• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கை போர்களமாக இருக்கிறதா? அசூன்ய ஸயன விரதத்தில் அரங்கனை தரிசியுங்கள்!

|

சென்னை: 28/8/2018 செவ்வாய் கிழமை சிராவண மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதி ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள் என புராணங்கள் கூறுகின்றது. அதனை அசூன்ய சயன விரதமாக அனுஷ்டிக்க வேண்டும். எனவே அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் முக்கியமாக படுத்த கோலத்தில் இருக்கும் ஸ்தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இத்தகைய அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முதலில் விக்நேஸ்வர பூஜை, குரு பூஜை பிறகு விஷ்ணு பூஜை, ஸ்ரீரங்கநாதாஷ்டகம் மற்றும் ஸ்ரீரங்கநாதர் துதிகளை ஓதி, இல்லத்திலும், சயனக் கோல மூர்த்தி ஆலயங்களில் தரிசித்தல் வேண்டும். அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர் – மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும்.

ashunya vrath for good sleep and bed comfort

பிறகு,

'லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவ ந கதாசித்யதோ பவான் ததா களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்’

(ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோஅப்படி நானும் எனது மனைவியுடன் – கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

மறுநாள் காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர்- லக்ஷ்மி விக்ரகங்களுக்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்கரித்து, கிருஷ்ணரை படுக்கவைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர்களின் வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்- மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒருபோதும் தம்பதிகள் பிரியமாட்டார்கள். அவர்கள் சொத்தும் பணமும் அவர்களை விட்டுவிலகாது என்கிறது பத்ம புராணம்.

தூக்கமின்மைக்கான ஜோதிட காரணங்கள்:

"மெத்தையை வாங்கினேன், தூக்கத்தை தொலைத்தேன்" என

கவிஞர் கண்ணதாசன் எழுதினார். ஆம்! நல்ல தூக்கம் ஒரு வரப்பிரசாதாம். ஆனால் எப்படிப்பட்ட தூக்கம் என்பதை ஒருவர் ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளே தீர்மாணிக்கின்றன.

ashunya vrath for good sleep and bed comfort

1. நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி! அதனால் பாதிப்படைவது மூளைதான். மேலும் தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்த மூளைக்கும் நரம்பிற்க்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்க்கு முக்கிய காரக கிரகமாகும். ஒருவருக்கு மூளை கோளாறுகள், மன அமைதியின்மை, கோமா நிலை போன்றவற்றையெல்லாம் புதனின் அசுப சேர்க்கைகள் ஏற்படுத்திவிடுகிறது.

2. ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும்.அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும்.

3. இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மாணிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்க்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

4. அடுத்ததாக தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்க்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.

ashunya vrath for good sleep and bed comfort

5.ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்க்கு குறைவிருக்காது. இந்த மூன்று கிரகங்களில் ஒரு கிரகம் பலமிழந்துவிட்டாலும் அந்த ஜாதகரின் தூக்கம் சுகமானதாக அமையாது.

6. கர்ம வினைக்கும் தூக்கத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்களாகும். குரு மறைமுகமாக கர்ம வினையை தெரிவிப்பவர் ஆவார்.

7 . பாவக ரீதியாக ஒருவர் தூக்க சுகத்தை அனுபவிக்க லக்ன பாவம் பலமாகவும் அசுப கிரகங்கள் தொடர்பில்லாமலும் சுப கிரக சேர்க்கையும் பெற்று இருக்க வேணெடும். ஓருவர ஜாதகத்தில் லக்னம் கெட்டுப்போன நிலையில் எந்தகிரகம் எந்த சுகம் தந்தாலும் அது ஒட்டை பாத்திரத்தில் நிரப்பிய நீர் போன்று ஜாதகருக்கு பலனளிக்காமல் போய்விடும். சூரியன் முதல் பாவத்துக்கு அதிபதி மற்றும் ஆத்ம காரகன் ஆகின்றார். மற்றும் செவ்வாய் காலபுருஷ ராசிக்கு லக்னாதிபதி ஆகின்றார். இவற்களின் நிலையும் நிம்மதியான தூக்கத்திற்க்கு முக்கியமானதாகும்.

ashunya vrath for good sleep and bed comfort

8. அடுத்தது தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோக்ஷ. ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டே இருப்பார்கள். காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது.

9. அடுத்தது தூக்கத்தினை தீர்மானிக்கும் பாவங்கள் சுகஸ்தானம் எனப்படும் 4ம் பாவம், பாவாத்பாவத்தில் 4க்கு 4ஆன. ஏழாம் பாவம் எனப்படும். களத்திர ஸ்தானமும் 7க்கு 4ஆன பத்தாம் பாவம் எனப்படும் கர்ம ஸ்தானமும் ஆகும். காலபுருஷனுக்கு கேந்திரவஸ்தானங்களிலோ அல்லது ஜெனன ஜாதக கேந்திர ஸ்தானங்களிலோ சனி அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் கோழி தூக்கம்தான்.

10. ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும்.

11. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியும் நண்பர்களும் நமது தூக்கத்தை சூறையாடிவிடுவார்கள்.

12. சுகஸ்தானமான 4ம் பாவத்திற்க்கு 7ம் பாவம் பத்தாம் பாவமாகும். எனவே ஒருவருடைய சுகமும் வேலையின் தன்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். ஒன்று வலுக்கும்போது மற்றொன்று செயலிழந்துவிடும். ஒருவர் தூக்கத்தையே கதி என்று இருப்பதும் வேலையே கதி என்று இருப்பதும் தீர்மானிப்பது இந்த இருபாவ தொடர்புகளாகும்.

ashunya vrath for good sleep and bed comfort

படுக்கை சுகமளிக்கும் பரிகார ஸ்தலங்கள்:

1. வாழ்க்கையில் எத்தனை எவ்வளவு எவ்வளவு வசதிகள் இருந்தாலும் படுக்கை சுகமும் உறக்கமும் சரியாக அமையவில்லையென்றால் ஈன்ற பொருள் அனைத்தும் வீண்தான். அத்தகைய சோக நிலையடைந்தவர்கள் எங்கும் சுற்றி ரங்கனை தேடு என அரங்கனிடம் செல்வதுதான் சிறந்த பரிகாரம். களத்திர தோஷமிருப்பவரகள் கணவன் மனைவிக்குள் பிரச்சனை உள்ளவர்கள் களத்திர தோஷம் நீங்கி படுக்கை சுகமும் நிம்மதியான உறக்கம் கிடைக்க திருச்சி ஸ்ரீ ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் வழிபடுவது சிறப்பாகும்.

2. கணவன் மனைவிக்குள் எத்தகைய பிரச்சனையினாலும் கட்டில் சுகமும் தொட்டில் வரமும் இன்றி தவிப்பவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் பெண்ணையாற்றின் கரையில் சயன கோலத்தில் விளங்கும் ஆதிரங்கநாதரை வெள்ளிக்கிழமை வணங்கிவர கணவன் மனைவிக்குள் திகட்ட திகட்ட இன்பமும் நிம்மதியான உறக்கமும் மழலை செல்வமும் ஏற்படும்.

3.மனநிம்மதியின்றி தவிப்பவர்கள் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யமின்றி இருப்பவர்கள் நிம்மதியும் படுக்கை சுகமும் உறக்கமும் பெற சந்திரபகவான் வணங்கிய திரு இந்தளூர் பரிமள ரங்கநாரை திங்கள் கிழமையில் வழிபடுவது சிறப்பு.

4. கடன் தொல்லையால் உறக்கமின்றி தவிப்பவர்கள், வருமானம் பெருகி கடன் அடையவும் நிம்மதியான உறக்கம் கிடைக்கவும் மனைவியிடத்தில் கௌரவம் பெறவும் ஸ்தல சயன பெருமாளை புதன் கிழமையில் வணங்குவது சிறப்பு.

5. துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். மனதிற்க்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம். எனவே பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய அடானா ராகத்தையும் மனதை வசீகரிக்க, மயக்க ஆனந்த பைரவி, உசேனி, கரகரப்பிரியா ராகத்தையும் கணவன் மனைவி இருவரும் கேட்பது கூட மிகுந்த பலனளிக்கும்.

6. சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற பூரம் நட்சத்திரம் வானத்தில் ஒரு கட்டில் கால் போல் காட்சி அளிக்கிறது. பூர நக்ஷத்திரத்தில் அதிபதி சுக்கிரன் ஆவார். மேலும் தூக்கம், தாம்பத்யம், மருத்துவ மனை வாசம் போன்ற படுக்கை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் காரகர் சுக்கிர பகவான் ஆவார். கால புருஷ ராசியின் பன்னிரெண்டாமிடமும் அயன சயன போக ஸ்தானமும் ஆன மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெருவது குறிப்பிடத்தக்கது, சென்னை மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுக்கிர மூர்த்தியை பரணி, பூரம் மற்றும் பூராட நக்ஷத்திர நாளிலும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையிலும் வணங்கிவர அனைத்து படுக்கை சம்மந்த பிரச்சனைகளும் முக்கியமாக தாம்பத்தியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் விலகும் என்பது நிதர்சனம்.

7. தற்காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விடிய விடிய மொபைல் போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உபயோகித்து அதனால் தூக்கமின்றி தவிக்கின்றனர். தூக்கத்தின் காரகரான சுக்கிரனே எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் காரகன் ஆவார், எனவே சுக்கிர பகவானை வணங்கி வர எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களால் தூக்கமின்மை ஏற்படாது.

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

 
 
 
English summary
Ashunya Shayan Vrat, also known as Ashunya Sayana Dwitiya, is an observance dedicated to Lord Vishnu and Goddess Lakshmi. Ashunya Shayan Vrata is observed in the Shravan month (July – August) in the traditional calendar followed in North India. It is believed that those who observe Ashunya Shayan Vrat will attain material progress and prosperity.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X