For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் வெற்றி வாகை சூடுவாரா மு.க.ஸ்டாலின் - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன

Google Oneindia Tamil News

மதுரை: கருணாநிதி, ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமைகள் இன்றி நடைபெறும் லோக்சபா தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 0 கிடைத்தது. அதே நேரத்தில் தனித்து போட்டியிட்ட அதிமுக 38 தொகுதிகளில் வென்று வாகை சூடியது. மு.க. ஸ்டாலின் மிகப்பெரிய கூட்டணி அமைத்திருந்தாலும் கிரகங்களின் கூட்டணி சரியாக இருக்கிறதா கோச்சாரப்படியும், தசாபுத்தி படியும் அவரது ஜாதகக் கட்டம் சொல்வதென்ன என்று பார்க்கலாம்.

ஸ்டாலின் ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பார்க்கும் போது பரிவர்த்தனை யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், வேசி யோகம், பாச யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், விரின்சி யோகம், பர்வத யோகம், யவன யோகம், லட்சுமி யோகம் என பல யோகங்கள் உள்ளன.

இத்தனை யோகங்கள் இருந்தும் முதல்வர் ஆகும் யோகம் இன்னும் கை கூடி வரவில்லை.

ஸ்டாலின் வருங்கால முதல்வர் என்று சமீபத்தில் தமிழகம் வந்த ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஆனால் மெரினாவில் சமாதி கிடைத்தவர்களின் வாரிசுகள் முதல்வர் ஆனது இல்லை. அதே போல துணை முதல்வராக இருந்தவர்கள் முதல்வர் ஆனது இல்லை என்று சூசகமாக கூறியுள்ளார் ஜோதிடர் பாலாஜிஹாசன். லோக்சபா தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு எப்படி என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர் பார்க்கலாம்.

ராகுல்காந்திக்கு பிரதமர் நாற்காலி கிடைக்குமா? நாடாளும் யோகம் வந்து விட்டதா? - ஜாதகம் சொல்வதென்ன?ராகுல்காந்திக்கு பிரதமர் நாற்காலி கிடைக்குமா? நாடாளும் யோகம் வந்து விட்டதா? - ஜாதகம் சொல்வதென்ன?

துணிச்சல் அதிகம்

துணிச்சல் அதிகம்

ஸ்டாலின் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் கும்ப லக்னம். லக்னத்தில் சூரியன். உறுதியான துணிச்சலான முடிவை எடுப்பவர். ஆனால் அவருக்கு மூன்றாம் அதிபதியும் தைரிய ஸ்தான அதிபதியுமான செவ்வாய் மூன்றுக்கு 12ஆம் இடமான மீனத்தில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் தைரியமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போய்விடுகிறது. லக்னத்திற்கு 2ல் புதன் நீசம் பெற்றிருந்தாலும் கூடவே உச்சம் பெற்ற சுக்கிரன் அமர்ந்திருப்பதால் நீசபங்கமாகியுள்ளது. ஆனாலும் வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருப்பதால் பேச்சில் கடுமை சில நேரங்களில் உளறல் ஏற்படுகிறது.

குரு திசை

குரு திசை

ஸ்டாலின் பிறக்கும் போது சுக்கிர திசை 10 ஆண்டுகள் இருந்துள்ளது. 1963 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சூரிய திசை, 1970ஆம் ஆண்டில் இருந்து சந்திர திசை, 1970ஆம் ஆண்டில் இருந்து 1979 வரை செவ்வாய் திசை 1979 நவம்பர் முதல் 1986 வரை. ராகு திசை தொடங்கியது 1986 முதல் 2004 வரை குரு திசை காலம் 2020 வரை உள்ளது. 2020ல் சனி திசை சனி புத்தி தொடங்கி 2023 வரை உள்ளது.

ஸ்டாலினுக்கு வெற்றி எப்படி

ஸ்டாலினுக்கு வெற்றி எப்படி

மு.க. ஸ்டாலின் திமுக தலைவரான பின்னர் சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல். கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதிப்பங்கீடு என பங்காளிகளை சமாளித்து வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து விட்டார் ஸ்டாலின். வெற்றி வாய்ப்பை பார்க்கும் போது, தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவார். ஆனால் ராகுல் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்கின்றனர். ஒருவேளை மீண்டும் மன்மோகன் முன்னிலைப் படுத்தப்பட்டால் அப்போது மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர். எம்பியானாலும் அமைச்சரவையில் இடம் கிடைக்கணுமே.

உச்சத்தில் சனி, சுக்கிரன்

உச்சத்தில் சனி, சுக்கிரன்

ஸ்டாலின் ஜாதகப்படி வெற்றி வாய்ப்பு எப்படி என்று பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் கணித்துள்ளார். சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் பூரம்,சிம்மராசி,விருச்சிக லக்கினம் என்று ஒரு ஜோதிடர் கூறியுள்ளார். லக்கினாதிபதி செவ்வாய் நட்பு வீடான குருவீட்டில் அதனுடன் உச்சம் பெற்ற சுக்கிரன்,நீச பங்கம் பெற்ற புதன். கேந்திர ஸ்தானமான நாலாமிடத்தில் சூரியன்,6ல் குரு.3,9ல் ராகு,கேது,12ல் சனி உச்சம் பெற்ற சனி வக்கிரம் அடைந்துள்ளார்.

துணை முதல்வர் ஸ்டாலின்

துணை முதல்வர் ஸ்டாலின்

அரசாங்க பதவி வகிக்க முக்கிய கிரகம் சூரியன்,செவ்வாய் இருவரும் நல்ல வலுவான இடத்தில் உள்ளனர் அதாவது சூரியன் மிக வலுவாக நான்காமிடத்திலும்,செவ்வாய் ஐந்தாமிடத்திலும் இருக்கிறார்.இதனால் அவரால் துணை முதல்வர் பதவி வகிக்க முடிந்தது. மேலும் முக்கிய கிரகமான பக்கியாதிபதி சந்திரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் அதாவது அவர் தந்தை ஸ்தானதியும் கூட பத்தாமிடம் பதவி ஸ்தானம் ஆக இவர் தந்தை உயர்ந்த பதவியில் இருந்தவர் அதேபோல் தந்தையால் துணை முதல்வர் வரை வந்தார்.

தந்தை, சகோதரர்கள்

தந்தை, சகோதரர்கள்

விருச்சிக லக்கினக்காரர் தர்மத்தையும்,பெற்றோர்களையும் மதிப்பவர்கள். 9ஆம் இடத்தில் இருக்கும் கேது சிக்கலை உண்டாக்கி விட்டது. 9ல் ராகுவோ,கேதுவோ இருந்தால் தந்தையால் வளர்ச்சி பாதிக்கப்படும். இவர் தந்தையால் வெளிச்சம் பெற்றார் உழைப்புக்கேற்ற உயரம் அடைய முடியவில்லை. 3ஆம் இடத்தில் இருக்கும் ராகுவால் இவரால் சகோதரர்களுடன் இணக்கமாக இருக்கமுடியாது அவர்களும் இவருடன் இணக்கமாக இருக்கமாட்டார்கள்.

முதல்வர் யோகம் இருக்கா

முதல்வர் யோகம் இருக்கா

ஸ்டாலின் ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பார்க்கும் போது பரிவர்த்தனை யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், வேசி யோகம், பாச யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், விரின்சி யோகம், பர்வத யோகம், யவன யோகம், லட்சுமி யோகம் என பல யோகங்கள் அமைந்துள்ளன. இது முதல்வர் நாற்காலி யோகத்தை கொடுக்கும் என்பது ஜோதிடர்கள் கணிப்பு.

குரு ஆறில் மறைவு

குரு ஆறில் மறைவு

முக்கிய கிரகமான தனாதிபதி அதேபோல் புகழையும்,அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக்கூடிய ஐந்தாமாதிபதி குரு ஆறில் மறைந்ததால் முதல்வர் பதவியை அடைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். நடப்பு தசாபுத்தி, கோச்சார நிலை, நட்சத்திர அதிபதிகளின் ஆசி ஸ்டாலினுக்கு எப்படி இருக்கிறது வரும் மே மாத இறுதியில் தெரிந்து கொள்ளலாம்.

English summary
Find out DMK leader MK Stalin's birth chart out using Vedic astrology and the future of his political career and life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X