For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாசிவராத்திரி நாளில் மழை பெய்யும் குடையோடு போகச் சொல்கிறார் ஜோதிடர் பாலாஜிஹாசன்

மாசி மாதம் மழை வருமா என்று யோசிக்காதீர்கள். மகா சிவராத்திரி நாளில் கண்டிப்பாக மழை வரும் என்கிறார் ஜோதிடர் பாலாஜிஹாசன். மகா சிவராத்திரி நாளில் கோவிலுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக குடை எடுத்துக்கொண்டு போங

Google Oneindia Tamil News

சென்னை: மகா சிவராத்திரி நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சிவனுக்காக விரதம் இருந்து ஆராதனை செய்யும் பண்டிகை. இந்த பண்டிகை நாளில் சிவ ஆலயங்களுக்கு தரிசனம் செய்வதன் மூலம் சிவ புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் கோவிலுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக குடையோடு போங்க மழை வரும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜோதிடர் பாலாஜிஹாசன். மாசி மாதத்தில் மழை எப்படி வரும் வெயில் இந்த போடு போடுகிறதே என்று யோசிக்கிறீர்களா? மழை வருவதற்கான கிரகங்களின் கூட்டணி உருவாகி வருவதாகவும் கூறியுள்ளார்.

ஐப்பசியில் தொடங்கும் அடைமழை கார்த்திகை மாதத்தோடு முடிவடையும். மார்கழி, தை மாதத்தில் மழை குறைந்து பனி ஆரம்பித்து விடும். மாசி மாதம் பனி முடிந்து வெயில் ஆரம்பிக்கும். இந்த ஆண்டு பிப்ரவரி ஆரம்பம் முதலே வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டது.

Astrological forecast for rain in mahashivratri day

அதிகாலையில் குளிரும் பகல் நேரங்களில் வெயிலும் மாறி மாறி மக்களை தாக்கி வருகிறது. மழைக்கான அறிகுறியே காணப்படவில்லை ஆனாலும் மகாசிவராத்திரி நாளில் மழை வரலாம் என்று கணித்துள்ளார் பாலாஜிஹாசன். தனது முகநூல் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், மழை வரும் நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சுட்டெரிக்கும் வெயில் கடந்த 2 வாரமாக நிலவி வரும் நிலையில் வருகின்ற 21ஆம் தேதி 22 ஆம் தேதி சந்திரன் மகர ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிப்பார். மழை காரகன் செவ்வாய் தனுசில் நின்று நான்காம் பார்வையாக சுக்கிரனை பார்க்கின்றார்.
சுக்கிரன் - புதன் நட்சத்திரத்தில் ரேவதியில் பயணிக்கிறார் சந்திரன் சனியுடன் சேர்ந்து இருக்கிறார். அந்த சனி பகவான் மூன்றாம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார்

அந்த சுக்கிரன் நின்ற ராசி மீன ராசி மீன ராசியை குறிக்கின்ற திசை வடக்கு செவ்வாய் - சந்திரன் - சுக்கிரன் இந்த 3 கிரகங்களும் இணைகின்ற பொழுது மழை பொழியும் என்று இதுவரை பலமுறை பிரசாரத்தில் கூறியுள்ளோம்.

இது மழை இல்லாத காலத்தில் மழை பொழியாத குளிர் மற்றும் வெயில் காலங்களில் ஏற்பட்டாலும் திடீரென்று மழை தோன்றும் அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது வருகின்ற21 தேதி 22 ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பொழிவதற்கு வாய்ப்புகள் உண்டு.

சுக்கிரன் நிற்பது மீனம் ராசி அதனால் தமிழ்நாட்டின் தென்பகுதி என்று அழைக்கக்கூடிய ராமநாதபுரம் தென் கடலோரப் பகுதிகள் விருதுநகர்
தேனி, கோவை, நீலகிரி, சிவகங்கை, மதுரை ஆகிய இடங்களிலும் சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தை குறிக்கக்கூடிய ரேவதி அதிபதி புதன் காரகத்துவம் விளங்கக்கூடிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், மற்றும் திருவாரூர் போன்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை கடகம் மற்றும் கன்னி லக்னங்களில் அதாவது மாலை 4 மணி முதல் எட்டரை மணிக்குள் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு எனவே சிவராத்திரிக்கு கோவிலுக்கு செல்பவர்கள் குடையோடு போங்க என்று கூறியுள்ளார் பாலாஜிஹாசன்.

English summary
Famous Astrologer Balaji Hassan prediction rain on Mahashiratri day.February extremely hot month, February 21 and 22nd moon makaram rasi Avittam star moon conjuncts saturn Dhanusu mars vision Venus. Saturn vision Venus.Mars moon and Venus conjuction this time rain prediction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X