For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரியன் புதன் கூட்டணி - புத ஆதித்ய யோகம் என்ன கொடுக்கும் - அஸ்தங்க தோஷம் யாரை பாதிக்கும்

சூரியனும் புதனும் இணைவு பெரும் பொழுது அஸ்தமனத்தை அடைந்தாலும் பெரும் பாதிப்பைத் தருவதில்லை. மறுபுறத்தில் தகுதியான சந்தர்ப்பத்தில் புத ஆதித்ய யோகத்தை அளிக்கிறது. இந்த யோகம் அமையப்பெற்றவர்களுக்கு அறிவாற

Google Oneindia Tamil News

சென்னை: சில நேரங்களில் தோஷங்களே யோகங்களாக மாறுகின்றன. அப்படித்தான் சூரியனோடு சேர்ந்த புதன் அஸ்தங்க தோஷத்தை அடையாமல் புத ஆதித்ய யோகத்தை பெறுகிறது. நவக்கிரகங்களில் தலைமைக் கிரகமாக விளங்கும் சூரியன் மிகவும் சக்தி வாய்ந்த உஷ்ணகிரகமாகும். ஒரு மாதத்திற்கு ஒரு ராசி என ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும். சூரியன் தனக்கு அருகில் வரும் கிரகங்களின் பலத்தை குறைத்துவிடுகிறார். அதைத்தான் அக்கிரகத்தின் அஸ்தங்க காலம் என்கிறோம். சூரியனுக்கு அருகில் செல்லும் கிரகங்கள் தன்னடைய முழு பலத்தை இழக்கிறது. அதே நேரத்தில் சூரியனும் புதனும் இணைவு பெரும் பொழுது அஸ்தமனத்தை அடைந்தாலும் பெரும் பாதிப்பைத் தருவதில்லை. மறுபுறத்தில் தகுதியான சந்தர்ப்பத்தில் புத ஆதித்ய யோகத்தை அளிக்கிறது.

பொதுவாக ராகு - கேது மற்றும் சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் சூரியனுடன் நெருங்கி வரும்போதெல்லாம், அந்த கிரகம் அஸ்தங்க பெற்று, அதன் வலிமையை இழக்கிறது. ஆனால், அக்கிரகம் எவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமானது.

சூரியனுக்கு முன்பின் 12 டிகிரிக்குள் சந்திரன் வரும் போது அஸ்தங்கம் அடைந்து அமாவாசை உண்டாகிறது. சூரியனுக்கு 17 டிகிரிக்குள் செவ்வாய் வரும்போது அஸ்தங்கம் அடைகிறார். இக்காலத்தில் பிறப்பவர்களுக்கு சகோதரதோஷம், ரத்த சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள் உண்டாகிறது.

புத ஆதிபத்ய யோகம்

புத ஆதிபத்ய யோகம்

சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் வரும்போது அஸ்தங்கம் அடைகிறார். இக்காலத்தில் பிறப்பவர்களுக்கு கல்வியில் தடை, தாய் மாமனுக்கு தோஷம் உண்டாகிறது. சூரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு இணைந்தால் அஸ்தங்கம் உண்டாகிறது. இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு புத்திர தோஷம், பணப் பிரச்சினை, வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும். சூரியனும் புதனும் இணைவு பெரும் பொழுது அஸ்தமனத்தை அடைந்தாலும் பெரும் பாதிப்பைத் தருவதில்லை. மறுபுறத்தில் தகுதியான சந்தர்ப்பத்தில் புத ஆதித்ய யோகத்தை அளிக்கிறது.

புத்திரபாக்கிய பிரச்சினை

புத்திரபாக்கிய பிரச்சினை

சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமையப் பெற்றால் சுக்கிரன் அஸ்தங்கம் அடைவார். இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு பால்வினை நோய், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். கோட்சாரத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்ற காலத்தில் திருமண சுபகாரியங்களை செய்யக்கூடாது. சூரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அமையப் பெற்றால் அஸ்தங்கம் உண்டாகிறது. இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்பு, தந்தைக்கு கண்டம் உண்டாகும்.

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

எல்லா கிரகங்களையும் செயல் இழக்க வைக்கும் சூரியன் ராகுவுக்கு அருகில் வரும்போது தானே பலமிழக்கிறார். இதனால் சூரிய கிரகணம் உண்டாகிறது.
அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் தங்களின் காரகத்துவ ரீதியாக பாதிப்புகளை உண்டாக்கும் என்றாலும் ஜெனை ஜாதகத்தில் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.

யோகம் தரும் சூரியன்

யோகம் தரும் சூரியன்

சூரியன் அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் பலன்களை தான் எடுத்துக் கொண்டு. வேலையை செய்வார். சரி, இப்போது சூரியன் உங்களுக்கு லக்ன சுபராக இருக்கும் பட்சத்தில், அஸ்தங்கம் உங்களுக்கு தோஷத்தை விட யோகத்தை தந்துவிடும். ஆனால் சூரியன் உங்களுக்கு
அவயோகியாகவும், லக்ன அசுபராக வரும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு இந்த அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் தசா புக்திகளில் உங்களுக்கு சூரியன் கெடு பலன்களையே தருவார்.

சக்தி வாய்ந்த சூரியன்

சக்தி வாய்ந்த சூரியன்

ராகு - கேது மற்றும் சந்திரன் இந்த கிரகங்களை தவிர்த்து மீதமுள்ள குரு, சுக்கிரன், சனி, செவ்வாய் மற்றும் புதன் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட டிகிரியில் அஸ்தங்கம் அடைந்தாலும் என்னுடைய பார்வையில், இந்த அஸ்தங்கமானது குறைந்தபட்சம் எட்டு டிகிரிக்குள் இணையும் பொழுது, அந்த கிரகமானது தன்னுடைய வலிமை இழக்கின்றது. இன்னும் நுணுக்கமாக பார்க்கப்போனால், சூரியனுடன் இணையும் கிரகம் ஒரே டிகிரியில் இருக்கும் பட்சத்தில் முழுவதுமாக தன் வலிமையை இழக்கும்.

சூரியன் கெடுபலனை கொடுப்பாரா

சூரியன் கெடுபலனை கொடுப்பாரா

சூரியன் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பதால், 8 டிகிரி வரை இந்த தாக்கம் அதிகமாக இருக்கும். எட்டு டிகிரிக்கு மேல் சூரியனுடன் இணைந்து இருக்கும் கிரகத்திற்கு கண்டிப்பாக 65 சதவிகித பலம் கிடைத்துவிடும். பொதுவாக சூரியன் அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் பலன்களை தான் எடுத்துக் கொண்டு. வேலையை செய்வார். சரி, இப்போது சூரியன் உங்களுக்கு லக்ன சுபராக இருக்கும் பட்சத்தில், அஸ்தங்கம் உங்களுக்கு தோஷத்தை விட யோகத்தை தந்துவிடும். ஆனால் சூரியன் உங்களுக்கு அவயோகியாகவும், லக்ன அசுபராக வரும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு இந்த அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் தசா புக்திகளில் உங்களுக்கு சூரியன் கெடு பலன்களையே தருவார்.

யோகம் தரும் கூட்டணி

யோகம் தரும் கூட்டணி

மேலும் அஸ்தங்கம் பெரும் கிரஹங்கள் சுபர்களின் பார்வை பெரும் பொழுது கண்டிப்பாக நல்ல பலன்களை அளிக்கும். குறிப்பிடத்தக்க ஒரு விதிவிலக்கு, சூரியனும் புதனும் இணைவு பெரும் பொழுது அஸ்தமனத்தை அடைந்தாலும் பெரும் பாதிப்பைத் தருவதில்லை. மறுபுறத்தில் தகுதியான சந்தர்ப்பத்தில் புத ஆதித்ய யோகத்தை அளிக்கிறது. இந்த யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும். புதன், சூரியனுக்கு பின் அஸ்தங்கம் ஆகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே நல்ல பலனை அளிக்கும். வியாழன், சனி, செவ்வாய் மற்றும் சுக்ரன் போன்ற பிறகிரகங்களுடன் ஒப்பிடும்போது, சூரியனுக்கு நெருக்கமான புதன் அதன் வலிமையை இழக்காது.
மேலும் இந்த கிரகங்கள் அஸ்தங்கம் அடையும் சூழ்நிலையில், பல விதிகள் மற்றும் விதிவிலக்குகள் உள்ளன. எனவே இறுதி வலிமையைக் கணக்கிட, தீவிர மதிப்பீடு தேவையாகும்.

N.C.கிருஷ்ணன் நாயுடு வேத ஜோதிடர்
73391 40502.

English summary
Vedic astrology has such importance and prominence in our society that we have all heard about many Doshas and Yogas mentioned in this ancient science. The Budh Aditya yoga is a powerful combination of Sun and Mercury, together in the same house, which can change the destiny or modify the native's life
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X