• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய விவசாயிகள் தினத்தில் சக்தி வாய்ந்த சமித்துகளை கொண்டு சகல தேவதா ஹோமம்

|

ராணிப்பேட்டை: விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. நம் நாடு விவசாய நாடு. விவசாயம் வளர்ந்தால் தான் தேசம் வளரும். ஆண்டுதோறும் டிசம்பர் 23ஆம் தினத்தை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் இயற்கையை போற்றும் வகையில் சக்தி வாய்ந்த சமித்துகளை கொண்டு வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சகல தேவதா ஹோமம் நடைபெறுகிறது. விவசாயிகளின் பிரச்சினை தீரும் வகையிலும் விவசாயிகள் சகல நன்மைகளும் பெற வேண்டியும் இந்த ஹோமம் நடைபெறுகிறது.

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும். ஆகவே, நாம் அனைவரும் விவசாயிகளின் கடின உழைப்பை போற்ற வேண்டும். அவர்களுக்கு உயர்வுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

All Devata Homa with powerful samiths on National Farmers Day

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றார், திருவள்ளுவர். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றான் பாரதி. அப்பெருமக்கள் போற்றிய வேளாண்மையை நாம் போற்றுவோம்.

நாளை 23.12.2020 புதன் கிழமை காலை 10 மணிக்கு விவசாய மக்கள் நலன் வேண்டி விவசாயிகள் தினத்தில் இயற்கை வளம் வேண்டியும் செடி கொடிகள் மரங்கள் ஆரோக்கியம் வேண்டியும் சுற்றுப்புற சூழல் பசுமையாக இருக்க வேண்டியும் அனைவரும் அனைத்தும் பெற்று ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் ஐஸ்வர்யம் பெற்று வாழவும்,பிணி பீடைகள் ஒழியவும் பல்வேறு சக்தி வாய்ந்த சமித்துகளை கொண்டு சகல தேவதா ஹோமம் நடைபெற உள்ளது.

தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி கணபத, ஸ்ரீ பாரத மாதா வீரப்ரம்ஹங்காரு, ஸ்ரீ சித்தய்யா ஸ்வாமிகள்,மஹான் ஸ்ரீ குருநானக் மஹான் புத்தர்பிரான்,பகவான் மஹாவீர்,பகவான் ஸ்ரீ ரமணர் ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்,மஹான் குழந்தையானந்த ஸ்வாமிகள்,பால் முனீஸ்வரர்,ஸ்ரீ மஞ்சமாதா ஏகரூப ராகு கேது,ஸ்வாமிகளின் பெற்றோர் ஆலயம,ஸ்ரீநவகன்னிகைகள்,அத்ரி பாதம் ஸ்ரீ அனுசுயாதேவி,ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி,மஹான் வள்ளலார்,ஷீரடி தங்கபாபா
காஞ்சி ஜகத்குரு , மகா பெரியவர் மஹான் ஸ்ரீ ராகவேந்திரர், சூரிய பாபா,ஸ்தல விருட்சம் புன்னைமரம்,பாபா தொனி துளசி பிருந்தவன்,ஸ்ரீ லக்ஷ்மி வராஹர்.ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி ஸ்ரீ தன்வந்திரி விநாயகர்,ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர், ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத தர்மசாஸ்தா பாதாள ஸ்வர்ண சனீஸ்வரர் (தங்க சனீஸ்வரர்) ஸ்ரீ சப்த மாதர்கள் 24 மணி நேர அணையா யாக குண்டம் யக்ஞ ஸ்வரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி ஸ்ரீ வாஸ்து பகவான் அஷ்ட திக் பாலகர்கள் பஞ்சபூதங்கள்
பஞ்சமுக வராஹி (காளி,சூலினி, வராஹி, பகுளாமுகி, திரிபுர பைரவி) ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி, ஸ்ரீ சரபேஸ்வரர் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அஷ்ட பைரவர்கள் குரோதன பைரவர், சண்ட பைரவர், ருரு பைரவர், உன்மத்த பைரவர், அசதாங்க பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் சம்ஹார வைரவர் மற்றும் மஹா காலபைரவர் ஸ்ரீ மரகதேஸ்வரர் ஸ்ரீ மரகதாம்பிகை ஸ்வர்ண காலபைரவர் ஸ்வர்ணாகர்ஷணபைரவர் ஸ்ரீ கார்த்தவீர்யாஜ்ஜூனர், ஸ்ரீ சுதர்சன பெருமாள் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி, கெஜ லட்சுமி, ஸ்ரீ சத்ய நாராயண பெருமாள், 468 சித்தர்கள் சிவலிங்க ரூபம், மாதா தங்க அன்னபூரணி, ஸ்ரீ கார்த்திகை குமரன்,ஸ்ரீ காயத்ரி தேவி,ஸ்ரீ தத்தாத்ரேயர்,ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்,ஸ்ரீ வேதாந்தா தேசிகர்,ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ லக்ஷ்மி குபேரர்,அஷ்ட நாக கருடன்,ஸ்ரீ நவநீத கிருஷ்ணர்,ஸ்ரீ பாதம்,ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா அவதார் பாபா,கல்யாண ஸ்ரீ நிவாசர் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்,செந்தூர ஆஞ்சநேயர் போன்ற ரிஷிகள், மகான்கள், சித்தர்கள், முனிவர்கள்,இயற்கை தாவரங்கள், சைவம், வைணவம், சாக்த, சௌரம்,கௌமாரம்,காண பத்தியம், போன்ற ஆறு மதத்திற்கு உரிய தெய்வங்களை வேண்டி இயற்கை வளம், விவசாய மக்களின் நலன் வேண்டி,சகல தேவதா ஹோமம் சக்தி வாய்ந்த சமித்துகளை கொண்டு நடை பெறுகிறது

All Devata Homa with powerful samiths on National Farmers Day

ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன. சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமான வில்வம் சமித்து நாராயணனுக்குபிடித்த துளசி சுக்கிரனுக்கு பிடித்த அத்தி சமித்து புதனுக்குப் பிடித்த நாயுருவி சமித்து சந்திரனுக்குப் பிடித்த பலா மர சமித்து அதே போன்று அரசரமர சமித்து குருவிற்குப் பிடித்தது. வன்னிமர சமித்து சனீஸ்வரனுக்குப் பிடித்தது. அருகம் புல் விநாயகருக்கும், ராகுவுக்கும் பிடித்தது மாமர சமித்து, சர்வ மங்களங்களையும் சித்திக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சமித்துக்களை கொண்டு சகல தேவதா ஹோமம் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருள் ஆணைப்படி இயற்கையை கொண்டு இறைவனை வழிபட்டு இயற்கை வளம்பெற நடைபெற உள்ளது. தொடர்புக்கு 94433 30203.

All Devata Homa with powerful samiths on National Farmers Day

சனிப்பெயர்ச்சி மகா யாகம்

நிகழும் ஶ்ரீ சார்வரி வருஷம் மார்கழி மாதம் 12ம் நாள் 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05:22 மணிக்கு உத்தராட நட்சத்திரம் 1ம் பாதம் தனுசு ராசியிலிருந்து, உத்தராட நட்சத்திரம் 2ம் பாதம் மகர ராசிக்கு சனி பகவான் இடபெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு வருகிற 27.12 2020 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சனி பெயர்ச்சி மகாயாகம் நடைபெறுகிறது. பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் மற்றும் சனி திசை சனி புக்தி நடப்பவர்கள் அவசியம் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

English summary
We celebrate December 23rd every year as National Farmers' Day. On this day all the deva homam with powerful samiths in honor of nature. The homa is held to solve the problem of the farmers and to get all the benefits to the farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X