For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி முதல்நாளில் புதுக்கணக்கு தொடங்கும் திருப்பதி ஏழுமலையான் - சுவாரஸ்ய தகவல்கள்

புதிய கணக்கு தொடங்கும் வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 17ம் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடக்கிறது. இதையொட்டி உற்சவ சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆடி முதல்நாளில் புதுக்கணக்கு தொடங்கும் திருப்பதி ஏழுமலையான்- வீடியோ

    திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் ஜூலை 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானம் எனப்படும் புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது. இதனையொட்டி முக்கிய சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் ஆடி மாதம் 1ம் தேதி நடந்து வருகிறது. 1956ம் ஆண்டுக்கு பின்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கிய பின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோவில் கணக்கு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் புதிய கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.

    Annual Anivara Asthanam in Tirumala temple 17th July

    இருப்பினும் சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் வரவு, செலவு கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்படும்.

    இதை முன்னிட்டு வரும் 17ம் தேதி காலை 7 மணிக்கு மூலவர் சன்னிதியில் கருடாழ்வாருக்கு எதிரே சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமியை ஸ்ரீதேவி, பூதேவி உடன் கொலு வைக்கப்பட்டு அவருக்கு அருகில் சேனாதிபதியான விஷ்வ சேனாதிபதியை கொலு வைத்து மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு நெய் வைத்தியம் நடக்கிறது. அதன் பிறகு மாலை 6 மணிக்கு புஷ்ப பல்லக்கில் உற்சவ மூர்த்திகள், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

    ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் வாராந்திர சேவையான ஆதித சேவைகளான சுப்ரபாதம், அர்ச்சனை, தோல்மாலை, கல்யாண உற்சவம், நிஜபாத தரிசனம், வசந்த உற்சவம், ஆதி பிரமோற்சவம், பிரகஸ்பர உற்சவ சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளது.

    ஆடி முதல் நாளன்று புதிய கணக்கு தொடங்கப்படுவதற்குக் காரணம் வைணவ மகா குரு ராமானுஜர் வகுத்த நடைமுறையாகும்.

    ஏழுமலையானுக்கு ஆனி வார ஆஸ்தானத்தின் போது ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் 6 பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

    English summary
    The annual Anivara Asthanam in Srivari Temple will perform according to the sacred scriptures in a traditional manner, on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X