
இன்று சந்திர தரிசனம் : மாலையில் சந்திரனை தரிசிக்க மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்
சென்னை: உளவியல் ரீதியாக பண அழுத்தமே மனக்குழப்பத்தத்திற்கு காரணமாகிறது. கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும் இந்த மன குழுப்பம், ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையான பல்வேறு நோய்களை மனிதனுக்கு தருகிறது. மூன்றாம்பிறைச் சந்திரனை தரிசனம் செய்ய நமக்கு ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் இன்றைய தினம் இரவு 7 மணி 22 நிமிடம் முதல் 8 மணி 35 நிமிடம் வரை சந்திரனை தரிசனம் செய்தால் மனக்குழப்பம் நீங்கும்.

ஒருவரின் எண்ணங்கள் ஈடேறும் போது, அவர்கள் அடையும் சந்தோஷம், மன நிம்மதிக்கு அளவே கிடையாது. நிறைவேறாத எண்ணங்கள் கனவாக, கானல் நீராக ஆழ்மனதில் பதிந்து விடும். மன வலிமை உள்ளவர்கள், நிறைவேறாத எண்ணங்களை கனவாக நினைத்து மறந்துவிட்டு, அடுத்த முயற்சியை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள்.
மன வலிமை குறைந்தவர்கள் தனிமையில் யோசித்து, தன் மனதை தானே கெடுத்துக்கொண்டு உடன் இருப்பவர்களையும் காயப்படுத்தி விடுகிறார்கள். உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என யோசித்து ஆனந்தத்தையும், நேரத்தையும், ஆற்றலையும் தொலைத்து சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை மறந்து மனக்குழப்பத்தை வரவழைப்பவர்கள் மிகுதியாக இருக்கிறார்கள்.

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

மனக்குழப்பம் ஏற்பட ஜோதிட ரீதியாக சில காரணங்கள் உள்ளன:
ஜனன ஜாதகத்தில் லக்னம், 3ஆம் இடம், சந்திரன், சூரியன் ஆகியவை நல்ல நிலையில் இருந்தால் ஜாதகரின் எண்ணங்கள் 100 சதவிகிதம் பலிக்கும். நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை படைத்தவராக அந்த ஜாதகர் இருப்பார். அவருடைய எண்ணங்களும் வலிமை கொண்டதாக இருக்கும்.
ஒருவரின் ஆழ்ந்த சிந்தனை, ஆழ்மனதை குறிக்கும் கிரகம், 5ஆம் அதிபதியான சூரியன். அப்படிப்பட்ட சூரியன், ராகு - கேது மற்றும் சனியுடன் இணைந்திருந்தாலோ, சூரியன் நீச்சம் பெற்றிருந்தாலோ, 6,8,12-ல் சூரியன் மறைந்தவர்கள், அஷ்டம, பாதக அதிபதியோடு சூரியன் சம்பந்தம் பெற்றவர்கள் மனவிரக்தியை அதிகம் சந்திக்கிறார்கள்.
மூன்றாம் இடத்தில் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய் இருந்தால், அந்த நபர் மன தைரியம் கொண்டவராக இருப்பார். சுப கிரகங்கள் ஆதிக்கம் மிகுதியாக இருந்தால் சிறிய விஷயத்திற்கு கூட அதிகமாக யோசித்து பெரியதாக மனக்குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் வலிமை குறைந்தால் மனரீதியான பாதிப்பு மிகும். லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ 8ஆல் சந்திரன் மறைந்தால் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சந்திரனுடன் சனி, ராகு - கேது இணைந்திருந்தாலோ, அஷ்டமாதிபதி, பாதகாதிபதியுடன் சந்திரன் சம்பந்தம் பெற்றிருந்தாலோ கடுமையான மன உளைச்சல் ஏற்படும். சனி - சந்திரன் சேர்க்கை, சனியும் சந்திரனும் சப்தம பார்வை, பாகை முறையில் சனி- சந்திரன் நெருக்கம் ஆகியவை முதன்மையான மனக்குழப்ப கிரக அமைப்பாகும்.

ராசியின் அடிப்படையில் பார்க்கும் போது மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகாரர்களுக்கு சந்திரனால் மனரீதியான பாதிப்புகள் இருக்கும். நட்சத்திர ரீதியாகப் பார்க்கும் போது சனி, புதன், ராகு, கேது ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மன அழுத்தம் மிகுதியாக இருக்கும். குறிப்பாக சனி, புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு மிகுதியாக இருக்கும். புதன், சந்திரன், சனி நீச்சம் அடைந்தாலும் கடுமையான மனக் குழப்பம் ஏற்படும்.
மக்கள் மன்றத்தினருடன் ரஜினி சந்திப்பு ஏன்?.. போயஸ் கார்டனில் தமிழருவியார்?.. பரபரப்பில் ரசிகர்கள்
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைந்து, ஐந்தாம் அதிபதியுடன் சேர்ந்து இருந்தால் மனக்குழப்பமும், கோழை மனதாகவும் இருப்பார்கள். அதே போல பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான ஐந்தாம் அதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைந்து மூன்றாம் அதிபதியுடன் சேர்ந்திருந்தால் எவ்வளவு தைரியமானவராக இருந்தாலும், தான் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்குமா? என்ற மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.
கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போது அல்லது ராகு-கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும்போது மனரீதியான பாதிப்பு நிச்சயம் உண்டு. கோட்சார ராகு, கேது, சனி சந்திரனுடன் சம்பந்தம் பெறும் போதும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம ராகு -கேது, ஆகிய காலகட்டங்களில் மனோரீதியான பாதிப்பு அதிகம் உருவாகும்.
லக்னத்தில் சனி, ராகு, கேது, அஷ்டமாதிபதி இருந்தாலோ அல்லது பார்வை சேர்க்கை பெற்றாலோ அல்லது லக்னாதி பதியுடன் சனி, ராகு, கேது இணைந்தாலோ அல்லது 6,8,12-ம் அதிபதியுடன் அமர்ந்தாலும் மன ரீதியான பாதிப்பு ஏற்படும். ஜனன கால ஜாதகத்தில் அதிக வக்ர கிரகம் இருந்தாலும், மன அழுத்தம் உண்டாகும்.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
உளவியல் ரீதியாக பண அழுத்தமே மனக்குழப்பத்தத்திற்கு காரணமாகிறது. கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும் இந்த மன குழுப்பம், ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையான பல்வேறு நோய்களை மனிதனுக்கு தருகிறது. மூன்றாம்பிறைச் சந்திரனை தரிசனம் செய்ய நமக்கு ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் இன்றைய தினம் இரவு 7 மணி 22 நிமிடம் முதல் 8 மணி 35 நிமிடம் வரை சந்திரனை தரிசனம் செய்தால் மனக்குழப்பம் நீங்கும். பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும். திருப்பதி ஏழுமலையானை திங்கட்கிழமைகளில் வழிபட மன குழப்பம் நீங்கும்.