• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண் நோய் தீர்க்கும் ஆவணி ஞாயிறு விரதம்: நாகராஜா ஆலயத்தில் பெண்கள் வழிபாடு

|

சென்னை: ஆவணி ஞாயிறுக்கிழமையை முன்னிட்டு பெண்களும், குழந்தைகளும் நாகர்கோவில் நாகராஜா ஆலயத்தில் புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், நாகதோஷம் நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஞாயிறு என்றாலே சூரியன். சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் சரும நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஒளி தரும் கடவுள்

ஒளி தரும் கடவுள்

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.

ஆவணி ஞாயிறு விரதம்

ஆவணி ஞாயிறு விரதம்

ஜாதகத்தில் சூரியன் தந்தை காரகன். தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

ஆதித்ய ஹிருதயம்

ஆதித்ய ஹிருதயம்

அகத்தியர் ராம பிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை பாராயணம் செய்தார். அற்புதமான அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால்தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். எனவே எதிரிகள் தொல்லை நீங்கவும், பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும்.

நாகராஜா வழிபாடு

நாகராஜா வழிபாடு

ஆவணி ஞாயிறு சூரியனுக்கு மட்டுமல்ல நாகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். விவசாயப்பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது. இந்தியாவில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் உள்ளன. இந்தக் கோயில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து, பாம்புத்தொல்லை இருக்கக்கூடாது என வேண்டி விரதம் இருப்பது வழக்கம்.

நாகராஜா கோவிலில் பக்தர்கள்

நாகராஜா கோவிலில் பக்தர்கள்

ஆவணி மாதம் முழுவதும் நாகராஜா ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். பால் ஊற்றியும், மஞ்சள்பொடி தூவியும் வழிபட்டனர். அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Special worships on Avani Sunday at Nagaraja Temple in Nagercoil.Aavani is considered very auspicious, as Surya Bhagwan is residing in his own house during the month.Parvati, is celebrated with great vigor in the month of Aavani.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more