For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலினா.. உதயநிதியா .. பரபரப்பைக் கிளப்பும் ஜோதிடர்கள்!

தமிழக சட்டசபைக்கு 2021ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மு.க ஸ்டாலின் தலைவராகவும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகவும் சந்திக்கப் போகும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் திமுக

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைக்கு 2021ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக அரசியல் களம் இப்போதே பரபரப்பாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் தங்கள் வியூகத்தை தொடங்கி விட்டனர். 10 ஆண்டு காலமாக அரியணையில் ஏற கனவு கண்டு கொண்டிருக்கும் திமுக இந்த ஆண்டு எப்படியாவது ஆளும் கட்சி அந்தஸ்தை பெற்றுவிட வேண்டும் என்ற நினைப்பில் தனது வியூகத்தை வட இந்திய தேர்தல் பாணியில் மாற்றிக்கொண்டிருக்கிறது. இப்போது முதல்வர் வேட்பாளராக திமுக யாரை களம் இறக்கப் போகிறார்கள் என்பதுதான் தமிழக வாக்காளர்களின் கேள்வியாக உள்ளது.

மு.க ஸ்டாலின் தலைவராகவும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகவும் சந்திக்கப் போகும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் திமுக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் முக்கிய சக்திகளாக திகழ்ந்த தலைவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத பொதுத்தேர்தலை திமுகவும், அதிமுகவும் சந்திக்கப் போகிறது. 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்தது. ஜெயலலிதா என்ற ஆளுமைக்கு கிடைத்த வெற்றி அது. அவரது மறைவிற்குப் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மண்ணை கவ்வியது. திமுக கூட்டணி பெரும்பலத்துடன் வெற்றி பெற்றது.

நடந்து முடிந்த இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தலை சந்தித்து திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சம பலத்தை நிரூபித்திருந்தாலும் 2021 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அரியணையை கைப்பற்றப்போவது யார் என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது. அதிமுகவின் வியூகம், கூட்டணி பலம் பற்றி ஒருபக்கம் பேசப்பட்டாலும் திமுக இந்த முறை தொண்டர் பலம், கூட்டணி பலத்தையும் தாண்டி ஐ பேக் நிறுவனத்தை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் உடன் கைகோர்த்து உள்ளார். என்னதான் புதிய வியூகம் என்றாலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்துதான் அரியணை திமுகவிற்கு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

ஸ்டாலின் ஜாதகம்

ஸ்டாலின் ஜாதகம்

ஸ்டாலின் சிம்மம் ராசிக்காரர். பூரம் நட்சத்திரம். கடகத்தில் கேது மகரத்தில் ராகு கும்பம் லக்னம் லக்னத்தில் சூரியன் மீனம் புதன் செவ்வாய் சுக்கிரன் மேஷம் குரு துலாம் சனி உச்சம் பெற்றிருந்தாலும் வக்ரமடைந்துள்ளார். ஸ்டாலின் பிறக்கும் போது சுக்கிர திசை 10 ஆண்டுகள் இருந்துள்ளது. 1963 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சூரிய திசை, 1970ஆம் ஆண்டில் இருந்து சந்திர திசை, 1970ஆம் ஆண்டில் இருந்து 1979 வரை செவ்வாய் திசை 1979 நவம்பர் முதல் 1986 வரை. ராகு திசை தொடங்கியது 1986 முதல் 2004 வரை குரு திசை காலம் 2020 வரை உள்ளது. சனி திசை சனி புத்தி 2023 வரை உள்ளது.

சிம்மராசிக்காரர்

சிம்மராசிக்காரர்

ஸ்டாலின் லக்னம் சிலர் விருச்சிகம், கன்னி என்று சொன்னாலும் கும்ப லக்னத்தைதான் அநேக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். கும்ப லக்னம், லக்னத்தில் சூரியன். உறுதியான துணிச்சலான முடிவை எடுப்பவர். ஆனால் அவருக்கு மூன்றாம் அதிபதியும் தைரிய ஸ்தான அதிபதியுமான செவ்வாய் மூன்றுக்கு 12ஆம் இடமான மீனத்தில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் தைரியமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போய்விடுகிறது.
லக்னத்திற்கு 2ல் புதன் நீசம் பெற்றிருந்தாலும் கூடவே உச்சம் பெற்ற சுக்கிரன் அமர்ந்திருப்பதால் நீசபங்கமாகியுள்ளது. ஆனாலும் வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருப்பதால் பேச்சில் கடுமை இருக்கிறது.

இத்தனை யோகங்களா?

இத்தனை யோகங்களா?

ஸ்டாலின் ஜாதகத்தில் கிரகங்களின் கூட்டணி, பார்வை, பரிவர்த்தனையை வைத்து பார்த்தால் தர்மகர்மாதிபதி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், வேசி யோகம், பாச யோகம், தேனு யோகம், விரின்சி யோகம், பர்வத யோகம், யவன யோகம், லட்சுமி யோகம் என பல யோகங்கள் இருக்கின்றன. இந்த யோகங்களால் அவர் திமுகவில் சாதாரண தொண்டனாக வாழ்க்கையை தொடங்கி இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை முதல்வர், எதிர்கட்சித்தலைவர், தலைவர் என படிப்படியாக பதவிகளை கட்சியிலும் ஆட்சி அதிகாரத்திலும் பெற்றுள்ளார்.

முதல்வர் ஆகும் தகுதி

முதல்வர் ஆகும் தகுதி

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நமக்கு நாமே என வியூகம் அமைத்து தமிழகம் முழுவதும் பயணம் செய்தார் மு.க.ஸ்டாலின். அது அவருக்கு எதிர்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை மட்டுமே பெற்றுக்கொடுத்தது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கூட்டணி தேர்தல் வியூகம் மிகப்பெரிய வெற்றி கிடைக்க உதவியது. ஆனாலும் முதல்வர் ஆகும் யோகத்தை இந்த தேர்தலில் தமிழக மக்கள் வழங்குவார்களா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

ஸ்டாலினா? உதயநிதியா

ஸ்டாலினா? உதயநிதியா

ஐ பேக் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இது புதிய வியூகம்தான். தலைவர் கருணாநிதி மறைவிற்குப் பிறகு மகன், மருமகன் ஆலோசனையின் பேரில் தேர்தலை சந்தித்தார் மு.க.ஸ்டாலின். 2021 சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வியூகத்தின் படியே தேர்தலை சந்திக்கப் போகிறது திமுக. ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. 2016 சட்டசபை தேர்தல் வரைக்கும் கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளர். இம்முறை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் முன் நிற்பாரா அல்லது தனக்கு பதிலாக தனது மகன் உதயநிதி களமிறக்குவாரா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

உதயநிதிக்கு பதவி

உதயநிதிக்கு பதவி

உதயநிதியின் ஜாதகத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பிரபல ஜோதிடர் ஒருவர் இவருக்கு வளமான பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றும். இவர் அதிர்ஷ்டகரமானவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் அப்பாவை விட புகழ்பெறுவார். தாத்தாவைப் போல சிறந்த வெற்றி பெறுவார் என்றும் கூறியிருக்கிறார். அதன்படியே இப்போது நடந்து வருகிறது. 1982ஆம் ஆண்டு முதல் 2017 வரை தன் வசம் வைத்திருந்த இளைஞரணி செயலாளர் பதவியை தற்போது தனது மகனுக்கு அளித்திருக்கிறார் ஸ்டாலின்.

முதல்வர் யோகம் உதயநிதிக்கு இருக்கா

முதல்வர் யோகம் உதயநிதிக்கு இருக்கா

உதயநிதி ஸ்டாலின் 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்திருந்திருக்கிறார். மேஷ லக்னம் ரிஷப ராசி. மேஷம் லக்னம் ரிஷபம் முதல் தனுசு வரை எட்டு கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. இது கிரகமாலிகா யோக அமைப்பாகும். இந்த யோகம் ஒரு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும். இந்த யோகம்தான் அவரை திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி வரை கொண்டு வந்திருக்கிறது. அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கூட்டணி சொல்வதென்ன

கூட்டணி சொல்வதென்ன

பிரசாந்த் கிஷோர் மார்ச் 20, 1977ஆம் பிறந்திருக்கிறார். விருச்சிகம் லக்னம் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் மீனத்தில் சூரியன், புதன், மேஷத்தில் சுக்கிரன் கேது ரிஷபத்தில் குரு கடக சனி கும்பம் செவ்வாய் துலாம் ராகு என கிரகங்கள் அமைந்துள்ளன. அரசியல் ஆலோசகராக சாணக்கியராக வலம் வரும் பிரசாந்த் கிஷோர், இந்திய அரசியலில் முக்கிய தலைவர்களான மோடி, அர்விந்த் கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி, நிதிஷ்குமார் ஆகிய பலரையும் அரியணை ஏற்றியிருக்கிறார். இந்த ஆண்டு தமிழகத்தில் மையம் கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் முதல்வராக யாரை அரியணையில் அமரவைக்கப் போகிறார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

சீனியர்கள் ஏற்றுக்கொள்வார்களா

சீனியர்கள் ஏற்றுக்கொள்வார்களா

கருணாநிதி இருந்த வரைக்கும் முதல்வர் வேட்பாளராக ஒருமுறை கூட ஸ்டாலினை அறிவிக்கவில்லை. அதற்கு காரணம் அவரது அண்ணன் மு.க அழகிரி போட்ட முட்டுக்கட்டைதான். இம்முறை ஸ்டாலினுக்கு அதுமாதிரியான தடைகள் எதுவும் இல்லை இருந்தாலும் பிரசாந்த் கிஷோர் வியூகத்தின் படி இளம் தலைமுறை வாக்காளர்களை கவர உதயநிதி ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை உதயநிதி ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அதை கட்சியின் சீனியர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரசாந்த் கிஷோர் மேஜிக் தமிழ்நாட்டில் எடுபடுமா என்று பார்க்கலாம்.

English summary
MK Stalin and Udayannidhi horoscopes predictions for 2021 assembly election. Preparing a roadmap for the 2021 assembly elections, DMK president MK Stalin has begun the restructuring of the party organisation with a plan to infuse young blood into it and galvanize it for the electoral battle lying ahead next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X