For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிரியை வெல்லனுமா? மந்திரசித்தி அடையவேண்டுமா? போதாயன அமாவாசையில் காளியை வணங்குங்க!

Google Oneindia Tamil News

சென்னை: நாளை 10/8/2018 வெள்ளிக்கிழமை போதாயன அமாவாசை என பஞாங்கங்களில் குறிப்பிட்டுள்ளதை முன்னிட்டு பலர் போதாயன அமாவாசையாக அனுஷ்டிக்கின்றனர். நாளை மறுநாள் சனிக்கிழமை ஆடி அமாவாசை அமைந்துள்ள நிலையில்சதுர்த்தசி திதி அன்றே அமாவாசை வரும்பட்சத்தில் அது போதாயன அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த போதாயன அமாவாசை போர் துவங்கவும், மந்திர தீக்ஷை பெற்று சித்தியடையவும் ஏற்ற நாள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

போதாயன சூத்திரம்:

போதாயன சூத்திரம்:

போதாயனர் என்று ஓர் மகரிஷி. விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புராண இதிகாஸ நூல்களில் காணப்படுகிறது. இவரது வம்சத்தைச் சேர்த்தவர்களே போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்."கோத்திரம் தெரியாவதர்களுக்கு காசியப கோத்திரம்;

ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன ஸூத்திரம்"

போதாயன ஸூத்திரம் பற்றி காஞ்சி பெரியவர் மிக உயர்வாக கூறியிருக்கிறார்

போதாயன மகரிஷி:

போதாயன மகரிஷி:

போதாயன சூத்ரம்' என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது.

போதாயன அமாவாசை:

போதாயன அமாவாசை:

போதாயனரின் சீடரே ஆபஸ்தம்ப மகரிஷி என்றுகூட சொல்வதுண்டு. இந்த போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளே போதாயன அமாவாசை என்று கூறப்படுகிறது. பொதுவாக மற்றவருக்கான அமாவாசை நாளுக்கு முதல் நாள் போதாயன அமாவாசை நிகழும். இந்த போதாயன அமாவாசை முதன் முதலாக ஏற்பட்ட சரித்திரம் மஹாபாரதத்தில் காணப்படுகிறது.

மகாபாரதத்தில் அமாவாசை:

மகாபாரதத்தில் அமாவாசை:

மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமாதானம் ஏற்படாமல் இனிமேல் யுத்தம்தான் ஒரே தீர்வு என்று தீர்மானமானவுடன் துரியோதனன் யுத்தத்தில் தனக்கே வெற்றி கிடைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டன். எந்த நாளில் போர் துவங்கினால் எனக்கு வெற்றி கிட்டுமோ அந்த நல்ல நாளை குறித்துத் தா என்று பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் கேட்டான். சகாதேவனும் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அமாவாசை திதி நாளன்று யுத்தத்தை ஆரம்பித்தால் தாங்கள் ஸைன்யங்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்று அறிவுரை சொல்கிறார்.

ஸ்ரீ க்ருஷணர் செய்த லீலை:

ஸ்ரீ க்ருஷணர் செய்த லீலை:

இதை அறிந்துகொண்ட பஞ்சபாண்டவர்கள் கவலையடைகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று இனிமேல் என்ன செய்வது? என்று கேட்க ஸ்ரீ கிருஷ்ணரும் "கவலை படாதீர்கள்! நான் பார்த்துக்கொள்கிறேன்" என அவருக்கே உரிய புன்னகையுடன் கூறிவிட்டு அமாவாசைக்கு முதல் நாளே கிருஷ்ணர் நதிக்கரையில் அமர்ந்து திதி கொடுப்பதற்குத் தயாராகிவிட்டார்.

சூரியனும் சந்திரனும்:

சூரியனும் சந்திரனும்:

திகைத்துப்போன சூரியனும், சந்திரனும் ஒன்றாக அங்கே தோன்றி, ஒரு சேர அவரிடம் கேட்டனர்:

சூரியனும் சந்திரனும் அடடா ஸ்ரீமன் நாராயனரே தவறுதலாக அமாவாசையை கணித்து விட்டார்கள் போலிருக்கிறதே நாளைதானே அமாவாசை என்ன செய்யலாம்? நாமே இவர்களிடம் நேரில் சென்று விவரத்தை சொல்லுவோமே என்று நினைத்து சூரியனும் சந்திரனும் ஸ்ரீ க்ருஷ்ண பகவானிடம்

"பகவானே! நாளை அல்லவா அமாவாசை?"

கிருஷ்ணர் எதிர்க் கேள்வி கேட்டார்: "நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தினம்தானே அமாவாசை?"

"ஆமாம்" என்று இருவரும் பதில் அளித்தனர்.

கிருஷ்ணர் புன்னகைத்தார்." இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்?"

அப்போதுதான் அவ்விருவருக்கும் அந்த மாயக் கண்ணனின் லீலை புரிந்த்து. ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை ஏற்றுக்கொண்டனர்.

 மகாபாரத வெற்றி:

மகாபாரத வெற்றி:

ஸ்ரீ க்ருஷ்ணர் அமாவாசை தர்ப்பணம் செய்வதால் இன்றுதான் அமாவாசை என்று துரியோதனன் முதலான கௌரவர்களும் அமாவாசைக்கு முதல் நாளே பித்ரு தர்ப்பணம் செய்தனர். மேலும் அன்றே அதாவது அமாவாசைக்கு முதல் நாளே மஹாபாரத யுத்தத்தை ஆரம்பித்தனர். ஆகவேதான் மஹாபாரத யுத்தத்தில் துரியோதனன் சைன்யங்களுக்கு வெற்றி கிடைக்காமல் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் அமாவாசை என்பது இரண்டு விதமாக ஆகி போதாயன அமாவாசை என்பது புதிதாக ஆரம்பமாயிற்று.

திதிகளின் வகைகளும் தன்மைகளும்:

திதிகளின் வகைகளும் தன்மைகளும்:

திதிகளின் தன்மைக்கேற்ப்ப திதிகளை ஐந்துவிதமாக பிரித்துள்ளனர் நமது முன்னோர்கள். அந்தந்த திதிகளின் தன்மைகேற்ற திதிகளில் சில காரியங்களை செய்யும்போது அவை பூரண வெற்றியளிக்கின்றன.

நந்த திதிகள் = பிரதமை, சஷ்டி, ஏகாதசி

பத்ர திதிகள் = திவிதியை, சப்தமி, துவாதசி

ஜெய திதிகள் = திருதியை, அஷ்டமி, திரியோதசி

ரிக்த திதிகள் = சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி

பூர்ண திதிகள் = பஞ்சமி, தசமி, பௌர்ணமி

நந்த திதிகள் = மகிழ்ச்சியும், களிப்பும் அளிப்பவை

பத்ர திதிகள் = அனைத்து செயல்களும் தொடங்க ஏற்றவை

ஜெய திதிகள் = எதிரிகளை வெல்ல

ரிக்த திதிகள் = தடைகளையும் துக்கத்தையும் அளிப்பவை

பூர்ண திதிகள் = அனைத்து விசயங்களையும் பூர்த்தி செய்ய ஏற்றவை

 சன்டையிட ஏற்ற சதுர்த்தசி திதி:

சன்டையிட ஏற்ற சதுர்த்தசி திதி:

ரிக்தை திதியான சதுர்த்தசி நற்காரியங்கள் செய்வதை விலக்க வேண்டிய திதி என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. காளியை அதிதேவதையாக கொண்ட சதுர்த்தசியில் ஆயுத பயிற்ச்சி, விஷ வைத்தியம், மந்திர ப்ரயோகம், மற்றும் போர் துவங்க ஏற்ற தினமாகும் என காலப்பிரகாசிகை போன்ற ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதை நன்றாக அறிந்த ஸ்ரீ க்ருஷ்ணர் சதுர்த்தசியில் போர்துவங்க வேண்டும் என்பதற்க்காகவே கபட நாடகம் ஆடியதை மகாபாரத கதைகளில் அறியமுடிகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் சதுர்த்தசி திதியில் எந்த முகூர்த்தமும் வைப்பதை தவிர்த்ததை கானும்போது " நாள் செய்வதை நல்லோர் செய்யார் " என்பதை உணர முடிகிறது.

மந்திர சித்தி தரும் மகத்தான திதி:

மந்திர சித்தி தரும் மகத்தான திதி:

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.

உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும். கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும்.

இந்த போதாயன அமாவாசை நாளில் காளி தேவியை வணங்குவது தகுந்த மூலம் மந்திர உபாசனையும் பெற்று சித்தியடைய சிறந்த வழியாகும்!


- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

English summary
BODHAYANA AMAVASYA Bodhayana is a sage who lived south to Vindhya mountains. The vamsavali of this sage will follow bhodhayana smruthi and bodhayana amavasya day. In panchangams we can see that on certain amavasya days it is specifically marked as bodhayana amavasya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X