Nachatram: Prayer for rain and special Tirumanjanam

மேற்கண்ட நாட்களில் தினமும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு லக்ஷார்ச்சனையும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை புஷ்பாஞ்சலியும், அன்னப்பாவாடை உற்சவமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் அனைவரும் பெயர், நக்ஷத்திரம், கோத்திரம் தெரிவித்து இறை பிரசாதம் பெறலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

Agni Nachatram: Prayer for rain and special Tirumanjanam

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம் கண்டால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் இன்பமும் நிலைக்கும் ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம் கண்டால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் இன்பமும் நிலைக்கும்

மழை பெய்ய வருண யாகமும், சிவபெருமானுக்கு சீதள கும்பம் மற்றும் ருத்ராபிஷேகமும், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனமும் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Agni Nachatram: Prayer for rain and special Tirumanjanam
English summary
Sri Danvantri arokya peedam conduction 27 days agni nachtram special pooja and Tirumanjam in at Walajapet. 60 wordsTemples across the State have been directed by the Hindu Religious and Charitable Endowments Department to conduct special prayers for rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X