For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்திவரதரின் அழகிய சிரிப்பு... தரிசனம் கண்ட உடன் பறந்த களைப்பு - ஜோதிடரின் அனுபவம்

அத்திவாரத்தாரை காண பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் அத்திவரதர் வைபவம் நிறைவடையவுள்ள நிலையில், 37வது நாளான நேற்று வெள்ளை, நீல நிற பட்டாடையில் காட்சியளித்த அ

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: வரம் தரும் அத்திவரதரைக் காண இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ளதால் தினசரியும் 3 லட்சம் பேர் வரை காஞ்சிபுரத்திற்கு வருகை தருகின்றனர். பல மணிநேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து விட்டுத்தான் செல்கின்றனர். அத்திவரதரின் அழகிய திருமுகத்தையும் சிரிப்பையும் கண்ட நேரத்தில் வரிசையில் பலமணிநேரம் காத்திருந்த களைப்பு பறந்தே போய்விட்டது என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அஸ்ரோ வி. பழனியப்பன்.

கூட்டம் அதிகரிப்பதால் நெரிசலைத் தவிர்க்க ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் சிறப்பு தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை உள்ள நிலையில் அடுத்த 16, 17 தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 Athi Varadar VIP darshan cancel on 2 days

அத்திவரதரைக் காண பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து காஞ்சிபுரம் சென்று பல மணிநேரம் இலவச தரிசன வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்த அஸ்ரோ வி. பழனியப்பன் தரிசன அனுபவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் படியுங்கள் தயாராக தரிசனத்திற்கு செல்லுங்கள்.

கெட்டி மேளம் கொட்டலையா... தோஷங்கள் நீங்கி முந்தானை முடிச்சு போட முத்தான பரிகாரங்கள் கெட்டி மேளம் கொட்டலையா... தோஷங்கள் நீங்கி முந்தானை முடிச்சு போட முத்தான பரிகாரங்கள்

தரிசனம் சனி ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் ஆகஸ்ட் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் சென்றால் விரைவாக தரிசனம் செய்யலாம் என்றெண்ணி ஒரு ட்ராவல் குழுவில் இணைந்து பயணித்தோம் வெளியூர் வெளிமாநிலம் என வாகனங்கள் கட்டுக்குள் அடங்காத காரணத்தால் காஞ்சி நகருக்குள் செல்ல வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணமே இருந்தார்கள் நாங்கள் வந்த பேருந்தை பல்லவன் கல்லூரி வளாகத்திலே பார்கிங்கில் விட்டு விட்டு பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தோம். அங்கிருந்து சுமார் 6:30 மணியளவில் வரிசையில் வரத்தொடங்கினோம் எங்களுக்கு முன்னமே அதாவது காலை 8 மணிக்கு வந்தவர்களும் எங்களுடன் சேர்ந்து வந்தார்கள் காரணம் விசாரித்ததில் தரிசன வரிசை காலையில் கட்டுகடங்காத காரணத்தால் பட்டி பட்டியாக இரு நூறு பேர்கள் வீதமாக அடைத்து வைத்து அனுப்பியதாக கூறினார்கள் இவர்களுக்கு உணவாக பிஸ்கெட் மற்றும் தண்ணிர் மட்டுமே கிடைத்தது அதுவும் முதியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே..

நாங்கள் மாலை வேளையில் சென்றதால் நேரடியாக இலவச தரிசன வரிசையில் அடைந்தோம் மெல்ல மெல்ல கூட்டம் நகர்ந்தன முட்டல்கள் மோதல்கள் என ஒரே களோபரம் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்க வைக்கப்படிருந்தார்கள் கூட்டத்தின் இடையில் கயிற்றை கட்டி தடை ஏற்படுத்தி கும்பல் கும்பலாக அனுப்பினார்கள் போகும் வழிகளில் கடைகளில் பிஸ்கெட் குளிர்பானம் என கிடைத்தால் அதிக அளவில் கஷ்டம் தெரியவில்லை

முதியோர்கள் உடல் ஊனமுற்றோர்களுக்காக தனி வரிசை இருக்கிறது அதில் இதர பக்தர்களும் கலந்தே பயணிப்பதால் ஒழுங்கற்ற தன்மை ஏற்படுகிறது ஒருவழியாக 4மணி நேரத்தில் கோபுரம் உள்ளே புகுந்து விட்டோம் அப்பாடா நிம்மதி தரிசனம் விரைவில் கிடைக்கும் என நினைக்கையில் அங்கிருந்து இரண்டு லைனாக வரிசைகள் இணைகிறது.

ஒரே தள்ளு முள்ளு உள்ளே "பா" வரிசையில் கட்டைகளை குறுக்கே கட்டியிருப்பார்கள் அதன் இடையில் வரவேண்டும் அதுவும் கும்பல் கும்பலாக இதில் வயதானர்கள் குழந்தைகளை வைத்திருப்போர்கள் கடும் இன்னலுக்கு அவதி ஆனார்கள் ஏண்டா வந்தோம் என ஆகிவிட்டது வரிசை செல்கிறது செல்கிறது சென்றுக்கொண்டே இருக்கிறது. வி.ஐ.பி.தரிசனமும் சிரமமான காரியம் அவர்களுமே நீண்ட நேரம் வரிசையில் வரவேண்டியுள்ளது கோயில் நிர்வாகமும் காஞ்சிபுரம் நகராட்சியும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள் ஆங்காகே தற்காலிக மருந்துவமனைகள் ஆம்புலன் வாகனங்கள். குப்பைகளை உடனடியாக அகற்ற துப்புறவு பணியாளர்கள் தற்காலிக கழிவறைகள்

பல மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காவலர்கள் பணியில் அமர்த்திருக்கிறார்கள் அவர்களும் சிறப்பாக தங்களின் பணிகளை செய்கிறார்கள். அதிக அளவிலான கூட்டம் நெறிமுறைகளை கடைபிடிக்க தெரியாத பொது மக்கள் கூட்டமாக இடைகளில் புகுவது ஒழுங்காக வரிசையில் வருபவர்கள் சத்தம் போடுவது என களோபரமாக சென்றது

ஒரு வழியாக நள்ளிரவு 1:15 அத்திவரதர் தரிசனம் கிடைத்தது அந்த அழகிய சிரிப்புடன் காட்சி தரும் வரதரை கண்டவுன் பட்ட கஷ்டங்களும் துயரங்களும் மறைந்து போயின. இன்னும் 10 தினங்கள் மட்டுமே தரிசனம் என்பதால் வருங்காலங்களில் ஏராளமான கூட்டம் சேரும் என்பதில் ஐய்யம் இல்லை சுவாமியை தரிசனம் செய்ய குழந்தைகளையும் முதியோர்களையும் வீட்டிலையே விட்டு விட்டு வருவது உத்தமம்.

கூட்டம் அதிகம் ஆக ஆக மூச்சுதிணறல் உயிர் இழப்புக்கள் நடைபெற சாத்தியம் உண்டு காரணம் நாங்கள் வரிசையில் நின்ற நேரத்திலே பத்துக்கும் மேற்ப்பட்டோர் மயக்கமுற்று விழுந்தார்கள் உடனடியாக முதலுதவியும் தரப்பட்டது. கோயில் நிர்வாகமும் காஞ்சிபுரம் நகராட்சியும் சிறப்புடனே செயலாற்றுகிறது பொது மக்கள் ஒத்துழைப்பு நல்கி ஒழக்கமான வரிசையில் வந்தால் இனியுள்ள காலங்களில் 10 மணிநேரத்துக்குள் தரிசனம் செய்யலாம். என்ன மக்களே நீங்களும் அத்திவரதரின் தரிசனம் பார்க்க தயாராகிவிட்டீர்களா.

English summary
With lakhs of devotees thronging the Sri Devarajaswamy Temple daily for darshan of Athi Varadar,On Monday 3.2 lakh devotees had darshan. the Kancheepuram district administration, in consultation with the Hindu Religious and Charitable Endowments Department, has decided not to have VIP darshan on August 16 and 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X