For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐப்பசி அன்னாபிஷேகம் : சுவையான சாப்பாடு வேணுமா... எப்பவுமே சாதத்தை வீணாக்காதீங்க

இறைவன் ஈசனுக்கு இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினமான வரும் 12.11.2019 அன்றுஎல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இன்று அன்னாபிஷ

Google Oneindia Tamil News

சென்னை: எப்போதும் வீட்டிலிருக்கும் வரை தந்தைக்கு அன்னையின் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வெளியில் சென்றிருக்கும்போது அது நன்றாக புரிந்துக்கொள்ளுவார். மேற்கூறிய கருத்தை உண்மையாக்கும்படி இந்த வருட அன்னாபிஷேகம் சில சிவ ஆலயங்களில் இன்றும் சில ஆலயங்களில் நாளையும் நடைபெறுகிறது. ஐப்பசி பௌர்ணமியன்று, அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும். அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்களும் அன்னாபிஷேக நாளில் அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்வது அன்னதோஷம் நீங்கும். மேலும் உணவின் மீது வெறுப்படைய செய்யும் நோயான அன்னதுவேஷம் நீங்கும்.

ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்க்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ரு காரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்னப்பூரனியான பார்வதியை வணங்க காரக கிரகமும் சந்திரனேதான். இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ மகாலட்சுமியை கூட சந்திர சகோதரி என வேதம் குறிப்பிடுகிறது. மேலும் பாசம் அன்பு போன்ற உணர்ச்சிகளை குறிக்கும் கிரகமும் சந்திரனேதான்.

பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மாத்ரு காரகன் எனவும் இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மாத்ரு காரகன் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆக சந்திரன் உச்சமாவதுகூட சுக்கிரனின் வீட்டில்தான். ஆக சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் எப்பொதும் ஒரு தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும். துலா லக்னமாக இருந்து தர்மகர்மாதிபதியான சந்திரன் இரண்டாம் பாவத்தில் நீசம் பெற்றால் விருந்து என்ற பெயரில் உணவு பொருட்களை வீணடிப்பார்.
எந்த ராசி நேயர்களாக இருந்தாலும் சந்திராஷ்டம தினங்களில் சாப்பிடாமல் வீணடிப்பார்.

பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம்

பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம்

எப்போதும் வீட்டிலிருக்கும் வரை தந்தைக்கு அன்னையின் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வெளியில் சென்றிருக்கும்போது அது நன்றாக புரிந்துக்கொள்ளுவார். மேற்கூறிய கருத்தை உண்மையாக்கும்படி இந்த வருட அன்னாபிஷேகம் சில சிவ ஆலயங்களில் இன்றும் சில ஆலயங்களில் நாளையும் நடைபெறுகிறது. தந்தையான சூரியன் இருப்பது சுக்கிரனின் வீடான துலா ராசியில் ராகு சாரத்தில். ஆனால் மாத்ரு காரகனான சந்திரன் அஸ்வினி நக்‌ஷத்திர சாரத்தில் 180 பாகையில் சம சப்தமமாக நின்று மாத்ருகாரகனும் பித்ருகாரகனும் பௌர்னமி யோகத்துடன் ஓருவரை ஒருவர் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் என்பற்கிணங்க கிரஹ அமைவு பெற்ற சந்திர பலம் பெற்ற மங்கள வார பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் அமைந்திருக்கிறது.

சுவையான உணவு சுக்கிரன்

சுவையான உணவு சுக்கிரன்

ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். சுவையான உணவு வகைகளின் காரகர் சுக்கிரன் ஆவார். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைவதும் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் உணவை வீணாக்குவார்கள்

யார் உணவை வீணாக்குவார்கள்

சந்திர பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆறு எட்டு 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் தொடர்புகள் பெற்றோ அல்லது பாதகாதிபதி தொடர்பு பெற்று அல்லது நீசமடைந்து நிற்க அவர்களுக்கு பால், தயிர், அரிசி சோறு போன்ற பொருட்களை அடிக்கடி வீணடிப்பதால் அன்னதோஷம் ஏற்படும். கால புருஷனுக்கு இரண்டாம் இடமான ரிஷபத்திலும் உணவை குறிக்கும் சந்திரனின் ஆட்சிவீடான கடகத்திலும் அசுப கிரகங்கள் நின்றால் அந்த ஜாதகர் உணவுப்பொருட்களை வீணடிப்பார்.

கோதுமை வீணாகும்

கோதுமை வீணாகும்

ஒரு ஜாதகரின் இரண்டாம் பாவத்தில் சூரியன் அசுப தொடர்பு பெற்று அல்லது பாதகாதிபதியாகி நிற்க கோதுமை மற்றும் கோதுமையில் செய்த உணவு பொருட்கள், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை வீணாக்கிடுவார். அதுவே காலபுருஷனுக்கு ஆறு எட்டு 12ஆம் வீடாக மேற்கண்ட உணவுகளை வெறுத்து ஒதுக்குவார்.

இனிப்பு கார பலகாரங்கள் வீண்

இனிப்பு கார பலகாரங்கள் வீண்

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க அந்த ஜாதகர் ஊறுகாய், வடான், வத்தல் வகைகள், சூடான சாப்பாடு வகைகளை வீணாக்கிடுவார். ஒருவர் ஜாதகத்தில் புதன் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நின்றால் பசுமையான காய்களை சமைக்காமலேயே வீணக்கிடுவார். ஒருவர் ஜாதகத்தில் குரு அசுபராகி இரண்டில் நிற்க நெய்யில் செய்த இனிப்பு வகைகள், பழங்கள் முதலியவற்றை வீணடிப்பார்.

சனி ராகு கேது

சனி ராகு கேது

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அசுபராகி இரண்டாம் பாவத்தில் நிற்க விருந்து மற்றும் உணவகங்களில் உண்டு வீட்டு உணவுகளை வீணடிப்பார். ஒருவர் ஜாதகத்தில் சனி இரண்டாம் பாவத்தில் அசுப தொடர்பு பெற்று நிற்க எண்ணையில் பொறித்த உணவுகள் கிழங்கு வகைகள் அளவுக்கதிகமாக செய்து வீணடிப்பார். மேலும் பழைய உணவுகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்வார். ஒருவர் ஜாதகத்தில் ராகு இரண்டாமிடத்தில் நிற்க மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்டு பாரம்பரிய உணவுகளை வீணடிப்பார். ஒருவர் ஜாதகத்தில் இரண்டில் கேது நிற்க அவர் உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடைசியில் ஏதோ ஒரு பழைய உணவை உண்டுவிடுவார்.

அன்னதோஷம் நீங்கும்

அன்னதோஷம் நீங்கும்

அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்க்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற பச்சரிசி வாங்கி கோயிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்து பேருக்காவது அன்னதானம் அளிக்கலாம். உணவுப்பொருட்களை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரனியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். ஆயுளுக்கும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.

அன்னதோஷம் நீக்கும் பரிகாரம்

அன்னதோஷம் நீக்கும் பரிகாரம்

அந்தந்தவருட தான்யாதிபதியை பஞ்சாங்கபடி வணங்கிவர உணவு பஞ்சம் நீங்குவதோடு உணவு வீணாவதும் குறையும். சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணவது குறையும். அவரவர்கள் கிராம தேவதைக்கு பொங்கல் வைத்து வழிபட உணவு வீணாவது குறையும். முன்னோர்களின் திதி நாட்களில் பிராமணர்களுக்கு அன்னதானம் அளிப்பது அன்ன தோஷத்தோடு பித்ரு தோஷத்தையும் போக்கும்.

அன்னையின் ஆசி தேவை

அன்னையின் ஆசி தேவை

உணவின் காரகனான சந்திரனுக்கும் ஜெயந்தி நாள் அன்னாபிஷேக தினம் செவ்வாய்கிழமை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சந்திர ஜெயந்தி இன்று திங்கட்கிழமை மாலை நேரத்திற்கு மேல் பவுர்ணமி வருகிறது இன்று சந்திர ஓரையில் வீட்டில் உள்ள தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பின்பு அவர்களையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்று நவக்கிரகங்களில் வீற்றிருக்கின்ற சந்திர பகவானை வெள்ளை வஸ்திரம் சாத்தி, வெள்ளை அல்லி மலர்களால் அர்ச்சனை செய்து புஜித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கி சந்திர பகவானின் புரண அருளை பெறலாம்.

ஸ்ரீரங்கநாதர் தரிசனம்

ஸ்ரீரங்கநாதர் தரிசனம்

சுக்கிரனின் மாதமான ஐப்பசி மாதத்தில் சூரியனும் சந்திரனும் சம சப்தமமாக பார்வை பெற்ற தினத்தில் அமைந்த அன்னாபிஷேகம் மற்றும் சந்திர ஜெயந்தியில் அம்மையப்பரை தரிசித்து தாயின் ஆசியையும் குடும்ப மகிழ்ச்சியும் பெற்று உணவு பஞ்சம் நீங்கும். உலகத்துக்கே படியளந்துவிட்டு படியை தலையில் வைத்து படுத்திருக்கும் சுக்கிர ஸ்தல மூர்த்தி ஸ்ரீரங்கநாதரை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.

English summary
The Annabishekam will be held on November 11 at the world-famous Gangaikonda Cholapuram Brihadisvara temple. Every bargain device on top of a Shiva Linga is considered a Shiva Linga. It is the belief of the Hindus that the simultaneous worship of millions of Lord Shiva lingam is available.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X