
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: மிதுன ராசியில் பிறந்தவர்கள் பத்ரா யோகத்தால் புது பதவி வரும்
சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கப் போகிறது. உங்கள் ராசிநாதன் புதன் பகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் புதிய பதவியும் புகழும் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வையால் பாதிப்புகள் நீங்கி யோக காலம் கை கூடி வரப்போகிறது.
இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், புதன், மூன்றாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன். ஆறாம் வீட்டில் கேது எட்டாம் வீட்டில் சனி ஒன்பதாம் வீட்டில் குரு, விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
தொலைதூர கல்வி முதுகலை பட்டதாரிகள் அரசு பணியில் பதவி உயர்வு பெற முடியாது: சென்னை ஹைகோர்ட் அதிரடி
மாத பிற்பகுதியில் சூரியன் மூன்றாம் வீட்டிற்கு வருகிறார். சுக்கிரன் நான்காம் வீட்டிற்கு பயணம் செய்து நீச்சம் பெறுகிறார். ராசிநாதன் புதனும் ஆட்சி பெற்ற சூரியனுடன் இணைந்து புத ஆதிபத்ய யோகம் பெறுகிறார். மாத இறுதியில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்து பத்ரா யோகத்தை தருவது சிறப்பு. ஆகஸ்ட் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு பாதிப்புகள் நீங்கி நன்கைமள் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது.

சிறப்பான மாதம்
இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், இடப்பெயர்ச்சியும் சாதகமாக உள்ளதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் பணவரவு நன்றாக இருக்கும். அபரிமிதமான பண வரவினால் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். எழுத்தாளர்களுக்கு சிறப்பான காலம் ராசிநாதன் புதன் பயணம் சாதகமான இடத்தில் இருப்பதால் தகவல் தொடர்புத்துறையில் சிறப்பாக இருக்கும். பேச்சை தொழிலாகக் கொண்டவர்களுக்கு சிறப்பான கால கட்டமாக இருந்தாலும் கவனம் தேவை.

வெற்றி கிடைக்கும்
இளைய சகோதர சகோதரியின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. ஆகஸ்ட் 11ஆம் தேதி சுக்கிரன் நான்காம் வீட்டில் நீச்சம் பெற்று பயணம் செய்கிறார். சொத்து வாங்குவது விற்பதில் கவனம் தேவை.
சுக்கிரன் நான்காம் வீட்டிற்கு செல்வதால் சில தடைகளைத் தாண்டி வெற்றி கொடுக்கும்.

தைரியம் அதிகரிக்கும்
சூரியன் இடப்பெயர்ச்சி உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நன்மையை தரும். மாத பிற்பகுதியில் குருவின் பார்வை சிம்ம ராசிக்கு வரும் சூரியன் மீது விழுவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அப்பாவின் ஆலோசனை உதவி செய்யும். தைரிய ஸ்தானத்தில் தைரிய ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று பயணிப்பதால் அரசு தொடர்பான ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு கல்வியில் சில குழப்பங்கள் இருந்தாலும் மாத இறுதியில் முன்னேற்றம் ஏற்படும்.

புத ஆதிபத்ய யோகம்
புத ஆதிபத்ய யோகத்தால் மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உயர்கல்வி யோகமும் கை கூடி வந்துள்ளது. மருத்துவக்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புதனின் உச்சம் பெற்ற சஞ்சாரம் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். திருமண சுப காரியங்களில் தடைகள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளது. அஷ்டமத்து சனியால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகிறது. குரு பார்வையால் முயற்சிகளை தடைபட்டுக்கொண்டு உள்ளது. வேலையில் இடமாற்றம் ஏற்படும்.

சனியால் சங்கடம்
புதிய வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும். இடமாற்றங்கள் நன்மையைத் தரும். அதே நேரத்தில் அஷ்டமத்து சனி சில நேரங்களில் மனக்குழப்பத்தைக் கொடுப்பார். ஆலய தரிசனம் செய்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சகோதரர்களினால் ஆதாயம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன் நீச்சமடைவதாலும், சனி எட்டில் பயணம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால் வலி, மூட்டு வலிகள் வர வாய்ப்புள்ளதால் மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.

யோகமான காலகட்டம்
உங்கள் ராசிநாதன் வார இறுதியில் ஆட்சி உச்சம் பெற்று பயணிப்பது சிறப்பு. 24ஆம் தேதிக்கு மேல் சொத்துக்களை பதிவு செய்வது நல்லது. மாத இறுதியில் புதன் உச்சமடைவது பத்ரா யோகத்தை கொடுக்கும். மாத பிற்பகுதியில் அரசுத்துறையில் வேலை செய்பவர்களுக்கு ஆதாயம் நிறைந்த மாதம். பதவி உயர்வு தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சின்னச் சின்ன பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வெளிநாடு பயணம் வேலை விசயமாக முயற்சி செய்பவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் நல்ல செய்தி தேடி வரும்.