• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

புதன்பெயர்ச்சி 2021: கடக ராசியில் சூரியனுடன் இணையும் புதன் - எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்

Google Oneindia Tamil News

சென்னை: புதன் புத்தி நாயகன் மிதுன ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரித்த புதன் இனி கடக ராசியில் சூரியனுடன் இணைந்து இன்று முதல் பயணிக்கப் போகிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி வரைக்கும் கடக ராசியில் பயணிக்கும் புத பகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படியிருக்கும் திடீர் அதிர்ஷ்டங்கள் வருமா? பாதிப்பு வந்தால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். எல்லோருக்கும் அறிவும் புத்திசாலித்தனமும் வசப்பட்டு விடாது புதனின் ஆதிக்கம் இருப்பவர்களால் மட்டுமே அறிவாற்றல் கொண்டவர்களாக திகழ முடியும்.

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.
புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புதன் கிரகம் தனது நட்பு கிரகமான சூரியனுடன் இணைந்து கடக ராசியில் சஞ்சாரம் செய்வதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்


புதன் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார்.
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உறவினா் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். பண வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவுகளும் அதிகாிக்கும். மாணவர்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராது என்று நினைத்திருந்த பணம் வீடு தேடி வரும்.

ரிஷபம்

ரிஷபம்

புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சூரியனுடன் அமர்வதால் பயணங்கள் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்வா்களுக்கு பிரச்னை ஏற்படும். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை அதிகாிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் திடீர் மருத்துவ செலவுகள் வந்து எட்டிப்பார்க்கும். புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வணங்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்வது உற்சாகமான கால கட்டமாகும். பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். துளசி மாலை அணிவித்து பெருமாளை வணங்க நன்மைகள்நடைபெறும்.

கடகம்

கடகம்

உங்கள் ராசியில் உள்ள சூரியனுடன் இணைந்து அமரும் புத பகவானால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சூரியனுடன் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். பிரச்சினைகள் தீர விட்டுக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. அப்பாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி

புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இது யோகமான காலமாகும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். திடீர் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று புளியோதரை படைத்து வழிபட்டு தானமாகக் கொடுக்கலாம்.

துலாம்

துலாம்

உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் புதன் சூரியனுடன் அமர்கிறார். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

 விருச்சிகம்

விருச்சிகம்

புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சூரியனுடன் இணைந்து அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் பல வழிகளில் பணம் வந்து கொண்டேயிருக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. தொழில் தடை ஏற்படும் முயற்சிகளில் கவனக்குறைவு ஏற்படும் என்பதால் விழிப்புணர்வு அவசியம். கோவிலுக்கு பாசிப்பருப்பு, பாசிப்பயறு தானமாக கொடுக்கலாம்.

தனுசு

தனுசு

புதன் உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் அமர்கிறார். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வரும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்கள் செய்யும் சாதனை பெருமைப்பட வைக்கும். புதன்கிழமைகளில் துளசி மாலை அணிவித்து பெருமாளை வணங்க நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

 மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சூரியனுடன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். வேலைசெய்யும் இடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். பணப்பிரச்னை தலையெடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். வீண் வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கும்பம்

கும்பம்

கடகம் ராசிக்கு 6வது வீட்டில் புதன் சூரியனுடன் பயணம் செய்கிறார். இது திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். மூத்த சகோதா்களின் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு புனித யாத்திரை செல்வது நல்லது. புதன்கிழமைகளில் பச்சைப்பயறு படைத்து புதன் பகவானை வணங்கலாம்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் தம்பதியர் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினை நீங்கும். உறவினர்கள் நண்பர்களிடத்தில் எந்த ஒரு விசயத்திலும் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் படிப்பு விசயமாக செலவு அதிகரிக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டியது அவசியம்.

English summary
Budhan Peyarchi Kadakam 2021 Mercury Transit from Mithunam to Kadaka rasi prediction. Mercury is no longer going to travel with the Sun in the cross zodiac for the first time today. Will there be any sudden fortunes for the 12 zodiac signs from Aries to Pisces if the Buddha travels in the cross zodiac until August 9th 2021 Let's see what can be done to remedy the damage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X