For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சி பெற்ற சனியோடு சேர்ந்த உச்சம் பெற்ற செவ்வாய்- 9 மணிக்கு விளக்கேற்றினால் இவ்ளோ நன்மைகளா

சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: மோடி விளக்கேற்ற சொல்லியிருக்கிறார் அதுவும் ஞாயிறு இரவு 9 மணிக்கு விளக்ககேற்ற சொன்னதன் தத்துவம் என்ன என்று பலருக்கும் புரியாமலேயே மீம்ஸ் போட்டு கிண்டலடித்துக்கொண்டிருகிறார்கள். செவ்வாய் பகவான் ரத்தக்காரகன்,செவ்வாய் பகவானுக்கு உகந்த எண் 9 மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பத்து லட்சம் பேரை பாதித்துள்ளது. 55 ஆயிரம் பேரின் உயிரை குடித்துள்ளது. இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று வீடியோ மூலம் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிறன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளில் விளக்கேற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட இருளைப் போக்கும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகளை ஏற்றி வெளிச்சத்தைப் பரப்புவோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

உடலளவில் நாம் தனித்து இருந்தாலும், நாட்டின் முழு சக்தியும் ஒவ்வொருவரோடும் இணைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நமது உறுதி மற்றும் ஒற்றுமையை விட வலிமையான சக்தி உலகில் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் விளக்கேற்றுங்கள் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

ஆன்மீக விளக்கம்

ஆன்மீக விளக்கம்

ஆன்மீக ரீதியாக பார்த்தால் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு மேல் பிரதோஷம் தொடங்குகிறது. ஞாயிறு பிரதோஷம் மிருத்யுஞ்ஜய பிரதோஷமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவேதான் அன்றைய தினம் மரண பயம் நீங்க விளக்கேற்றி வழிபட சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. ஜோதிடரீதியாக பார்த்தால் செவ்வாய் பகவான் மகரம் ராசியில் உச்சம் பெற்றிருக்கிறார். சனிபகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். செவ்வாய் சனி சேர்க்கை பெற்று கூடவே குருவும் இணைந்துள்ள நிலையில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவே விளக்கேற்ற சொல்லியிருக்கிறார் மோடி.

மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

விளக்கேற்றுவதன் தத்துவம் பற்றி அறிவியல் ரீதியான காரணம் கூறியுள்ளார் இந்திய மெடிக்கல் அசோசியேசன் முன்னாள் தலைவர் அகர்வால். மனித உடலில் சுரக்கும் ACE 2 என்கிற என்சைம்தான் டென்சன் ஆவதற்கும் மன அழுத்தம் அடைவதற்கும் காரணம். நுரையீரல், இதயம், சிறுநீரகம், உணவுக்குழாய் பகுதிகளில்தான் இந்த என்சைம் சுரக்கிறது. மனிதர்கள் பலர் இந்த லாக் டவுன் கால கட்டத்தில் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இந்த காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக விளக்கேற்றி பிரார்த்தனை செய்வதன் மூலம் மனதில் நேர்மறை சக்திகள் அதிகமாகும் என்கிறார் அகர்வால்.

நேர்மறை சக்தி அதிகரிக்கும்

நேர்மறை சக்தி அதிகரிக்கும்

அறிவியல்படி மனித உடல் எப்பொழுதுமே ஒரு வித அதிர்வலைகளை எப்பொழுதும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். இது உடலை சுற்றி ஒரு விதமான காந்த சக்தியை ஏற்படுத்துகிறது. இது மனிதனின் மூச்சு, செரிமானம், நரம்பியல் மற்றும் ரத்தஓட்டம் ஆகியவற்றை பொருத்து உருவாகிறது.
இவ்வாறு உருவாகும் காந்தசக்தி வெளிப்புறத்தில் உள்ள காற்று அனுக்களில் உள்ள எலெக்ட்ரானுடன் தொடர்பு கொள்ளும் இதில் பயோ-எனர்ஜிடிக் சக்தி என்ற ஒன்றை உருவாக்குகிறது. இதை தான் ஆரா என அறிவியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர். ஒருவரது உடல் நிலை வெளிப்புற சூழ்நிலைக்கு ஏற்பட மாறுபடுவதற்கு இந்த ஆரா முக்கிய காரணமாக இருக்கிறது.

அதிசய சக்தி ஆரா

அதிசய சக்தி ஆரா

இந்த ஆரா வெளிப்புறத்தையும் மனித உடலையும் இணைக்கும் ஒரு பாலமாக இருக்கிறது. பொதுவாக இந்த ஆரா என்பது மனித உடலை சுற்றி சுமார் 4-5 அடிகள் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகள், மரங்கள் என எல்லா உயிரினங்களுக்கும் என்கிறது விஞ்ஞானம். இந்த ஆரா என்பது வானவில் போல வண்ணங்களாக நிறைந்திருப்பதாகவும், கூறப்படுகிறது. ஆராவின் வண்ணங்களும் அளவுகளும் ஒவ்வொரு மனிதன் எண்ணங்களும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பொருத்து மாறுபடும் என தெரிகிறது.

நெகட்டிவ் சிந்தனைகள்

நெகட்டிவ் சிந்தனைகள்

ஒரு மனிதன் மகிழ்ச்சியாகவும், பாசிட்டிவ் எண்ணங்களுடனும் இருக்கும் போது அவரை சுற்றியுள்ள ஆரா சற்று பெரியதாகவும், அதிக வண்ணங்களுடனும் இருக்கும் எனவும், அதேநேரம் மனிதன் சோகமாகவும், நெகட்டிவ் சிந்தினைகளுடனும் இருக்கும் போது ஆராவின் அளவு சிறிய அளவிலும், குறைந்த வண்ணங்களுடனோ அல்லது கருப்பு நிறத்திலோ இருக்கும் என அறிவியல் கூறுகிறது.

நோய்கள் தீரும்

நோய்கள் தீரும்

இந்த ஆரா உடலில் உள்ள 7 முக்கிய சக்கரங்கள் மற்றும் 122 சிறிய சக்கரங்கள் உள்ள பகுதிகளில் செயல்பாடுகளை பொருத்து வெளிப்படும் எனவும், இந்த சக்கரங்களில் உள்ள செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிலையில் அது மனித உடலில் உள்ள ஆராக்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். அது பின்னர் மனித உடலில் கேன்சர், நீரழிவு, ஹைப்பர் டென்ஷன், உள்ளிட்ட நோய்களையோ அல்லது மனநலம் சம்மந்தப்பட்ட அல்லது தூக்கமின்மை போன்ற பிரச்னைகளையோ ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

கிருமிகளை அழிக்கலாம்

கிருமிகளை அழிக்கலாம்

மனித உடலைச்சுற்றி உள்ள இந்த ஆராவை தீப ஒளியினால் சுத்தம் செய்யலாம். கண் திருஷ்டி தாக்கினால் பாதிப்பு ஏற்படும் என்றுதான் திருமணம் முடிந்து வரும் புதுமண தம்பதியிருக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும் ஆரத்தி எடுத்து ஆராவை சுத்தம் செய்கின்றனர். கண் திருஷ்டியும் கிருமிகள் தாக்காமலும் பாதுகாக்கின்றனர்.

தீப ஒளியின் மகிமை

தீப ஒளியின் மகிமை

கார்த்திகை தீப திருநாளிலும் தீபாவளி நாளிலும் விளக்கேற்றுவதன் தத்துவமே மன அமைதிக்காகவும், செல்வ வளம் பெருகுவதற்காகவும் மட்டுமின்றி வீட்டை சுற்றி உள்ள தீய சக்திகளையும், கிருமிகளையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும்தான். தீப எண்ணெயில் உள்ள மருத்து குணங்கள் மனித உடலையும் ஆன்மாவையும் சுத்தம் செய்கிறது.

செவ்வாயின் எண்

செவ்வாயின் எண்

செவ்வாய் இப்போது மகரம் ராசியில் உச்சம் பெற்றிருக்கிறார். செவ்வாய் ரத்தக்காரகன் சனியோடு சேர்ந்திருக்கிறார். மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் செவ்வாயை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்றலாம் என்கின்றனர் ஜோதிடர்கள். எது எப்படியோ பாரத தேசம் முழுவதும் ஒரே நேரத்தில் விளக்கேற்றினால் கொரோனா வைரஸ் கிருமியின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.

English summary
here astrological reason for PM Modi chose 5 April, 9 PM to light diyas, candles. Many people thinking about the significance of the date, time and the activity. The reason for choosing 9pm and 9 minutes is to initiate Mar’s double effect which lends to higher will power and immunity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X