For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட்சய திருதியை 2019: தங்கம், வெள்ளி, பிளாட்டினம் வாங்க நல்ல நேரம்

அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியின் அம்சமான தங்கமும், வெள்ளியும் வாங்கலாம். குரு ஓரை, சுக்கிர ஓரை நேரங்களில் தங்கநகைகளை வாங்கலாம்.

Google Oneindia Tamil News

துரை: அட்சயதிரிதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். தங்கம் மட்டுமல்ல நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கினாலும் செல்வம் பெருகும். கல் உப்பு, பச்சரிசி, மஞ்சள், ஆடைகள் வாங்கலாம். குரு, சுக்கிர ஓரைகளில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் வாங்கலாம்.

ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3வது திதியாக திருதியை திதி வருகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' என்று அழைக்கிறோம். இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை நாளை மே 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Akshaya Tritiya 2019: Muhurat to Buy Gold

அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம்.

மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.

Akshaya Tritiya 2019: Muhurat to Buy Gold

தங்கம் மற்றும் வெள்ளி நகையை இரு கிரகங்களின் அம்சமாக கொள்ளலாம். அதாவது மஞ்சள் நிறமான தங்கம் குரு கிரகத்தை காட்டுகிறது. தங்கத்தில் இருந்து செய்யப்படும் நகைகள் மற்றும் வெள்ளி உலோகம் சுக்கிரனை குறிக்கிறது. எனவே அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்க விரும்புபவர்கள் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம்.

தங்கம், வெள்ளி வாங்க நல்ல நேரங்கள்

சுக்கிர ஓரை காலை 8 முதல் 9 வரை தங்கம் வாங்கலாம். பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாங்கலாம். குரு ஓரை காலமான பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை தங்கம், வெள்ளி வாங்கலாம்.

English summary
Gold is the most precious metal since Vedic time. It is the symbol of power, wealth and the prosperity. In Hinduism, the wealth, including gold and jewels, can be accumulated with the blessings of Goddess Lakshmi. Goddess Lakshmi is the consort of Lord Vishnu. Akshaya Tritiya 2019 celebrate on tomorrow May 7th,2019 auspicious Muhurat time to Buy Gold.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X