For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகாசி அமாவாசையில் பில்லி, சூன்யம், செய்வினை போக்கும் நவ துர்கா ஹோமம்

அமாவாசையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்15.05.2018 அன்று காலை நவதுர்கா ஹோமம், ஸ்ரீ ஐஸ்வர்ய பிரித்யங்கிரா தேவி ஹோமம்

Google Oneindia Tamil News

வேலூர்: வைகாசி அமாவாசையை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 15.05.2018 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு அமாவாசையை முன்னிட்டு நவதுர்கா ஹோமம், ஸ்ரீ ஐஸ்வர்ய பிரித்யங்கிரா தேவி ஹோமம், மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

சமஸ்கிருதத்தில் 'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.

Amavasai Nava durga homam at Sri Danvantri arokya peedam

நவதுர்கா ஹோமம், ஸ்ரீ பிரித்யங்கிரா தேவி யாக பலன்கள்:

பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது.

இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர்.

இந்த நவதுர்கா ஹோமத்தில் சிறப்பு திரவியங்கள் சேர்க்கப்படவுள்ளன. மேற்கண்ட யாகங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து பிரசாதம் வழங்க உள்ளார். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்போன்- 9443330203.

English summary
Amavasai Nava durga homam at Sri Danvantri arokya peedam at Valajapet in Vellore District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X