For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவண்ணாமலை கோவிலில் 23ல் மகாதீபம் - செல்போன் கொண்டு போகாதீங்க

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபத் திருவிழா வருகிற 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 23ஆம் தேதியன்று மகாதீபத்தை முன்னிட்டு கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபத் திருவிழா வருகிற 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 23ஆம் தேதியன்று காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று துர்கையம்மன் உற்சவமும், நாளை பிடாரியம்மன் உற்சவமும், 13ஆம் தேதியன்று விநாயகர் உற்சவமும் நடைபெறுகிறது.

Ban on mobiles in Tiruvannamalai temple for Deepam festival

நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6.15 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் ஆறாம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மகா தீபத்தின்போது அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் சார்பில் வழங்கப்படும் உபயதாரர் அனுமதிச் சீட்டில் பார் கோடு வசதி இடம்பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 2,000 பேர் மலை மீது ஏறி தீப தரிசனம் செய்ய அனுமதிச் சீட்டு வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு 16 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் 400 எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். கிரிவலப் பாதை முழுவதும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். 2,650 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தீபத் திருவிழாவின்போது திருவண்ணாமலையில் ஏழு இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

English summary
There is a ban on carrying cellphones into the Arunachaleswarar temple in Tiruvannamalai for the upcoming Karthigai festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X