For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இழந்த செல்வத்தை மீட்டுதரும் அனந்த. சதுர்த்தசி விரதமும் அனந்த பத்மநாப ஸ்வாமி தரிசனமும்!

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

அனந்த விரதம் மிக மகிமை வாய்ந்த, சிறப்புமிக்கதொரு விரதம். இது ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயகசதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. நம் கர்மவினைகளின் காரணமாக, நாம் இழந்த பொருட்களை திரும்பப் பெற உதவும் நல்லதொரு விரதம் இது. இதன் மகிமைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, பாண்டவர்களுக்கு கூறி அருளியிருக்கிறார்.

'அனந்தன்' என்பது ஸ்ரீ ஆதிசேஷனின் திருநாமமென்றாலும்,. அனந்தன் மேல் அறிதுயில் கொண்டருளும் அனந்த பத்மநாப ஸ்வாமியைக் குறித்தே இந்த விரதம் செய்யப்படுகிறது. வாழ்வில் கர்ம வினைகளின் காரணமாக நாம் இழந்தவற்றைப் பெற உதவும் அற்புத விரதம் இது.

anantha chaturdasi sri anantha padmanabha vratha

முதலில் இந்த விரத மகிமையைப் பார்க்கலாம்.

விரத மகிமை:

பாண்டவர்கள், சூதால் தம் நாடு நகரங்கள் யாவையும் தோற்று மிகத்துன்புற்று, வனவாசத்தில் அலைந்துழலும் வேளையில் பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், தம் மனவேதனைகளை ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவிடம் முறையிட்டு, தம் துன்பங்களில் இருந்து விடுதலையடையும் மார்க்கத்தைக் கூறி அருள வேண்டினார். அப்போது ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா, 'அனந்த விரதம்' அனுஷ்டித்தால் துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்று கூற, யுதிஷ்டிரரும், 'அனந்தன் என்பவர் யார்?' என்று வினவினார்.

அதற்கு கண்ணபிரான், "நானே இவ்வுலகனைத்துமாயிருக்கிறேன். நானே அனந்தன். வேறு எவருமில்லை. நானே அனந்தனாயிருந்து இப்பூவுலகை தாங்குகிறேன். குந்தி மைந்தனே! தேவர்கள், ரிஷிகள், மலைகள், அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்ரர்கள் அனைத்தும் என் வடிவமே!!" என்றார்.

அனந்த பத்மநாப விரதம்

பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கிரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாளே இது.
முதலில் யமுனைக்கு பூஜை செய்ய வேன்டும். பிறகு 14 தர்பைகளால் அனந்தன் உருவம் அமைத்து( தலை பின்னல் மாதிரி பின்னி) ஐந்து தலைகளுடன் கலசத்தில் வைத்து 14 முடியுள்ள பட்டு கயிற்றையும் 14 ஆவரண தேவதைகளையும் ஆவாஹனம் செய்து அக்கயிற்றை இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. பிராமணருக்கு தக்ஷிணை தாம்பூலம் தந்து 14 ஆண்டுகள் கழித்து உத்யாபனம் செய்ய வேண்டும். அனந்தன் அருளால் அனந்தமான பாக்கியம் பெறலாம்.
ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் பதினான்கை, ஏழைகளுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத அளவுக்கு செல்வங்கள் வந்து சேரும்.

ஜோதிடத்தில் ஆதிசேஷன் (ராகு):

ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி

ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில் பூமேடை தனில் துயிலும் ராஜயோகம் போற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய்

ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்

இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்

தேமேவு பர்வதமா யோகமாகும்

சீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே...

தமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததான "ஜாதக அலங்காரம்" ராகுவைப் பற்றி குறிப்பிடும் மேற்கண்ட பாடல்

இந்த பாடலின் முதல் மூன்று வரிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் ராகு இருந்து அதனுடைய தசை வரும் போது அந்த ஜாதகருக்கு " பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம்" எனச் சொல்லுகிறது.

ராஜயோகம் அளிக்கும் ராகு:

லக்னத்தில் ராகு/கேது நிற்க பிறந்தவர்கள், லக்னம் ஸர்ப கிரஹங்களின் நக்ஷத்திர சாரத்தில் அமைந்தவர்கள் ஆகியவர்கள் எல்லாம் சமூக கட்டுபாடுகளை தகர்தெறிந்து தனது முன்னேற்றமே குறிக்கோளாக கொண்டிருப்பார்கள்.
எப்படியாவது லட்சியத்தை அடையும் லட்சியவாதிகளாக இருப்பார்கள்.

"ராகுவைப் போல் கொடுப்பாரில்லை" என்று சொல்லுப்படுகிறது. அரசாங்கத்தில் பதவி-புகழ் இவற்றை பெறுவதற்கும் அதிகார அந்தஸ்தை அடைவதற்கும் உலகியல் விஷயங்களில் அறிவைத் தருவதற்கும் உள்ளத்தில் தௌவை தருவதற்கும் அனைத்துலகிலும் பயணம் செய்வதற்கும் ராகு பலம் வேண்டும்.

தந்தை வழி பாட்டனாருடைய சொத்துகள் எல்லாம் அனுபவிப்பதற்கும் கூட ராகுவின் பலம் வேண்டும். மேலும் பலம் பெற்ற ராகு ஓர் ஆண் மகனுக்குப் பெண்கள் மூலம் சுகத்தையும் செல்வத்தையும் சோர்த்து வைப்பான் ஸ்பெகுலேஷன் துறை மூலம் ஒருவனைக் கோடீஸ்வரனாக்குவான் ராகு.

அன்னியமொழி பேசுபவர்கள் மூலம் அதிகம் லாபங்களை கொடுப்பவர் ராகுபகவான் ஆகும். கெட்ட வழிகளில் கூட ஒருவனை பொருளாதாரத்தில் உயர்த்துவதில் ராகுவிற்கு நிகர் ராகுவேதான்.

உலகம் முழுவதும் சுற்றி உயர் புகழ் பெறவும் பல வித மொழியினாலும் பாராட்டப்படவும் அதிகாரத்துடன் கூடிய அந்தஸ்து இவற்றை அடையவும் பொருள் வளத்தில் செழிப்படையும் அனைத்துலகிலும் ராஜயோகத்தை அளிப்பவர் ராகு.

அனந்த விரதத்தில் கட்டிக்கொள்ளும் சரடு எனும் நூல் ராகுவின் ஆதிக்கம் பெற்றதாகும். நூல், கயிறு, கொடி போன்றவற்றின் காரகர் ராகு என்பது குறிப்பிடத்தக்கது.

அனந்த விரதம் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக வருகிறது. அதற்குக் காரணம் மங்களம் தரும் செவ்வாய் கிழமை. செவ்வாய் வேகத்தை குறிக்கும் கிரகமாகும். ராகுவோ அதிவேகத்தை குறிப்பவர்.

சதய நட்சத்திரத்தில் சந்திரனும் சந்திரனின் வீட்டில் ராகுவும் பயனிக்கும் காலத்தில் வருகிறது. திருவாதிரை, ஸ்வாதி மற்றும் சதயம் ராகு ஆதிக்கம் பெற்று பாம்பு உருவான ஆதிசேடனுக்கு உரியது என ஜோதிட உலகம் கூறுகிறது. அனந்த விரதம் செய்தால் உங்கள் வாழ்வில் ஆனந்தமயமான எதிர் காலத்தைக் கொண்டு வரும்.

இன்று அனந்த சதுர்த்தசி விரதமிருந்து திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி, சென்னை அடையாறு காந்திநகர் அனந்த பத்மநாப ஸ்வாமி, திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதஸ்வாமி ஆகியவர்களை தரிசித்தால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதோடு ராகுவால் பல ராஜயோகத்தையும் அடைவது உறுதி!

English summary
Anantha means the one who is all pervasive, who is eternal, who is beyond all boundaries and for whom there is no limit either by space, time or location. He is invincible and omnipresent. His glory is infinite. He is highly meritorious among the meritorious. He is also popularly called as Padmanabha the one who has a Lotus like navel or the one who has Lotus in the navel. Anantha Padmanabha is none other than Lord Sri Maha Vishnu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X