For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவாதிரை திருவிழா விழா : சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றம் - ஜனவரி 10ல் ஆருத்ரா தரிசனம்

மார்கழி ஆருத்ரா தரிசன விழா சிதம்பம் நடராஜர் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய சிவ ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜனவரி 9ஆம் தேதி தேர்த்திருவிழாவும், 10ஆம் தேத

Google Oneindia Tamil News

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் ஜனவரி 1 தேதி தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசன தேர் மற்றும் தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. வரும் 9ஆம் தேதி தேர்த்திருவிழாவும், பத்தாம் தேதி தரிசன விழாவும் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவைக்காண வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாக போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில். பஞ்ச பூத ஆகாயத்தலமாக சிவ பக்தர்களால் போற்றப்படுவது சிதம்பரம். இந்த ஆலயத்தில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஜனவரி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கோவில் கொடிமரத்தில் உச்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் வேத மந்திரங்கள் ஓதிட, மேள தாளம் முழங்கிட கொடியேற்றினார். பின்னர் ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமிஅம்மன் ஆகிய சுவமிகளுக்கு சிறப்பு தீபாராதணை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.

திருவாதிரை திருவிழா

திருவாதிரை திருவிழா

தினமும் காலை மற்றும் இரவிலும் பஞ்சசமூர்த்தி வீதியுலா நடைபெறும். இன்று வியாழக்கிழமை இரவு வெள்ளி சந்திரப்பிறை வாகனத்திலும், 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு தங்க சூர்யப்பிறை வாகனம்,4ஆம் தேதி சனிக்கிழமை வெள்ளி பூத வாகனத்திலும்,5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும் 6ஆம் தேதி திங்கட்கிழமை இரவு வெள்ளி யானை வாகனத்திலும்,7ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு தங்க கைலாச வாகத்திலும் சுவாமி வீதியுலா நடைபெறும். 8ஆம் தேதி புதன்கிழமை இரவு தங்கரதத்தில் பிக்ஷாடனர் சுவாமி வீதியுலாவும் நடைபெறும்.

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் நடக்கிறது.10ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும்,ஸ்ரீ நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும், ஸ்ரீநடராஜரும் பக்தர்களுக்கு கட்சியளிப்பார்கள். மதியம் 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்

சித்திர சபை

சித்திர சபை

புகழ்பெற்ற குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 1ஆம் தேதி அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கோவில் கொடிமரம் முன்பாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதன் பின்பு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிபட்டம் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவ நாட்டியமாடிய தலம்

சிவ நாட்டியமாடிய தலம்

தென்காசி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது குற்றாலம். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற மிகப்பழமையான பாண்டிய நாட்டு கோவிலாகும். சைவ சமயக் குறவர்களான திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற கோவில் என்பதோடு, மகாவிஷ்ணு வடிவிலிருந்த விக்ரக மூர்த்தியை அகத்திய முனிவர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது நம்பிக்கையாகும். அதோடு, சிவபெருமான நாட்டியமாடிய பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபை அமைந்துள்ளதும் குற்றாலத்தில் தான். அகத்திய முனிவருக்கு சிவபெருமான்-பார்வதி திருமணக் கோலத்தில் காட்சியளித்ததும் இத்தலத்தில் தான்.

கொடியேற்றம்

கொடியேற்றம்

சிவபெருமான் நாட்டியமாடிய பஞ்ச சபைகளில் முக்கியமான கோவில் என்பதால், ஆண்டு தோறும் இங்கு திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு வரும் ஜனவரி 10ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்த ஆண்டும் அதே போல் வரும் ஜனவரி 10ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற இருக்கிறது. அதையொட்டி, ஜனவரி 1ஆம் தேதியான நேற்று அதிகாலை 5:30 மணியளவில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. அதை முன்னிட்டு, கோவில் கொடிமரம் முன்பாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவாதிரை திருவிழா

திருவாதிரை திருவிழா

கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆருத்ரா தரிசன விழாவிற்கான கொடிபட்டம் ஏற்றப்பட்டு, தீபாராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும் மாலையில் சப்பர பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவாதிரை விழா வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி காலை, மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சப்பரி வீதியுலா நடைபெறுகிறது. மேலும், தினமும் காலை 9:30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் நடராஜப் பெருமானுக்கு திருத்தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.

சித்திரசபை தீபாராதனை

சித்திரசபை தீபாராதனை

ஜனவரி 4ஆம் தேதியன்று பஞ்ச மூர்த்திகளின் புறப்பாடும், 5ஆம் தேதியன்று காலை நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேரோட்டமும். 8ஆம் தேதியன்று சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 10ஆம் தேதியன்று அதிகாலை 3:20 மணயளவில், சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதிகாலை 5 மணியளவில் குற்றாலநாதர் கோவிலின் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறும்.

English summary
The Thiruvathirai Arudra Darisanam Festival at the famous Chidambaram temple and Kutralanathar Temple commenced on the morning of January 1 with the flag-waving. Swami and Ambal, in front of the temple flag, greeted the devotees in a special ceremony. After this, a special anointing of the flag tree was held and the flag was lit and a special liturgy was held.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X