For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று உலக புற்றுநோய் தினம் 2020 : புற்றுநோய் வந்தாலே பயம் வேண்டாம் - பரிகாரம் இருக்கு

Google Oneindia Tamil News

சென்னை: மனிதர்களுடைய லைப் ஸ்டைல் இன்றைக்கு பெரிதும் மாறிவிட்டது. கண்டதை சாப்பிட்டு நேரங்கெட்ட நேரத்தில் உறங்கி பாரம்பரிய வாழ்க்கை முறையை மறந்ததால் இன்றைக்க பல நோய்கள் உருவாகின்றன. சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் என உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே பிப்ரவரி 4ஆம் தேதியன்று உலக புற்றநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் நடப்பு ஆண்டு I am and I will' அதாவது என்னால் முடியும் என்ற பிரகடனத்துடன் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நோய்களால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதோடு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப பரிகாரம் தேடி ஜோதிடரையும் தேடி செல்கின்றனர். புற்றுநோய்க்கு கிரகங்களின் சேர்க்கையும் கூட காரணமாவதாக வேத ஜோதிடம் சொல்கிறது.

நமது ராசி லக்னங்களில் கிரகங்கள் அமைந்திருக்கும் விதமும்தான். ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவது அவரது பூர்வ புண்ணியத்தின்படியே ஏற்படுகிறது. புற்றுநோய்க்கு பாம்பு கிரகங்கள் காரணமாக இருக்கின்றன. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுக்கேற்ப நோய்களும் உண்டாகின்றது.

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் தலைமுதல் கால் வரைக்கும் ஒரு மனிதர்களை தாக்குகிறது. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். விழிப்புணர்வு இல்லாமல் போனதன் காரணத்திலேயே புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் மரணமடைகின்றனர். எனவே புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 4 ஆம் தேதியை புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கின்றனர்.

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் மாசுபாடுகளாலும் நமது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கவழக்கமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றே எச்சரிக்கைத் தெரிவிக்கிறது மருத்துவ உலகம். 2018ம் ஆண்டின் புள்ளிவிவரக் கணக்கின் அடிப்படையில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியன். அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் பேர் புற்றுநோயால் மரணமடைகின்றனர்.

எத்தனை பேர் மரணம்

எத்தனை பேர் மரணம்

நம் நாட்டில் தினசரியும் 1300 பேர் புற்றுநோயினால் மரணமடைகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு 11.50 லட்சம் நோயாளிகள் புதிதாக கண்டறியப்பட்டனர். நாடு முழுவதும் 22.50 லட்சம் பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மார்பகப்புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள்தான் நம் நாட்டில் அதிகம் என்கிறது மருத்துவ உலகம்.

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம்முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.இதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம். விழிப்புணர்வுநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளின் மனிதர்களின் சராசரி ஆயுளை 10 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மோசமான உணவு

மோசமான உணவு

பாரம்பரிய உணவுப்பழக்கத்தை நாம் இன்றைக்கு மறந்து விட்டோம். கண்டதை கண்ட நேரத்தில் சாப்பிட்டு நேரங்கெட்ட நேரத்தில் உறங்கி உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை நாம் மாற்றி வைத்து விட்டோம். மோசமான உணவுப் பழக்கம் நிச்சயமாகப் புற்றுநோய் அபயாத்தை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சரியான அளவில் பழங்களும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது பல நோய்களுக்கும் வழிவகுக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கலாம்

புற்றுநோய் வராமல் தடுக்கலாம்

புகையிலைப் பயன்பாடு மற்றும் மது அருந்துதல் புற்றுநோயை நம்மிடம் நாமே திணித்துக்கொள்வதற்கான வழி. இன்றைய இயந்திர உலகில் அளவுக்கு அதிகமான எடை பலவிதமான புற்றுநோய்களை வரவழைக்கிறது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி பழ வகைகளை உட்கொள்ளுதல், செறிவான வாழ்வியல் முறைகள் நிச்சயம் நம் நலனைக் காக்கும் என அறிவுரைக்கின்றனர் சர்வதேச மருத்துவர்கள்.

நோய்க்கான காரணம்

நோய்க்கான காரணம்

ஆறாம் வீடு என்பது லக்கினத்திலிருந்து, லக்கினத்தை முதலாகக் கொண்டு எண்ணப்படும்போது ஆறாவதாக வருவது. ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய நோய், கடன், எதிரி மற்றும் துரதிர்ஷ்டங்களைப் பற்றிச் சொல்லும் வீடு நோய்கள் இரண்டு வகைப்படும். தீர்க்கக்கூடிய நோய். தீர்க்க முடியாத நோய்! தீராத நோய்களைப் பிணி என்பார்கள். ஒருவருக்கு ஆறாம் அதிபதியானவர் லக்னாதிபதி அல்லது சந்திரனுடன் சேர்ந்தாலோ அல்லது லக்னாதிபதி 6ஆம் இடத்தில் இருந்தாலோ அவருக்கு கொடிய நோய் ஏற்படும்.

நவ கிரகங்கள் தரும் நோய்

நவ கிரகங்கள் தரும் நோய்

ஒருவருக்கு ஆறாம் அதிபதியானவர் லக்னாதிபதி அல்லது சந்திரனுடன் சேர்ந்தாலோ அல்லது லக்னாதிபதி 6ஆம் இடத்தில் இருந்தாலோ அவருக்கு கொடிய நோய் ஏற்படும். குரு பகவான் சுப கிரகம். குரு உடன் சேரும் பாம்பு கிரகங்கள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. உடம்பில் உள்ள செல்களின் வளர் சிதை மாற்றங்களுக்கு குரு பகவான் காரணமாகிறார்.

பாம்பு கிரகங்கள்

பாம்பு கிரகங்கள்

அனைவரின் ஜாதகத்திலும் சந்திரனே உடல் கிரகம். ஒருவரது உடலை குறிக்கக்கூடிய கிரகம் சந்திரன். சந்திரன் 6,8 அதாவது ரோகஸ்தானம் எனும் 6வீடு, ஆயுள்ஸ்தானம் எனும் 8ம் வீட்டுடன் தொடர்பு ஏற்பட்டாலோ அந்த இடங்களில் இருந்தாலோ, சந்திரன் நீசப்பட்டாலோ ஏதோ ஒரு நோய் வர வாய்ப்பு அதிகம். தோலில் உடலில் ஏற்படும் புற்றுநோய்க்கு குரு ராகு போன்ற கிரகம் காரணமாவது போல் இரத்தப் புற்று நோய்க்கு செவ்வாயும் காரணமாகின்றார் என்பதையம் கவனிக்க வேண்டும்.

லக்னாதிபதியின் பலம்

லக்னாதிபதியின் பலம்

ஜாதகத்தில் லக்னாதிபதி மிகவும் பலவீனப்பட்டு சந்திரன் நீசப்பட்டு, அக்கிரகத்துடன் குரு ராகு சேர்ந்திருந்து 3,5,7,8 ஆகிய இடங்களில் பலம் குறைந்திருந்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சொல்லாம். மேலும் இக்கிரக அமைப்பை சனி பார்ப்பது புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை மேலும் அதிகரிக்கின்றது. நோய் வந்தாலே பயப்பட வேண்டாம். ஜோதிடரிடம் ஜாதகத்தை ஆராய்ந்து தமது உடல்ரீதியில் விழிப்புடன் இருந்து வைத்தியரிடம் தகுந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். லக்னாதிபதி பலமாக இருந்து பூர்வ புண்ணியாதிபதியும் பலமாக இருந்தால் எந்த நோய் வந்தாலும் எதுவும் செய்யாது குணமாகிவிடும்.

English summary
World Cancer Day is celebrated all over the world every year on 4th of February. This day is celebrated with the aim to honor the efforts done by the WHO, United Nations.Preventive measures like avoiding various lifestyle choices and environmental risk factors may reduce the incidence of cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X