• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பித்தப்பையில் கல்... யாருக்கு வரும் ? என்ன பரிகாரம்

By Mayura Akhilan
|

சென்னை: சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி நூறு பேரில் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது. ஜோதிட ரீதியாக இதற்கான காரணங்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

பித்தப்பை கற்கள் செரிமான கோளறுகளை ஏற்படுத்தும். நீ சாப்பிட்டது செரிக்காம போகட்டும் என்றெல்லாம் கூட சிலர் சாபம் குடுப்பார்கள். சாப்பிட்டது செரிமானம் ஆகாமல் போனால் அதுவே மிகப்பெரிய நோயாகிவிடும்.

பித்தப் பை என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரைக் குடலுக்கு எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியுள்ள சிறிய பை போன்ற உறுப்பு. கல்லீரலின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள பித்தப் பையானது கல்லீரலில் இருந்து உற்பத்தியாகும் பித்த நீர் என்ற ஜீரண நீரை இரு வேளை உணவுக்கு இடையே சேமித்து வைக்கிறது.

செரிமான கோளாறு

செரிமான கோளாறு

பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுவோருக்கு உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடிக்கும் அப்போது வாந்தி வருவது போல குமட்டல் ஏற்படும் சிலருக்கு ஏப்பம் வரும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

பித்தப் பை கற்கள் பல்வேறு வகைகளில் தொல்லை கொடுக்கும். அதில் முக்கியமானவை வாயுத் தொல்லை, சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாதல், மஞ்சள் காமாலை, மிகக் கடினமான வயிற்றுவலி ஏற்படும். பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது, குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது. அடிக்கடி விரதம் இருப்பதும், பித்தப்பையில் கல் ஏற்பட வாய்ப்பு என்கின்றனர் மருத்துவர்கள்.

நோய் பாதிப்பு

நோய் பாதிப்பு

6ம் பாவம் வயிறு, இரைப்பை, கல்லீரல் போன்றவற்றை குறிக்கும். எல்லாவித நோய்களையும், நோய் கிருமிகளையும் குறிக்கும். 6ம் பாவம் குணப்படுத்தக் கூடிய நோய்களாகும். எனவே நோய்களை குணப்படுத்தும் மருந்துகளையும், மருத்துவர்களையும் 6ம் பாவம் குறிக்கும்.

மருத்துவ ஜோதிடம்

மருத்துவ ஜோதிடம்

நமது உடலை சரியான முறையில் இயற்கையாகவே பராமரித்து வரும் எச்சில், கல்லீரல் நீர், இரைப்பை நீர், குடல் நீர், கண் நீர், வியர்வை சுரப்பி நீர் போன்ற நாளமுள்ள சுரப்பி நீர்களை ராகு-கேதுவைத் தவிர ஏனைய ஏழு கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன என்று மருத்துவ ஜோதிடர்கள் தங்கள் ஆய்வினில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பித்த நோய்

பித்த நோய்

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு சூரியன் காரகம் ஆகும், அதாவது தலை,மூளை,இருதயம், முக்கிய எலும்புகள்,உடலின் உஷ்ணம், காய்ச்சல்,தலைவலி, கண்நோய், மஞ்சகாமாலை நோய், மூளைக்காய்ச்சல்

அதாவது ஒருவரின் விதியை நிர்ணிப்பது சூரியனே ஆகும். 6ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் பித்தம் தொடர்பான நோய்கள், இதயநோய், கண் நோய், மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குருபகவான்

குருபகவான்

குரு பகவான் கல்லீரல் நோய்கள், நீர்கோத்துக் கொள்வதால் உண்டாகும் மார்பு வலி, சர்க்கரை நோய், முறையற்ற உணவுப் பழக்கத்தால் உண்டாகும் நோய்கள், இடுப்புப் பிடிப்பு, தலை கிறுகிறுப்பு, கொழுப்பு, உடல் பருமனால் உண்டாகும் நோய்களுக்கு காரகமாக இருக்கிறார். கல்லீரலுக்கு காரகமான குரு கால புருஷனுக்கு ஆறாம் வீடு எனப்படும் கன்னி ராசியில் குருவும் சுக்ரனும் ஆறு/எட்டு/பன்னிரெண்டு தொடர்பு பெற்று அசுபத்தன்மை பெற்று நிற்பது. மற்றும் சுக்கிரன் நீசமடைவது. கன்னியில் நீசமடைந்த சுக்கிரன் செரிமான கோளாரை ஏற்படுத்தி நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகிறது.

என்ன சாப்பிடலாம்

என்ன சாப்பிடலாம்

பித்தப்பை கல் இருப்பது உறுதியானால் அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும். வறுத்த மற்றும் அதிக கொழுப்பு அதிகம் கொண்ட உணவு வகைகளை உண்ணக் கூடாது. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும். பித்தப் பை கல்லினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Gall bladder may be attacked from the diseases of inflammation, cancer, stones etc. The root causes of the diseases of gall bladder are to be found out from sixth house. Kanya rasi is the seat of the same in natural zodiac. Sun is karaka for all diseases concerning bowels and Mercury rules.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more