For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐப்பசி மாதத்தில் என்னென்ன விஷேசம் : காவிரியில் புனித நீராடினால் என்னென்ன நன்மைகள்

துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.

Google Oneindia Tamil News

மதுரை: ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவார்கள். இந்த மாதத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், தீபாவளி, கந்தசஷ்டி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகா புண்ணியம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஐப்பசி மாதம் முழுவதும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். இந்த மாதத்தில் காவிரியில் புனித நீராடுவதால் புண்ணியம் அதிகரிக்கும்.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்று விவரிக்கிறது புராணம். ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்வதால் நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் கடந்து ஓடிப்போகும், காவிரியில் நீராடும் போது ஆத்ம பலம் தேக பலம் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

Aippasi: Thula snanam importance and benefits holy bath in Cauvery river

ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். இந்த மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரிய பகவான், ஐப்பசி மாதத்தில் நீச்சமடைகிறார். இதனால் இந்த மாதத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும். இதனை அறிந்தே நம் முன்னோர்கள் பருவகால நிலைகளை நான்கு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர்.

சித்திரை மழை பேய்ஞ்சு கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும் என்பது போல், ஐப்பசி மாதம் அடைமழை காலத்தின் தொடக்க காலம் என்றும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் மாதம் என்றும் நம் சித்தர்கள் கணித்து கூறியுள்ளனர். ஐப்பசி மாதத்தில் அனைத்து புண்ணிய நதிகளும் காவிரியில் சங்கமிப்பதாக ஐதீகம். இதனால் இம்மாதம் முழுவதும் காவிரி நதி பாய்ந்தோடும் அனைத்து இடங்களிலும் மக்கள் நீராடுவது வழக்கம். மற்ற மாதங்களில் காவிரியில் நீராட முடியாவிட்டாலும் கூட ஐப்பசி மாதத்தில் ஒரே ஒரு நாளாவது நீராடுவது சிறப்பாகும்.

ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம். அழகு, ஆரோக்கியம், கல்வி, செல்வ வளம், வலிமை, சந்தான பாக்கியம் ஆகியவற்றை இந்த துலா ஸ்நானம் தருவதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஐப்பசி மாத கடைசி நாளன்று மயிலாடுதுறையில் காவிரி நீராடல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை காவிரி கடை முழுக்கு என்றழைக்கின்றனர்.

ஐப்பசி மாதத்தில் ஏதாவது ஒரு நாளன்று ஸ்ரீரங்கம் சென்று காவிரியில் நீராடி ஸ்ரீரங்கநாதர் மற்றும் ஸ்ரீரங்கநாயகி, ஆண்டாள் தாயாரை வழிபட்டால் வாழ்வில் சகல பாவங்களும் நீங்கும். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இங்கு நீராடி ஸ்ரீரங்கநாதரையும் தாயார்களையும் வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீரும், பொருளாதார நிலையும் மேம்படும். மேலும் திருமணமாகாதவர்களுக்கு பிடித்தமான மனதிற்கினிய வாழ்க்கைத் துணையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாதம் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்த மாதம். இந்த மாதத்தில்தான் நவராத்திரி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது போல், இந்த ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும். முருகப்பெருமான், தீமையின் உருவமாக விளங்கிய சூரபத்மனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்று ஆட்கொண்டதன் அடையாளமான கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதும் இம்மாதத்தில் தான்.

நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விரதமுறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும். இந்த விரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.

ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை கண்குளிர தரிசித்தால் கோடி புண்ணியம் கிட்டும். பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த ஐப்பசி மாதத்தில் ஒருநாளாவது காவிரியில் நீராடுங்கள் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்வதால் நரம்பு தளர்ச்சி குறையும். நோய்கள் கடந்து ஓடிப்போகும், காவிரியில் நீராடும் போது ஆத்ம பலம் தேக பலம் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

நம் வாழ்வில் துன்பங்களை போக்கி வசந்தத்தையும் வெளிச்சத்தையும் கொடுக்கும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதும் இம்மாதத்தில் தான். தீபாவளித் திருநாளன்று அனைத்து நீர் நிலைகளிலும் கங்கா தேவி தோன்றுவதாக ஐதீகம். இதனாலேயே நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள், அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவதுண்டு. இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். மேலும், திருமணமான புதுமணத் தம்பதியர்கள் தலை தீபாவளி என்னும் முதல் தீபாவளி கொண்டாடுவதும் இம்மாதத்தில்
தான்.

வடமாநிலங்களில் தீபாவளித் திருநாள் நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான திரயோதசி நாளன்று தனத்திரயோதசி மற்றும் எம தீபம் ஏற்றி வைக்கின்றனர். தேய்பிறை திரயோதசி நாள் தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. இந்தநாள் மஹாலட்சுமியின் திருவருளை முழுமையாக நம்மிடம் சேர்க்கும் நாள் ஆகும். இந்நாளில் வாங்கும் பொருட்கள் பன்மடங்காக பெருகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆகவே அன்றைய நாளில் தங்கம் முதல் அத்தியாவசிய பொருட்கள் என நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதும், முதலீடு செய்வதும் வெகு சிறப்பாகும்.

ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்? ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?

இரண்டாம் நாளான சதுர்த்தசி தினத்தில் நரக சதுர்த்தசி மற்றும் தீபாவளி திருநாளும், மூன்றாம் நாளான அமாவாசை அன்று கேதார கவுரி விரதமும், நான்காம் நாளான பிரதமை நாளில் கார்த்திகை ஸ்நானமும், ஐந்தாம் நாளான துவிதியை தினத்தில் எமத் துவிதியை என்றும் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

English summary
The month of Aippasi is celebrated as the month of Libra. Ancestors have said that bathing in the Cauvery during the month of Aippasiis a great blessing. Legend has it that bathing in the Cauvery during the month of Aippasi is called Tula bath. It is said that all the holy theerthams in the world flow into the river Cauvery throughout the month of Ipasi. The holy bath in Cauvery during this month will increase the blessings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X