• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

புத்த பூர்ணிமா 2019: புத்தர் அவதரித்த தினம் வட இந்தியாவில் கோலாகலம் - சிறப்பு வழிபாடு

|

டெல்லி: புத்த பூர்ணிமா திருநாள் இன்று இந்தியா மட்டுமின்றி நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பீகார் மாநிலம் புத்தகயாவிலும், உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான பௌத்த மதத்தினரும் பங்கேற்றனர்.

கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். புத்தர் பிறந்த போது அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன.

Buddha Purnima 2019: Celebrating Buddha Jayanti in India

ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார்.

தந்தையான அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.

நீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும் தெரியுமா - வைகாசி விசாகம் புராண கதை

அரண்மனையை விட்டு வெளியே சென்றார். தனது 29 வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார்.

ஆசைக்குக் காரணம் துன்பம் என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், நல்ல நம்பிக்கை, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை,நன்முயற்சி, நற்சாட்சி, நல்ல தியானம் போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர்.

கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அது முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80 வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

கௌதம புத்தர் பிறந்து 2,500 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை இன்றும் வழி நடத்துகிறது. புத்த பூர்ணிமா நாளானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை நமக்கு நினைவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாமும் அந்த மாதிரி நிலையை அடையலாம் என்று நமக்கு உணர்த்துகிறது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
According to legends, Prince Siddhartha was born at Lumbini Grove on the full moon day in May. After that, he attained enlightenment under the shade of the Bodhi Tree and became Gautama Buddha on the full moon day of May as well.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more