For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீரிழிவு, மூட்டுவலி, வலிப்பு நோய்- ஸ்ரீ தன்வந்திரியின் தைலாபிஷேக பரிகாரம்!

நீரிழிவு நோய் , கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்கவும் சகல ஐஸ்வர்யம் பெறவும், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

வேலூர்: திருமாலை போற்றி வழிபடும் நாட்களில் திருவோணம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 14.02.2018 புதன் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளும் திருவோணம்தான். அந்த நாளில் விஷ்ணுவாகிய தன்வந்திரி பகவானை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமும், காக்கும் கடவுளுமானவரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

இவற்றை கருத்தில்கொண்டு திருவோண ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் மாபெரும் ஹோமங்கள் நடைபெறுகிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

ஜாதகத்தில் 6வது இடம் ருண ரோக ஸ்தானம். நோய் ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் நோய் ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்களைப் பொறுத்தே நோய்கள் பாதிக்கின்றன. குரு மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் வலுவிழக்கும்போது சர்க்கரை நோய் உண்டாகிறது. குரு ராகு சாரம் பெற்று நிற்பது, ராகுவுடன் இனைந்து நிற்பது சுக்கிரன் சனி சாரம் பெறுவது மற்றும் சுக்கிரன் சனியுடன் இனைந்து நிற்பது சர்க்கரை நோய் ஏற்பட காரணம்.

சனியால் பாதிப்பு

சனியால் பாதிப்பு

ஆர்த்ரைடிஸ் எனும் முடக்குவாத நோய்க்கு ஜாதகத்தில் மந்தன் எனப்படும் சனைஸ்வரனே முக்கிய பங்கு வகிக்கிறான். என்றாலும் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது. சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இனைவு பெறுவது, அசுப பரிவர்தனை பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தபடுவது மூட்டுவலியை ஏற்படுத்தும்.

சனி, சுக்கிரன்,புதன், சூரியன்

சனி, சுக்கிரன்,புதன், சூரியன்

காலபுருஷனுக்கு மூன்றாம் வீடாகிய மிதுனத்தில் சனி, சுக்ரன் போன்ற கிரகங்கள் நிற்பது, ஜாதகத்தின் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிற்பது போன்றவை வாத நோயை தெரிவிக்கிறது.எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி அபிஷேகம்

ஸ்ரீ தன்வந்திரி அபிஷேகம்

வித விதமான வரங்களை அள்ளித்தரும் விஷ்ணுவின் திருத்தலமான ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நல்வாழ்வு பெற ஹோமம் நடைபெறுகிறது. திருவோணம் தினத்தன்று ஹோமத்தில் புருஷ ஸூக்த ஹோமத்திலும், பூஸூக்த ஹோமத்திலும், தன்வந்திரி ஹோமத்திலும் மேலும் நீரிழிவு நோய் ( சர்க்கரை வியாதி ), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெறுகிறது.

நோய் தீர்க்கும் அபிஷேகம்

நோய் தீர்க்கும் அபிஷேகம்

பிப்ரவரி 14ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெறும் தைலாபிஷேகத்தில் கலந்துகொண்டு தைலப்பிரசாதம் பெற்று ஆரோக்யத்தில் முன்னேற்றம் பெறலாம். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,வாலாஜாபேட்டை-632513 தொலைபேசி : 04172-230033 / 09443330203

English summary
Thiruvonam star is auspicious for Lord Narayanan and is celebrated every month at the Sri Danvantri Arogya Peedam, Walajapet, Vellore district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X