For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வ யோகங்களைத் தரும் அக்ஷய த்ரிதியை

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் த்ரிதியை, 'அக்ஷய த்ரிதியை எனப்படுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ' அக்ஷயம்' என்றால் வளர்வது என்றும்,எப்போதும் குறையாதது என்றும் அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் என்றும் பொருள்.
இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தர்மங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.

உலக உயிர்களுக்குத் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியே உணவு வழங்கும் மேன்மையை உலக மக்களுக்கு உணர்ந்துதானே அன்னபூரணியாக கையில் உணவு பாத்திரம் -கரண்டி ஏந்தி காட்சி தருகிறாள்!

வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அக்ஷய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அக்ஷய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அக்ஷய த்ரிதியை தினத்தில்தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இன்றைய தினம் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை வாங்க மட்டுமன்றி, வணிகத்தினைத் துவங்குதல், பூமி பூஜை போடுதல், புதிய கலையினைக் கற்க ஆரம்பித்தல் போன்றவற்றுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது.

Akshaya Tritiya :A complete guide to the Maha Lakshmi stotram

யோகம் தரும் அக்ஷய த்ரிதியை

இந்தவருட அக்ஷய த்ரிதியை நாளில் பல உன்னத யோகம் தரும் கிரக அமைப்பு காணப்படுகிறது. மீன ராசியில் குருவீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் கன்னியில் நிற்க்கும் குரு சம சப்தம பார்வையில் சுக்கிரனை பார்க்கும் நிலையில் அக்ஷய த்ரிதியை வருகிறது. மேலும் உச்ச சூரியனுடன் புதன் சேர்க்கை பெற்று புத ஆதித்யயோகம் பெற்று நிற்கிறது. அதுமட்டுமின்றி சந்திரன் சுக்கிரன் வீட்டில் உச்சம் பெற்று செவ்வாயுடன் சேர்ந்து சந்திர மங்கள யோக அமைப்புடன் நிற்கிறது.

அன்னபூரணி

அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது உணவு. உணவின்றேல் உடல் வாழாது. உடலை இடமாகக் கொண்டு செயல்படும் உயிரும் நிலைபெறாது. அதனால் உணவு உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. அன்னதானமே உலகில் செய்யப் படும் தானங்களில் மிக உயர்ந்த தானமாக இருக்கிறது. உணவு வழங்கும் புண்ணியமானது, ஆன்மாவை பிறவிகள்தோறும் தொடர்ந்து வந்து பலன் தருகிறது. அதிலும் ஞானிகளுக்கு அளிக்கும் உணவு ஆயிரம் மடங்கு புண்ணியம் தருவதாகும்.

அன்னதானம்

உலகின் சிறப்பான நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் ஒருநாள் இருப்பதைப் போல அன்னதானத்திற்கு உரிய சிறப்பு நாளாக அக்ஷய த்ரிதியை நாள் கருதப்படுகிறது. அக்ஷயத்ரிதியை என்ற இரண்டு சொற்களையும் சேர்த்து, அக்ஷய த்ரிதியை என வழங்குகிறார்கள். சித்திரை மாதத்து வளர்பிறை மூன்றாம் நாளான த்ரிதியை நாளையே அக்ஷய த்ரிதியை என்றுகொண்டாடுகிறோம்.

ஜோதிட ரீதியாக அக்ஷய த்ரிதியை:

ஜோதிட ரீதியாக பார்க்கும் போது நவக்கிரகங்களில் சூரியனை பித்ரு காரகனாகவும் சந்திரனை மாத்ரு காரகனாகவும் அழைக்கின்றோம். இவ்விரண்டு கிரகங்களும் ஓரே நாளில் உச்சபலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய த்ரிதியை என அழைக்கப்படுகிறது. அதாவது மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நன்னாள் ஆகும்.

சூரியன், சந்திரன்

மேலும் சூரியன், சந்திரன் இவர்கள் இருவரும் பலம் பெற்றும் இருக்கும் நன்னாள் அக்ஷய த்ரிதியை என்பதால் அதில் நாம் மேற்கொள்ளும், பூஜைகளும், தானதர்மங்களும், தர்ப்பணங்களும், தொழில் மற்றும் திருமண நிகழ்வுகளும், பொருட்களை வாங்குதல் என அனைத்தும் பன்மடங்காகும், தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் பலன்களும் பன் மடங்கு பெருகி நம்மை வாழ்விக்கும். தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள். இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும், அல்லவா?

நன்மைகள் கிடைக்கும்

அட்சய திருதியை அன்று சூரிய ஆதிக்கம் பெற்ற கோதுமை, சந்திரனின் ஆதிக்கம்பெற்ற அரிசி, பார்லி சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சம் வராது. நமக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருந்தாலே பிறகு அன்னதானம் தருகிற நிலை அமையும். இந்த அன்னதான புண்ணியத்தால் முன்ஜென்ம பாவங்கள் குறைந்து, பொன் - பொருள் சேரும். அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும். புண்ணியங்கள் செய்தால்தான் பல நன்மைகள் நம் நிழல் போல் பின் தொடரும்.

நன்மை கிடைக்கும்

சூரியனுக்கு அதிதேவதை சிவபெருமான் ஆவார். சந்திரனுக்கு அதிதேவதை அன்னப்பூரணி அல்லது அம்பாள் ரூபமான பெண் தெய்வம் ஆகும். மேலும் சூரியனை சூரிய நாராயணன் எனவும் (விஷ்னு அம்சம்) மகாலக்ஷமியை சந்திர சகோதரி எனவும் வழங்கப்படுகின்றது. எனவை இந்த நாளில் சிவ பார்வதியினையோ அல்லது லக்ஷமி நாராயணரையோ வணங்க வாழ்வில் வளம் பல சேரக்கும். ஸ்ரீராமர் சூரிய குலத்தில் உதித்தவர் ஆகும். சீதா தேவி சந்திர குலத்தில் பிறந்தவர் ஆவார். எனவே இந்த வெள்ளிக்கிழமையில் வருகின்ற அக்ஷய த்ரிதியை நன்னாளில் மகாலக்ஷமி ஸ்வருபமான சீதாதேவியையும் வணங்குவது வாழ்வில் இன்பம் பல சேர்க்கும் என்பது நிச்சயம்.

English summary
Akshaya Tritiya is the most glorious and auspicious day in the luni-solar calendar that most of the Indians follow. Akshaya Tritiya is a day kept aside to thank the Gods for the bounty and prosperity received in the past year and to pray to them to help you prosper even more.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X