For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர் தினம் 2019: ஆசிரியர் ஆகும் யோகம் யாருக்கு கிடைக்கும் - குரு அருள் இருக்கா

ஆசிரியர் ஆகும் அமைப்பு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் முதல் கல்லூரி பேராசியர் ஆக பணி செய்வது வரை எல்லாமே ஆசிரியர் என்னும் அறப்பணிதான். ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் அமரும் கிரகங்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Prime Minister expressed their greetings for Teacher's day

    சென்னை: குரு அருள் இருந்தால் திருவருள் தேடி வரும். எழுத்தறிவித்தவன் இறைவனுக்கு சமமாக போற்றப்படுகிறார். ஆசிரியர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியப்பணி அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் அமரும் கிரகங்களின் சேர்க்கை பார்வை, இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தின் அதிபதி பலம் ஆகியவற்றைப் பொருத்தே ஆசிரியர் தொழில் செய்யும் யோகம் ஒருவருக்கு அமைகிறது. குருவாகும் யோகம் குரு அருள் இருந்தால் தேடி வரும்.

    மாதா,பிதா, குரு, தெய்வம் அருள் இருந்தால் உயர்கல்வி யோகம் தானாக அமையும். உயர்படிப்பு யோகம் கிடைக்க ஒருவரின் ஜாதகத்தில் புதன் ஏதாவது ஒரு விதத்தில் பலம் பெறுவது அவசியம். லக்னத்துக்கு 2,4,5,7,9,10,11 ஆகிய இடங்களில் நல்ல கிரக சேர்க்கை பெற்று இருக்க வேண்டும். தெய்வத்தினால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்று வள்ளுவர் கூறியுள்ளார். எனவே விடா முயற்சியுடன் படிக்கும் மாணவர்கள் ஒரு போதும் தோல்வி அடைவதில்லை.

    லக்னத்திற்கு 10ம் இடம் ஜீவன ஸ்தானம். இந்த ஸ்தானத்திற்கு சூரியன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் பார்வை சம்பந்தம் பெற்றாலும் பத்தாம் வீட்டில் இருந்தாலும் ஆசிரியர் ஆகலாம். இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி பலம் பெற வேண்டும்.

    கலைமகள் யோகம்

    கலைமகள் யோகம்

    கலைமகள் யோகம் எனப்படும் கல்வியோகம் சிலருக்கு மட்டுமே அமையும். ஜாதக அமைப்பின்படியே கல்வி யோகம் ஏற்படும். ஜாதகத்தில் லக்னம் மிக முக்கியமானது. அதற்குரிய கிரகமே லக்னாதிபதி. அதற்கடுத்து உயர் நிலை கல்வி வரை பேசக் கூடிய இடம் நான்காம் இடம். பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு எல்லாம் ஒன்பதாம் இடத்தில் இருந்து முடிவு செய்யப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும், இந்த மூன்று இடத்திற்கு உரிய கிரகங்களும்தான் நமக்குக் கல்வியில் நாட்டத்தையும், ஏற்றத்தையும் வழங்குகின்றன. மேலும் இந்த அமைப்புகளுடன் குரு பார்வையும் இருந்தால், கல்வி யோகம் சிறப்பாக அமையும்.

    சூரியன், குரு, செவ்வாய்

    சூரியன், குரு, செவ்வாய்

    பட்டப்படிப்பை முடிப்பதற்கு லக்னத்தில் இருந்து 4, 9ம் அதிபதிகள் பலம் பெற்று இருக்க வேண்டியது அவசியம். ஆராய்ச்சித் துறையில் பட்டம் பெற 1, 4, 5, 9 ஆகிய அதிபதிகள் பலம் பெற வேண்டும். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பது வித்யா யோகம். இது கல்வியில் நிபுணத்துவத்தை அளிக்கும்.
    லக்னத்திற்கு 10ம் இடம் ஜீவன ஸ்தானம். இந்த ஸ்தானத்திற்கு சூரியன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் பார்வை சம்பந்தம் பெற்றாலும் பத்தாம் வீட்டில் இருந்தாலும் ஆசிரியர் ஆகலாம்.

    குரு சேர்க்கை பார்வை

    குரு சேர்க்கை பார்வை

    பத்தாம் இடத்திற்கும், குருவிற்கும், இரண்டாம் அதிபதிக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் ஏற்பட்டால்தான் ஆசிரியராக பணி புரிய முடியும். இல்லையென்றால் படித்த படிப்புக்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. செவ்வாய் அல்லது சந்திரன் புதனுடன் சேர்க்கை பெற்றால் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணி புரியலாம். இரண்டாம் அதிபதி பலமாக இருந்து குரு ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், வர்கோத்தமம் அடைந்தால் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் என வர முடியும்.

    எந்த துறை ஆசிரியர்

    எந்த துறை ஆசிரியர்

    இரண்டாம் வீட்டில் புதன் பலமாக இருந்தால் கம்ப்யூட்டர், கணக்கு ஆசிரியர் ஆகலாம். சூரியன், சந்திரன் சேர்க்கை, பார்வை கல்லூரி பேராசிரியர், எழுத்தாளர். புதன், செவ்வாய் சம்பந்தம் உடற்கல்வி ஆசிரியர். மூன்றாம் இடம் சூரியன் பலம், சம்பந்தம் பெற்றால் விஞ்ஞான ஆசிரியர். இசை, சங்கீத கலையில் ஆசிரியராக வேலை செய்வார்.

    கல்லூரி பேராசிரியர்

    கல்லூரி பேராசிரியர்

    இரண்டாம் அதிபதி பலமாக இருந்து, சந்திரன் யோகமாக அமைந்து குரு, புதன் சம்பந்தப்பட்டால் விரிவுரையாளர் ஆகும் யோகம் உண்டு.
    சூரியன் சந்திரன் சேர்ந்தால் அமாவாசை யோகம். இந்த அமைப்பு ஒருவரை சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சொற்பொழிவாளர், கவிஞர், கல்லூரிப் பேராசிரியராக மிளிர வைக்கும்.

    சுக்கிரன் குரு புதன்

    சுக்கிரன் குரு புதன்

    லக்னம் 4, 7, 10ல் புதன் இருந்து லக்னாதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டால் கணக்கு ஆசிரியராகலாம். திரிகோண ஸ்தானங்கள் எனும் 1, 5, 9 ஆகிய இடங்களில் சுக்கிரன், குரு, புதன் சம்பந்தப்பட்டால் மொழி ஆசிரியராகலாம். தமிழில் பண்டிதர் ஆகலாம். வரைகலை, ஓவியம், அனிமேஷன் மூலம் புகழ் கிடைக்கும்.

    English summary
    Jupiter, Mercury and Sun influence 10th lord or 10th house then the native may become a teacher.If 10th lord is in the navamasha of Jupiter, mercury or Sun then the person may opt for teacher profession.If any of the Sign ruled by Jupiter, mercury and Sun becomes the ascendant and ascendant is strong the native may opt to be a teacher.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X