• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

யானைக்கு அருள் பாலித்த ஸ்ரீகஜேந்திர வரதப்பெருமாள்

By Kr Subramanian
|

ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் அத்தாளநல்லூர் அருள்மிகு ஸ்ரீகஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோயில் அகும்.

Aththalanallur Gajendra Varatha Perumal Temple

புராணச் சிறப்பு:

இந்திரத்துய்மன் என்னும் மன்னன் அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான், அந்த யானை கஜேந்திரன் எனப் பெயர் பெற்று யானைகளுக்கெல்லாம் தலைமை தாங்கியத்டு இந்ட யானை பொதிகை மலைக்குச் சென்று அங்கு தீர்த்தத்தில் நீராடி சூரியனை வணங்கி திருக்குற்றாலத்திற்குச் சென்று சிவமது கங்கையில் நீராடி, திருக்குற்றாலநாதரை வணங்கிய பின் மகாவிஷ்ணுவை வணங்குவதற்காக அத்தாளநல்லூருக்கு வந்தது அத்தாளநல்லூரில் அங்குள்ள தாமரை குளத்தில் நீராடி தாமரைப் பூக்களைப் பறித்து திருமாலுக்கு சூட்ட எண்ணியது.

தாமரையை பறிக்கும்போது நரத முனிவரின் சாபத்தால் முதலையான ஊர்த்துவன் என்கிற கந்தர்வன் கஜேந்திர யானையின் காலைப் பிடித்துக் கொண்டான். யானை எவ்வாறு முயன்றும் முதலை தன் பிடியை விடவில்லை. யானை துதிக்கையில் தமரையை வைத்து ‘ஆதிமூலமே' என்று அழைத்தது. மகாவிஷ்ணு கருட வாகனத்தில் வந்து தன் சக்ரயுதத்தால் முதலையை கொன்று யானைக்கு அருள்பாலித்தார் எனவே இந்த தலத்தை ‘ஆனைக்கு அருள் செய்த தலம்' என்றும் ‘ஆனையைக் காத்த தலம்' சொல்லுவார்கள்.

அத்தி என்றால் யானை. யானையை ஆட்கொண்டதால் அத்தாளநல்லூர் என்று இவ்வூர் பெயர் பெற்றது. கல்வெட்டுகளில் இவ்வூரை அத்தாணி நல்லூர், கரிகாத்தபுரி, பொய்மாம் பூம்பொழில் எனவும் இத்தலத்து இறைவனை ஆனைகாத்தருளிய பிரான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிச் சிறப்பு:

பெருமாள் யானைக்குள் செய்த திருவிளையாடல் நடந்த வரலாற்றுடன் தொடர்புடையதாக இருபத்து நான்கு தலங்கள் குறிப்பிடப்பட்டாலும், ஸ்ரீமத் பாகவதத்தில் கஜேந்திர மோட்சத் திருவிளைஆடல் பொதிகை மலையடிவாரத்தில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதுவே கஜேந்தர மோட்சத்தலமாகும். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலம் பரிகாரத்தலம் என்ற புனிதம் பெற்றது.

திருக்கோயிலின் மேற்கே தாமிரபரணி தெற்கு வடக்காய் பாய்கிறது, இதனால் இத்தீர்த்தக் கட்டம் கங்கைக்கு நிகரானது. நின்ற கோலத்தில் காட்சி தரும் இப்பெருமானை வழிபடுவதால் திருப்பதியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இத்திருக்கோயிலின் பின் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தூணில் நரசிங்க அவதாரம் நிகழ்ந்தாகக் கருதப்பட்டு அந்த தூணே நரசிம்மராகக் கருதி வழிபடப்படுகிறது. இந்த தூணிற்கு சந்தனம் மற்றும் மல்லிகை மலர்களால் ஆன சாட்டை சாற்றுதல் என்கிற நேர்த்திக்கடன் பக்தர்களால் செய்யப்படுகிறது.

அமைவிடம்:

இத்திருத்தலம் வீரவநல்லூரிலிருந்து முக்கூடல் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. வீரவநல்லூர் மற்றும் முக்கூடலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் உள்ள ரயில் வண்டி நிலையம் வீரவநல்லூர்.

இறைவன்: அருள்மிகு கஜேந்திர வரதர்
இறைவியர்: அருள்தரும் ஸ்ரீதேவி, பூதேவி
தீர்த்தம்: விஷ்ணுபாத தீர்த்தம்
தலவிருட்சம்: நெல்லிமரம்

English summary
Aththalanallur Sri Gagendra Vartha Perumal Temple. As per Hindu legend, King Indrajuman, who immersed himself in the worship of Lord Vishnu, failed to strengthen his army and lost his kingdom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X