For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேதார்நாத், பத்ரிநாத் கோவில்கள் திறப்பு... வண்ண வண்ண மலர்களால் பிரம்மாண்ட அலங்காரம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதிகாலை 4.15 மணியளவில் பக்திநாத் கோவில் நடை திறக்கப்பட்டது. பல வண்ண மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் பிரம்மாண்டமாக கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து பக்திநாத் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற யமுனோத்ரி கோவில் கடந்த 14ஆம் தேதியும், கங்கோத்ரி கோவில் 15ஆம் தேதியும் குருக்கள் திறந்து வழக்கமான பூஜைகளை செய்தனர். கொரோனா சூழ்நிலை காரணமாக, மறுஉத்தரவு வரும் வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 கோடீஸ்வரர் ஆக மாற்றும் 1 ரூபாய் நாணயம்... அலட்சியமாக எங்கேயும் போட்டு விடாதீர்கள் கோடீஸ்வரர் ஆக மாற்றும் 1 ரூபாய் நாணயம்... அலட்சியமாக எங்கேயும் போட்டு விடாதீர்கள்

பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில், 6 மாத கால குளிர்கால அடைப்புக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. ஆதிசங்கரர் பூஜித்து மகிழ்ந்த கேதார்நாத் திருத்தலம் துவாதா லிங்கத் திருத்தலங்களுள் ஒன்று. இந்த பிரசித்தி பெற்ற இமயமலை கோவில் வாயில் கதவுகளை காலை 5 மணிக்குத் திறந்து குருக்கள் பூஜை செய்தனர்.

கேதார்நாத் ஆலயம்

கேதார்நாத் ஆலயம்

கேதார் என்பது சிவனின் இன்னொரு பெயர். சிவபெருமானின் 12 ஜோதிலிங்கங் களுள் தேதார்நாத்தும் ஒன்று, முன்னாளில் இந்தக் கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டதாம். பின்னர் தற்போதையத் திருக்கோயில் ஆதிசங்கரரால் கட்டப்பட்டது. கருவறைக்கு உள்ளே கூம்பு வடிவில் உள்ள ஒரு பாறை சிவபெருமான் சதாசிவ வடிவமாக வணங்கப்படுகிறது.

மோடி பெயரில் அர்ச்சனை

மோடி பெயரில் அர்ச்சனை

கோவில் நடை திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தலைமை குரு பாகேஷ் லிங் உள்ளிட்ட குருக்கள், அரசு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் முதல் பூஜை செய்யப்பட்டது.பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

பத்ரிநாத் கோவில்

பத்ரிநாத் கோவில்

இந்த நிலையில் இன்றைய தினம் பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அலகாநந்தா நதிக் கரையின் வலது கரையில் நரநாராயணச் சிகரங்களுக்கு இடையே உள்ளது தொன்மை வாய்ந்த பத்ரிநாத் ஆலயம். திருக்கோயிலுக்குப் பின் புறம் உயர்ந்த நீலகண்ட சிகரம் காணப்படுகிறது.

பூலோக வைகுண்டம்

பூலோக வைகுண்டம்

வேத காலத்துக்கு முற்பட்ட திருத்தலம். கி.பி 8ம் நூற்றாண்டில் சங்கரரால் புதுப்பிக்கப்பட்டு தற்போது உள்ள திருக்கோயிலை கார்வால் மன்னர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டியுள்ளனர். இதற்கு பூலோக வைகுந்தம், விசால் பத்ரி என்ற பெயர்களும் உண்டு. வருடத்தில் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் இரண்டாவது வாரம் வரை திருக்கோயில் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கப்படுகிறது. நவம்பர் முதல் ஏப்ரல் உறை பனியானது கோயிலை மூடிவிடுவதால் திருக்கோயில் நடை சாத்தப்பட்டுவிடுகிறது.

 அதிகாலையில் நடைதிறப்பு

அதிகாலையில் நடைதிறப்பு

இந்த ஆண்டு பத்ரிநாத் ஆலயம் இன்று அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டது. இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தராகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், வழக்கமான வழிபாடுகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். வழிபாடுகளின் போது தனிமனித இடைவெளி போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

English summary
The portals of the holy Badrinath temple in Uttarakhand were reopened in the early morning hours of Tuesday, a day after the Kedarnath shrine in the hill state, too, reopened with strict protocols due to the ongoing Covid-19 pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X