For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாணக்கிய நீதி : இந்த கால பாலிடிக்ஸ்க்கும் பொருத்தமாக சொல்லியிருக்காங்க பாஸ்

உங்கள் லட்சியம் என்ன என்று யாராவது கேட்டால் கூட, உங்கள் உண்மையான லட்சியத்தை வெளியே சொல்லாமல் வேறு ஒன்றை மாற்றி சொல்வது தவறு இல்லை என்று சாணக்கியர் சொல்லியிருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: சாணக்கியர் சந்திரகுப்த மௌரிய சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான ஆலோசகர் பொருளாதார மேதை, அவர் எழுதிய கௌடில்யம் என்னும் அர்த்தசாஸ்திரம் பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்றைக்கும் பலருக்கும் பயன் தரக்கூடியதாக இருக்கிறது. அவர் சொல்வது இதுதான் முள்ளை முள்ளால் எடுங்கள், வைரத்தை வைராத்தால் அறுக்க வேண்டும் என்பதுதான். சத்ரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இரு என்று சொல்வார்கள். சாணக்கியர் சிறந்த ராஜதந்திரி. சாணக்கியன் பல நீதி நூல்களுக்கும் ஆசிரியன்; அவனுக்கு விஷ்ணுகுப்தன் கௌடில்யன் என்ற பெயர்களும் உண்டு.

இன்றைக்கு சாணக்கியத்தனம் பற்றி பலர் பேசுகின்றனர். ஆனால் அன்றைக்கே சாணக்கியன் சொன்ன நீதி கருத்துக்கள் இன்றைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்கிறது. அரசியல்வாதிகள், ராஜாக்களுக்கு மட்டுமல்ல ஆபிஸ் பாலிடிக்ஸ்க்கும் அதை எப்படி சமாளிப்பது என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார் சாணக்கியர்.

அலுவலகத்தில் உங்கள் வேலைதான் பேச வேண்டும். எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும் ஏன் இந்த வேலையை செய்கிறேன்?இந்த வேலைக்கு என்ன பலன் கிடைக்கும்?இது வெற்றியடையுமா?என மூன்று கேள்விகளை கேட்டுவிட்டு தொடங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார் சாணக்கியர்.

சபரிமலை ஐயப்பனை ஆண்கள் மட்டுமல்ல எல்லா பெண்களும் தரிசிக்கலாம் எப்போ தெரியுமாசபரிமலை ஐயப்பனை ஆண்கள் மட்டுமல்ல எல்லா பெண்களும் தரிசிக்கலாம் எப்போ தெரியுமா

நல்லவனா இருப்பது ஒத்து வராது

நல்லவனா இருப்பது ஒத்து வராது

நீங்கள் எந்த இடத்தில் தெளிவாக நடந்து கொள்ள வேண்டும்,எந்த சூழலில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். விஷத் தன்மையில்லாத பாம்பு கூட தனக்கு விஷம் இருப்பதாக நடித்து எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும்.வேலையிடத்தில் உன்னுடைய மென்மையான பண்புகளையெல்லாம் மூட்டை கட்டி வை.

நேரடியாக பேசுங்கள்

நேரடியாக பேசுங்கள்

ஒரு மனிதனால் எப்போதும் நேர்மையாக இருக்க முடியாது.ஏனெனில் நேராக இருக்கும் மரங்கள்தான் முதலில் வெட்டப்படுகின்றன. எல்லா மனிதர்களையும்,சூழ்நிலைகளையும் கவனித்துக் கொண்டே இரு. அலுவலகத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ உன் அதிகாரி கூறுவதற்கு மறுப்போ,ஆதரவோ அவரிடம் நேரடியாகவே கூற வேண்டும் அதுவே உனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும். ஏன் தெரியுமா இப்போ இருக்கிற பாலிடிக்ஸ்ல கூட இருந்தே குழி பறிக்கிறவங்க நிறைய இருக்காங்க.

நல்ல நட்பு

நல்ல நட்பு

எல்லா நட்பின் பின்புலத்திலும் ஒரு சுயநலம் இருக்கும்.சுயநலம் இல்லாத நட்பு கிடையாது. அது அலுவலகமாக இருந்தாலும். அலுவலகத்தில் நண்பர்களை உருவாக்குங்கள். சிறந்த நண்பர்களை அல்ல. யாராக இருந்தாலும் எவ்வளவு உண்மையாக நல்ல நட்பாக இருந்தாலும் இடைவெளியை கடைபிடியுங்கள். காலம் யாரையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றும்.

வெளியில் சொல்லாதீங்க

வெளியில் சொல்லாதீங்க

வலது கை கொடுப்பது இடது கைக்கே தெரியக்கூடாது என்பார்கள். நாம் மற்றவர்களுக்கு செய்யும் தான தர்ம செயல்களை பற்றி அடுத்தவர்களிடம் கூறக்கூடாது. நீங்கள் செய்யும் தானத்தை வெளியில் சொன்னால் அது பிறருக்கு உதவியாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில் நீங்க நினைக்கலாம் ஆனால் அதை வெளியே சொல்லக்கூடாது. அப்படி வெளியே சொல்வதன் மூலம் நீங்கள் செய்த பயனை உங்களால் முழுமையாக அடைய முடியாது என்பதுதான் உண்மை.

கஷ்டங்கள்

கஷ்டங்கள்

உங்களுடைய ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதுவே உங்கள் அழிவுக்கு காரணமாக அமையும். நம் வீட்டில் எவ்வளவு தான் கஷ்டங்கள் இருந்தாலும் அதை நம் நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ சொல்லக்கூடாது. முடிந்தவரை நம் கஷ்ட நஷ்டங்களை நாமே சரி செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

கடவுள் காரியங்கள்

கடவுள் காரியங்கள்

வீட்டில் நாம் இறைவனுக்காக செய்யும் பூஜைகளை பற்றியும், கோவிலுக்குச் சென்று வந்த அனுபவங்களை பற்றியும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இவை கடவுள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்வுகள். இதை நம் மனதிற்குள் தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

எதிர்மறை ஆற்றல்

எதிர்மறை ஆற்றல்

நம் உடல்நிலை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாம் மற்றவர்களிடம் கூறும்போது எதிர்மறை ஆற்றல் உருவாகும் என்ற கருத்து உள்ளது. இதனால் உடல்நிலை பற்றிய ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

உண்மையான லட்சியம்

உண்மையான லட்சியம்

உங்கள் லட்சியம் என்ன என்று யாராவது கேட்டால் கூட, உங்கள் உண்மையான லட்சியத்தை வெளியே சொல்லாமல் வேறு ஒன்றை மாற்றி சொல்வது தவறு இல்லை. நாம் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி லட்சியங்களை வைத்திருப்போம். அந்த லட்சியத்தின் குறிக்கோளை நாம் அடைந்து வெற்றி பெறும் வரை அதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது.

அநாவசிய பேச்சுக்கள்

அநாவசிய பேச்சுக்கள்

நம் வீட்டிற்கு விலை உயர்ந்த பொருட்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் அதைப்பற்றி யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது. இதனால் கண்திருஷ்டி படும் இந்த கண் திருஷ்டி அவ்வளவு நல்லதே அல்ல. ஒரு பெண்ணை களங்கப்படுத்தும் வகையில் நாம் மற்றவர்களிடம் அநாவசிய பேச்சுக்களை பேசக்கூடாது. நம் குடும்ப பிரச்சனைகள் நம் வீட்டின் படியை விட்டு தாண்டி வெளியே போகக்கூடாது.

English summary
Chanakya Niti 10 tips to select the right people in life. A man is a If a goal does not exist, there is no ambition to move ahead or grow in life. Chanakya dedicated his life to forming the Maurya Empire and guiding its pioneer Chandragupta Maurya and his son, Bindusara. He was the royal advisor, economist and philosopher during their reign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X