• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாக்டர், இன்ஜினியருக்கு படிக்க விருப்பமா - ஜாதகத்தில் சனி, செவ்வாய் ராகு கேது எங்கேயிருக்கு

|

சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் ராகு உள்ள நிலை ராகு எந்த கிரகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது என்பதைப் பார்த்து சினிமா, மீடியா, சித்தா ஆயுர்வேத மருத்துவம் படிப்பு படிக்கலாம். கேதுவின் நிலையைக் கொண்டு மருத்துவம், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கலாம். ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி ஆகியவைகளைப் பொறுத்து அதற்கேற்ப படிக்க வைத்தால் பிள்ளைகள் சாதனையாளராகத் திகழ்வார்கள்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பிளஸ் 2 தேர்வு எழுதி பாஸ் செய்தாலும் இன்றைக்கு சில ஆயிரம் பேர் மட்டுமே டாக்டர் படிப்பு படிக்க முடிகிறது. இதற்குக் காரணம் அவர்களின் ஜாதக அமைப்புதான். இப்போது நீட் தேர்வு வேறு பலரது டாக்டர் கனவை பாதித்துள்ளது. எனவே டாக்டராகும் அம்சத்தோடு தமது குழந்தை பிறந்துள்ளார்களா என்பதை அறிந்து அந்த படிப்பில் வழி நடத்தலாம்.

பொறியியல் கல்லூரிகள் பல்லாயிரக்கணக்கில் பெருகி உள்ளன. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்ஜினியருக்கு படித்து வெளியே வந்தாலும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்து பொறியாளராக சாதிக்க எல்லோராலும் முடிவதில்லை எனவே பொறியியல் துறைக்கு ஏற்ற ஜாதக அமைப்பு உள்ளதா என்பதை அறிந்து படிக்க வைக்க வேண்டியது அவசியம்.

 கேது பகவான் செய்யும் உதவி

கேது பகவான் செய்யும் உதவி

டாக்டருக்கு படிக்கவும், மருத்துவராக தொழில்கள் செய்யவும் மருத்துவ கிரகமான கேது பகவான் அருள் வேண்டும். லக்னத்துக்கு 4,9,10 ஆகிய இடங்களில் மருத்துவ கிரகமான கேது இருப்பது நல்ல யோகம். கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பு இருப்பது முதல்தர யோகம்.

எண் கணித அமைப்பில் பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 1,2,7,9 என அமைவது சிறப்பு.

ஊசி போடும் யோகம்

ஊசி போடும் யோகம்

அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறப்பது மருத்துவர் ஆகும் யோகத்தை அளிக்கும்

இன்ஜினியர் ஆகும் யோகம்

இன்ஜினியர் ஆகும் யோகம்

பொறியியல் பட்டதாரி ஆவதற்கு பிரகாசமான தேதி, கூட்டு எண்கள் 5,14,23, 8,17,26, 9,18,27 ஆகியவை. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பரணி, பூரம், பூராடம் ஆகியவை பொறியியல் படிக்க சாதகமான நட்சத்திரங்கள்.

கம்யூட்டர் சயின்ஸ் படிப்பு

கம்யூட்டர் சயின்ஸ் படிப்பு

கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி படித்து தகவல் தொழில் நுட்பத்துறையில் சாதிக்க லக்னாதிபதி பலம் மிகவும் அவசியம். லக்னம், 4,9,10 ஆகிய இடங்களில் ராகு இருப்பது நலம் தரும். அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சாதகமானவை. நான்காம் அதிபதியுடன் புதன் - ராகு சேர்க்கை பெறுவது நல்ல அம்சமாகும். புதன் லக்னம், 4,5,7,9,10 ஆகிய இடங்களில் இருப்பது மிகப்பெரிய பலமாகும். பிறந்த தேதி - கூட்டு எண் ஆகியவை 1,10,19,28, 2,11,20,29, 5,14,23, 6,15,24 என இருப்பது சாதகமானதாகும்.

பி காம், எம் காம் படிப்பு

பி காம், எம் காம் படிப்பு

கணக்கு சம்பந்தமான படிப்புகள், ஆடிட்டிங் படிப்பு, பி.காம், எம்.காம், அக்கவுன்டன்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற லக்னம், லக்னாதிபதி சந்திரன் ஆகியவை பலம் பெறவேண்டும். சூரியன், புதன் சேர்ந்து லக்னம், 2,4,9,10 ஆகிய இடங்களில் இருப்பது சிறப்பு.

எந்த நட்சத்திரம் ஆடிட்டர் ஆக ஏற்றது

எந்த நட்சத்திரம் ஆடிட்டர் ஆக ஏற்றது

அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை சாதகமானவை. பிறந்த தேதி மற்றும் கூட்டு எண்: 5,14,23, 4,13,22, 6,15,24, 1,10,19,28 ஆகியவை யோகமானவை. எனவே உங்கள் நட்சத்திரம் எண்களின் கூட்டுத்தொகை கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி ஆகியவைகளை அறிந்து உங்களுக்கான துறையை தேர்வு செய்து சாதனை புரியுங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
A combination of Saturn and Mars also gives good education in engineering field.Since lagna depicts self, 2nd house is one's family while 10th house is Karma Kshetra and 11th is house of gains, hence interrelations between these houses through the lords of these houses decide one’s earnings. As per our classics if the above mentioned houses or the lords of these houses are related to Sun, Saturn and Rahu, the native becomes a doctor.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more