• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புணர்ப்பு தோஷம் போக்கி விரைவில் திருமணம் நடக்கனுமா? சனிக்கிழமையில் சந்திரதரிசனம் பாருங்க!

|

சென்னை: சனிக்கிழமை (14/07/2018) பஞ்சாங்கத்தில் ஆனி மாதத்தின் சந்திர தரிசன நாளாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். இந்த மூன்றாம் பிறையை பார்க்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை:

ஒவ்வொரு மாதமும் சந்திர தரிசனம் வரத்தானே செய்கிறது? அதில் என்ன சிறப்பு இருக்க போகிறது என சிலர் மனதில் சந்தேகம் எழலாம். சந்திரனும் பிறையும் இந்துக்கள் மட்டுமல்லாது அனேக மதங்களில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. இந்துக்கள் பஞ்சாங்கங்களில் இன்று சந்திர தரிசனம் என குறிப்பிட்டுள்ள நிலையில் நேற்று பிறை தெரியாததால் ஒரு அரசு விடுமுறையே மாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டதில் இருந்தே சந்திர தரிசனம் அனைவருக்கும் எவ்வளவு முக்கியம் என தெரிந்துக்கொள்ள முடியும்.

chandra darshan is the first day of moon sighting after no moon day 13-07

மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும் சொல்வதென்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொண்டுள்ளன.அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்.

சந்திர தரிசனம்:

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

chandra darshan is the first day of moon sighting after no moon day 13-07

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை , பார்த்தால் முக்தி என சொல்லப்படுகிறது. "சந்த்ரமா மனஸோ ஜாத:" என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது. யாராவது அறிவீனமான செயல்களை செய்துவிட்டால் "மதி கெட்டவனே" என திட்டுவதை காணலாம். இதிலிருந்து ஒருவர் புத்திசாலியாக இருக்க சந்திரன் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம்.

சந்திர தரிசனம் தோன்றிய கதை:

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் .

தக்ஷணோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், 'மூன்றாம் பிறையாக' அமரும் பேறுபெற்றார்.

chandra darshan is the first day of moon sighting after no moon day 13-07

சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.

ஜோதிடத்தில் சந்திர தரிசனம்:

சந்திரன் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் வளர்பிறையாக உருவெடுக்கின்றான். இந்த நாளை சந்திர தரிசனம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்திர தரிசனம் பற்றி இந்து சாஸ்திரம் சொல்வதைப் பார்ப்போம். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் "ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!" அல்லது "ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி" என்ற இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எக்காலதிலும் மன வியாதிகளோ, அறிவு மயக்க நிலையோ வராது.

chandra darshan is the first day of moon sighting after no moon day 13-07

மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு,வெட்டி போடும் குட்டி நகம் போல் அழகாகவும்,பிரகாசமாக இருக்கும். இந்த மூனறாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து தரிஸிக்கும் படியாக இருக்கும். மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.

ஆனி மாத சந்திர தரிசனத்தில் அப்படி என்னத்தான் சிறப்பு இருக்கிறது?

தேவர்களின் பகல் பொழுதான உத்திராயணத்தின் கடைசி ஜாமமான ஆனி மாதம் முடிவடையும் நிலையில் நிலையில் சூரியன் மிதுன ராசியிலும் அமாவாசை முடிந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சந்திரன் சூரியனை கடந்து தனது சுய வீடான கடக ராசியிலும் பிரவேசித்து இருக்கிறார். இந்த மாததில் இது இரண்டாவது முறை சூரிய சந்திர சேர்க்கை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிதுன ராசியை உபய ராசி என்றும் ஆண்-பெண் எனும் இரட்டை தன்மை கொண்ட ராசியாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய சிறப்பை கொண்ட மாதத்தில் இரண்டுமுறை சூரிய-சந்திர (ஆண்-பெண்) இணைவு ஏற்படுவது என்பது சிறப்பல்லவா?

தோடு டையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்

காடு டையசுட லைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன்

ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த

பீடு டைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

எனும் திருஞான சம்பந்தர் பாடிய பதிகத்தை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது அன்றோ? அது மட்டுமா? இந்த ஆனி மாத பிறைதானே துலாத்தில் நிற்க்கும் குருபகவானின் ஒன்பதாம் பார்வையையும் பெறுகிறது! குருவின் ஒன்பதாம் பார்வை என்பது விசேஷமான பார்வை என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சனி-சந்திர சேர்க்கை தரும் புணர்ப்பு தோஷம்:

இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவை புணர்ப்பு தோஷம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

புணர்ப்பு தோஷம் என்ன செய்யும்?

புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவது இல்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்கையை அனுபவிக்க நேருகிறது. மேலும் பலருடன் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படுத்துகிறது. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும்.

புணர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

சனி-சந்திர சேர்க்கையால் பிரச்சனை மட்டும்தானா?

புணர்ப்பு தோஷம் எல்லோருக்குமே இல்லற வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறதா என்றால் இல்லை என அடித்து கூறலாம். திருமண தடைக்கான அமைப்பு மற்றும் களத்திர தோஷம் போன்றவை இருந்து அதோடு புணர்ப்பு தோஷமும் இருந்தால் சிறிது பிரச்சனை ஏற்படும். என்றாலும் மெதுவாக செல்லும் கிரஹமான சனிக்கு பின் வேகமாக செல்லும் சந்திரன் நின்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் அது இதசல யோக அமைப்பை பெற்று நன்மையை அளித்திடும்.

சந்திர தரிசனத்தால் ஏற்படும் நன்மைகள்:

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். .

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது. அதிலும் ஆயுள் காரகரான சனி பகவானின் நாளில் சந்திர தரிசனம் செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படுவதோடு புணர்ப்பு தோஷம் போக்கும்.

இந்த ஆனி மாத சந்திர தரிசனத்தின் காரகரான சந்திரன் சூரியனோடு இணைந்து கோசாரக சனியின் ஏழாம் பார்வையும் கோசாரக குருவின் ஒன்பதாம் பார்வையும் பெற்று புணர்ப்பு தோஷம் நீங்கி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்றுல்லதால் இந்த சந்திர தரிசனம் சனி-சந்திர சேர்க்கையால் ஏற்படும் புணர்ப்பு தோஷம் நீங்கி வாழ்வில் செழிப்பு ஏற்படும் என்பது நிதர்சனம்.

தேவர்களின் இரவு பொழுதின் கடைசி ஜாமமான மார்கழியை போன்றே அவர்களின் பகல் பொழுதின் கடைசி ஜாமம் மற்றும் கோதூளி லக்ன காலமான ஆனி மாதமும் ஆன்மீகத்திற்க்கு சிறந்த மாதம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த ஆனி மாதத்தில் மூன்றாம் பிறைச்சந்திரனை தரிஸிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும். மேலும் இந்த ஆனி மாத சந்திர தரிசனத்தை காண்பர்களுக்கு ஆன்மீக சித்தி ஏற்படும் என்பதும் நிதர்சனம்.

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chandra Darshan is the observance of sighting the moon after the first day of 'Amavasya' The first day after Amavasya is celebrated as Chandra Darshan in the honour of the Moon God. In Hindu mythology, Chandra Dev or the Hindu Lord of Moon is considered to be one of the most revered deities. The most favourable time for sighting the moon is just after sunset. It is believed to be very propitious to sight the moon just after the Amavasya.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more